Skip to main content

Posts

Showing posts with the label கூடு

லைப் ஆப் பை & எஸ்.ராஜம்

சக்கரை வள்ளி கிழங்கு பற்றி முன்பு எழுதியிருந்தேன். சில மாதங்கள் முன் திருச்சியில் வாங்கிய 'பிடி கருணைக் கிழங்கு' இரண்டை எடுத்து பால்கனி தொட்டியில் மண்ணில் புதைத்தேன். சக்கரை வள்ளி கிழங்கு மாதிரி கொடி வளரும் என்று நினைத்தேன் ஆனால் ரொம்ப வித்தியாசமாக ஒரு செடி வளர்ந்தது. அதை விவரிக்க முடியாது அதனால் அதன் படம் இங்கே. கருணைக் கிழங்கு நிறைய விதங்கள் இருக்கிறது. 'பிடி' என்று ஏன் பெயர் வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. பிடி கருணைக் கிழங்கு பற்றி இணையத்தில் தேடினால் கிடைப்பது அதை வைத்து எப்படி மசியல் செய்யலாம் என்பது தான்.

புலிநகக் கொன்றை

இந்த வாரம் கூடு இதழில் எழுதியது. 

அத்திப் பழமும் ஆதாம் ஏவாளும்

வீட்டுப்பக்கம் பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. நடைப்பயிற்சியின் போது அதிலிருந்து விழும் பழங்களை எடுத்து உடைத்துப் பார்த்தால் உள்ளே கருப்பாக சின்ன பூச்சிகள் இருக்கும். பறித்து உடைத்தாலும் இருக்கும். அத்திப்பழம் பற்றி இந்த வருடம் ஆரம்பத்தில் படித்த போது விடை கிடைத்தது. 'அத்தி பூத்தாற்போல்' என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கலாம். என் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில் அத்தி மரத்தில் எப்போதும் காய்கள் இருப்பதை பார்த்திருக்கிறேன். சென்னை தி.நகர் பாலாஜி பவன் பின் புறம் இதே போல ஒரு அத்தி மரத்தைப் பார்த்திருக்கிறேன். முன்பு நாட்டு மருந்துக்கடையில் மட்டுமே கிடைத்துக்கொண்டு இருந்த அத்திப்பழம் இப்போது எல்லா கடைகளிலும் ஆஞ்சநேயர் வடைமாலை மாதிரி பதப்படுத்தப்பட்ட 'அஞ்சீர்' என்று கிடைக்கிறது (அஞ்சீர் என்றால் 'தேன் அத்தி' என்று பொருள்.). எழுநூறுக்கும் மேற்பட்ட அத்தி மரங்கள் இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. அத்திப் பூ என்பது நூற்றுக்கணக்கான பூக்கள் அடங்கிய பூங்கொத்து, இதழ்கள் மூடப்பட்...

கையெழுத்தே தலைஎழுத்து

கோடை விடுமுறையில் தமிழ் ஆசிரியர் எங்களில் சிலரை கூப்பிட்டு ஊமத்தங்காயை எடுத்து வரச் சொல்லி, கரியோடு அதை அரைத்து கரும் பலகையில் தேய்த்து புதுசாக பாலிஷ் போடச் சொல்லுவார். வீட்டுக்கு பக்கத்தில் முளைத்திருக்கும் இந்த செடியை 'விஷச் செடி' என்று பாட்டி எச்சரித்திருக்கிறாள். இதன் காய் முள்ளம்பன்றி போல இருப்பதால் ஆங்கிலத்தில் இதன் பெயர் Thorn apple. பூர்வீகம் கிழக்கு இந்தியா என்கிறார்கள். சிலர் அமெரிக்கா என்கிறார்கள். உன்மத்தம் என்றால் வடமொழியில் சித்தபிரமை என்று அர்த்தம் அதுவே நாளடைவில் ஊமத்தம் என்றாகியிருக்கிறது. பழைய காலத்தில் 'நான் கடவுள்' மாதிரி ஆட்கள் இதை உட்கொண்டு 'ஒரு மாதிரி' இருந்தார்கள் என்று தெரிகிறது. Johann jakob von tschudi தன் பயணக் குறிப்பில் இந்தியாவில் ஒருவர் இதை உட்கொண்டதை இவ்வாறு எழுதியிருக்கார். ...

