Skip to main content

Posts

Showing posts with the label அனுபவ

Sri Maran’s Dog Swami மற்றும் ஸ்ரீலக்ஷ்மீநாராயண ராமாநுஜ தாஸர் ஸ்வாமி

Sri Maran’s Dog Swami மற்றும் ஸ்ரீலக்ஷ்மீநாராயண ராமாநுஜ தாஸர் ஸ்வாமி  இந்தத் தலைப்பு உங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும்.  (1) சுமார் 20 வருடங்களுக்கு முன் கிட்டத்தட்ட ஸ்ரீ வைஷ்ணவக் கிரந்தங்கள் முழுவதும் ஒரு மகானுபாவர் டிஜிட்டல் முறையில் பதிவேற்றி ஒரு புரட்சியைச் செய்தார். தான் நம்மாழ்வார் என்ற மாறனின் அடிபணிந்த நாய் என்று பெயருடன் உலாவி வந்தார். மொத்த ஸ்ரீ வைஷ்ணவக் கிரந்தங்களையும் ஸ்ரீரங்கத்திலோ வேறு எங்கோ விலைக்கு வாங்கி கப்பலில் அனுப்பி, இரவு பகல் பாராது ஸ்கேன் செய்து காபிரைட் பற்றி எல்லாம் கவலைப் படாமல் அதைப் பதிவேற்றிக்கொண்டு இருந்தார். அவர் ஸ்கேன் செய்த புத்தகத்தில் ”Released by Maran’s Dog ,Toronto, Canada” என்று இருக்கும் அதனால் அவர் கனடா நாட்டிலிருந்து செயல்பட்டார் என்று தெரிந்தது. அவர் யார் என்ன செய்கிறார் அவருடைய உண்மையான பெயர் என்று எதுவும் தெரியாது. சில காலம் கழித்து அவர் நடத்திய maransdog.com மறைந்து போனது.  அவர் எங்கே என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். பிறகு மறந்து போனோம். சுஜாதா ஒருமுறை டிஜிட்டல் புத்தகங்களுக்குத் தீர்க்காயுசு என்று எழுதினார். இன்று ...

ராமாயணத்தில் ரகசியங்கள் - ஒரு உபன்யாச அனுபவம்.

ராமாயணத்தில் ரகசியங்கள் - ஒரு உபன்யாச அனுபவம். ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் ‘ராமாயணத்தில் ரகசியங்கள்’ (Secrets of Ramayana) என்று தொடர் சொற்பொழிவை பெங்களூருவில் பல பகுதிகளில் ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். நேற்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் அன்று கடைசி சொற்பொழிவைக் கேட்கச் சென்றிருந்தேன். ராமாயணத்தில் சரணாகதி என்ற தலைப்பில் சரணாகதிகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு சென்ற போது பத்துக்கு மேல் எண்ணுவதை விட்டுவிட்டு கடைசியில் விபீஷண சரணாகதியில் முடித்தார். வைணவத்தில் முதுகலை (எம்.ஏ) படிப்பு உள்ளது. அதைப் படிப்பவர்கள் பெரும்பாலும் ரிடையர் ஆன/ஆகப் போகிறவர்கள். இன்றைய 'பைத்தான்’ இளைஞர்கள், பரமாத்மா பக்கம் வருவார்களா என்ற சந்தேகம் (கலந்த கவலை ) என்னைப் போலவே உங்களுக்கும் இருக்கலாம். ஆனால் நேற்று துஷ்யந்த அவர்களின் உபயனாசத்தை கேட்ட போது அவரை சுற்றி கல்லூரி படிக்கும் இளைஞர் பட்டாளம் கையில் பேப்பரும் பேனாவுமாக அவரை சுற்றிக் குழுமியிருந்தது, உற்சாகமாக ரசித்துக் கேட்டு நோட்ஸ் எடுத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம் சோர்வில்லாமல் அனுபவித்தார்கள். நிச்சயம் நம் இளைய சமுதாயம் வருவார்கள் என்று நம்பிக்கை துள...

ராமனைக் கற்போம்

ராமனைக் கற்போம் நேற்று ஒருவர் என்னிடம் நான் பணிபுரியும் இடத்தில் பொறாமை குடிகொண்டுள்ளது இவர்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை உங்களிடம் ஏதாவது தீர்வு இருக்கிறதா என்று கேட்டார். எனக்குள் பொறாமை இருக்க நான் எப்படித் தீர்வு கொடுக்க முடியும் என்று நினைத்தவாறே ’இராமபிரானை கற்போம்’ என்ற புத்தகத்தை அன்று இரவு திறந்தேன். அதில் ஸ்ரீமத் ஆண்டவன் பொறாமை குறித்து விவரித்திருந்தார்( நிஜமாகவே!). ”கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?” என்ற ஆழ்வார் திருவாக்கு உங்களுக்குத் தெரிந்திருக்கும். இங்கே ஆழ்வார் ”கற்பவர்கள் ஸ்ரீராமனை தவிர வேறு யாரையாவது கற்பரோ ? என்கிறார். இதில் இரண்டு வார்த்தைகளை ஒளிந்துகொண்டு இருக்கிறது. அதைச் சேர்க்க வேண்டும். முதலில் பிரான் - ’பிரான்’ என்றால் ’பெருங்கருணை’ என்று ஒரு பொருள். இப்போது ”கற்பவர்கள் பெருங்கருணை கொண்ட ஸ்ரீராமனை தவிர வேறு யாரையாவது கற்பரோ ?” அடுத்த வார்த்தை ’குணக்கடலான’ என்பது. இது ஸ்ரீராமர் என்ற வார்த்தையிலேயே ஒளிந்துகொண்டிருக்கிறது. அதையும் சேர்த்தால் ‘”கற்பவர்கள் பெருங்கருணை கொண்ட குணக்கடலான ஸ்ரீராமனை தவிர வேறு யாரையாவது கற்பரோ ?” உங்களுக்கு எல்ல...

