ஸ்ரீ ஸ்ரீமதே ராமானுஜாய நம: திவ்யப் பிரபந்தமும், அநுபந்தமும் - அறிவிப்பு கடந்த ஆண்டு ( 2022 ) ’ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகம்’ ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை வெளியீடாக வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு கோவிட் இரண்டாம் அலையின் போது எந்த பிரச்சனையும் இல்லாமல் பலருக்கு அனுப்பப்பட்டது. ஆழ்வார்கள், ஆசாரியர்கள், தாயார், பெருமாள் அனுக்கிரஹத்துடன் எந்த தடங்கலும் இல்லாமல் சென்றடைந்தது. கூடிய விரைவில் இரண்டாம் பதிப்பு பிரபந்தம் கூடவே அநுபந்தத்துடன் வரவிருக்கிறது என்பதை இந்தப் பங்குனி உத்திரம் நன்னாளில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ‘திவ்யம்’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘divine’ என்று அர்த்தம் கொள்ளலாம். தமிழில் தெய்வத்தன்மை. ஆழ்வார்களை நாம் திவ்யசூரிகள் என்று அழைக்கிறோம். அவர்களுடைய கதைகளை திவ்யசூரி சரித்திரம் என்கிறோம். பாடிய பாசுரங்களை ‘திவ்ய’ பிரபந்தம் என்கிறோம். ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தேசங்களை திவ்ய தேசம் என்கிறோம். நன்றாக...