பசுக்களின் வாத்சல்யம்

பசுக்களின் வாத்சல்யம்  வாத்சல்யம் என்ற சொல்லுக்குக் கூகுள் கூறும் பதில் இது - “வாத்சல்யம் என்றோர் சமஸ்கிருதச் சொல் உண்டு. மனதிற்குள் உச்சரித்தாலும் காதுகளுக்குள் இனிமையாக ஒலிக்கக் கூடிய பிரியமான சொல் அது. வாத்சல்யம் என்றால் அன்பு என்று நேரடியாகப் பொருள் கூற முடியாதபடி, அன்பு, அக்கறை, வாஞ்சை, மிகப்பிரியம், குற்றம் காணாத் தன்மை எனப் பல்வேறு அர்த்தங்களில் தொனிக்கும் அடர்த்தியான அதே சமயம் மிக மிருதுவான சொல்லாக விளங்குவது” ஆங்கிலத்தில் “Parental Love” என்று சொல்லலாம். இவை எல்லாம் கஷ்டம் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள படத்தைப் பார்க்கலாம். அடியேனின் ஆசாரியனான ஸ்ரீ அஹோபில மடம் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் கன்றுக்குட்டியுடன் ‘வாத்சல்யத்துடன்’  இருக்கும் காட்சி. இதே போலக் கன்றுக்குட்டியுடன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள் படம் ஒன்றும், ஸ்ரீமத் பறவாக்கோட்டை ஆண்டவன் ,  ஸ்ரீமத் பவுண்டரிகபுரம் ஆண்டவன் ஸ்வாமிகளுடன்  படங்களையும் பார்த்திருப்பீர்கள்.  இன்று நம் பாரதப் பிரதமர் மோதி  இல்லத்தில் உள்ள புதிதாக ஈன்ற கன்றுகுட்டிக்கு அவர்  'தீப்ஜோதி' என்று பெயர் வைத்து...

சந்திரயான் - கோல் முதல் கோள் வரை..

சந்திரயான் - கோல் முதல் கோள் வரை.. ’ஃபஸ்ட் சிங்கிள்’ போன்ற மிகைப்படுத்தல் எதுவும் இல்லாமல் சந்திரயான் பிரபலமாகிவிட்டது. மென்மையான தரையிறக்கம் (ஃசாப்ட் லேண்டிங்) செய்யும் அந்த தருணத்தை நேற்று இந்தியா முழுவதும் கடைசி பந்து சிக்ஸர் போன்று பார்த்து பரவசப் பட்டார்கள். இதுவே ஒரு சாதனையாக சொல்லலாம். சந்திரயான்  ஏதோ ‘ராக்கெட்’ சமாசாரம் என்று பலர் நினைக்கலாம் ஆனால் அதற்கும் மேலே.   இன்னும் இரண்டே கிமீ தூரம் இருக்க சந்திரயான்-2  ‘சாஃப்ட் லேண்டிங்’ செய்ய முடியாமல் தொப் என்று கீழே விழுந்த போது பையன் நல்லா தான் படிச்சான், பரீட்சையில் மார்க் வாங்கவில்லை போன்ற மனோநிலைக்குச் சென்றோம். ஆனாலும், விண்வெளியை நாசா போன்ற பணக்கார நாடுகள் குத்தகைக்கு எடுத்துள்ளது என்பதை அந்த ஒரே இரவில் இந்தியா மாற்றியது.  சில அடிப்படையைப் புரிந்துகொண்டால் சந்திரயானை நன்கு அனுபவிக்கலாம். இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.    விண்வெளி என்பது பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் பரவசமூட்டும் ஒரு சொல்லாக இருக்கிறது. புவி தனது அச்சிலே சுற்றிக்கொண்டு கதிரவனையும் சுற்றும் ஒரு கோளம் என்று ஆர்யபட்டா பொ...

கல் சொல்லும் கதை

கல் சொல்லும் கதை கோயில் என்றால் அது திருவரங்கம் தான். இன்றும் நாராயணா என்று சொல்லுவதைக் காட்டிலும், திருவரங்கம் என்றால் மனதில் ஒரு கிளர்ச்சி ஏற்படுகிறது. அடுக்குமாடிக்குடியிருப்பு வாங்கும் போது சின்ன அளவில் ’மினியேச்சர் மாடல்’ ஒன்று வைத்திருப்பார்கள். குட்டியாக பார்க்க அழகாக இருக்கும். திருவரங்கம் வைகுண்டத்தின் மினியேச்சர் மாதிரி. அதனால் தான் பூலோக வைகுண்டம் என்கிறோம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அனைத்து உலகங்கள் உய்யச்* செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்* மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா* கருவிலே திரு இலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே. அதாவது ஸ்ரீராமருக்கு ஏற்ற இடம் திருவரங்கம் ‘பெரிய’ கோயில். திருவரங்கம் என்று சொல்லவில்லை என்றால் நீங்க பிறந்ததே வேஸ்ட் என்று சொல்லிவிட்டார். திருவரங்கம் என்ற சொல் எப்படி நம் மனதை வசீகரிக்குமோ அதைவிட வசீகரிப்பவர் நம்பெருமாள். அந்த நம்பெருமாளை அரையர் ”மந்தாரம் கண்டால் மறையும் பெருமாள்” என்பார். அதாவது நம்பெருமாள் புறப்பாட்டின் போது ’மப்பும் மந்தாரமாக’ மழை வருவது மாதிரி இருந்தால் உடனே நம்பெருமாள் கோ...