மல்லையா மருத்துவமனையின் முரண்

ஷூ ஃபிளவர் என்ற செம்பருத்தியை ஷூவில் தேய்த்தால் பளபளவென்று ஆகும் என்று சின்ன வயதில் நம்பி தேய்த்திருக்கிறேன். அதில் உள்ள ஈரத்துக்கு கொஞ்சம் நேரம் ஷூ பளபளக்கும். மாமியார் வீட்டில், முடிகொட்டாமல் இருக்க இந்தப் பூவை வெய்யிலில் காய வைத்து சீயக்காயுடன் அரைக்க உபயோகப்படுத்துவார்கள். ஒரு சமயம் இந்தப் பூவைச் சாப்பிட்டு பார்த்திருக்கிறேன்; கொழகொழவென்று இருக்கும். ஆர்கானிக் டீ செய்கிறார்கள். சாமிக்குப் போடுகிறார்கள். தலையில் மட்டும் யாரும் வைத்துக்கொள்ளுவதில்லை!. செம்பருத்தி, சிவப்பு நிறத்தில் பார்த்திருக்கிறோம், பெங்களூரில் பல வண்ணங்களில் பூக்கிறது- ஆரஞ்ச், பிங்க், வெள்ளை, மஞ்சள்... ஒரே வண்ணமாகவும், இரண்டு வண்ணமாகக் கலந்தும்கூட இருக்கும். எந்த வண்ணமாக இருந்தாலும் எண்ணி 5 இதழ்கள்தான் இருக்கும். (படத்தில் இருப்பது எங்கள் வீட்டு பால்கனி செம்பருத்தி!, பெங்களூருக்கு ஏற்றார் பொல மஞ்சள், சிகப்பு !)

தலையில் தேங்காய் விழாது...

திருச்சியில் எங்கள் வீட்டு சமையல் அறை பக்கம் இருக்கும் அறைக்கு பெயர் 'இருட்டு ரூம்'. லைட் போட்டாலும் அந்த அறை இருட்டாக தான் இருக்கும். ஒட்டடை படிந்த அந்த ரூமில் அரிசி, பருப்பு என்று எல்லா மளிகை சாமான்களும் இருக்கும். விட்டலாச்சாரியார் பார்த்திருந்தால் நிச்சயம் வாடகைக்கு கேட்டிருப்பார். நாங்கள் குறும்பு செய்தால் அப்பா அந்த ரூமில் போட்டுவிடுவேன் என்று பயம் காமிப்பார். சில சமயம் போடவும் செய்வார். அந்த அறைக்கு போனால் கிடைக்கும் ஒரே சந்தோஷம் அங்கே இருக்கும் வெல்லம், சக்கரை போன்றவற்றை சாப்பிடலாம். ஒரு முறை அந்த ரூமில் போட்ட போது அங்கே இருந்த ஒரு தேங்காய் முளைவிட்டிருந்ததை பார்க்க முடிந்தது. ஆச்சரியமாக இருந்தது. வீட்டு புழக்கடைத் தோட்டத்தில் அதை புதைத்து தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தேன். சில வருஷம் கழித்து என் உசரத்துக்கு வந்தது. இன்னும் சில வருஷத்தில் 90 அடி உயரத்துக்கு வளர்ந்து காய் எல்லாம் காய்க்கும் என்று நம்பிக்கொண்டு இருந்த போது, நாங்கள் இருந்த வாடகை வீடு விற்கப்பட்டு பிளாட் கட்ட பட்டது. நான் வைத்த தென்னை மரம் இந்த இடத்தில் இருந்தது என்று கூட கண்டுபிடிக்க கஷ்டப்பட்டேன். ...

என்னே இந்த சமூகத்தின் கொடுமை!

திருச்சியில் என் அறைக்கு எதிரில் குடை மாதிரி மரம் ஒன்று என்னை வருடம் முழுக்க பார்த்துக்கொண்டு இருக்கும். முழுவதும் பச்சையாக இலைகளுடன், முருங்கைக்காய் போன்ற காய்களுடன். சில மாதங்களில் மரம் முழுவதும் மொட்டுவிட்டு ஒரு நாள் இலைகளே இல்லாமல் முழுவதும் திராட்சை கொத்து போன்ற மஞ்சள் பூக்களுடன்... ஒரு வாரத்தில் உன்னால் முடியும் தம்பி படத்தில் பூக்கள் உதிர்வது போல உதிர்ந்து கீழே இருக்கும் பெரிய கற்களுக்கு ஸ்டென்ஸில் போட்டுவிடும். பிறகு முழு மரமும் மொட்டையாகி திரும்ப இலைகள் வரும். படிக்கும் காலத்தில் அந்த மரத்தின் பெயர் தெரியவில்லை. ஒரு முறை ஒரு கோயில் அர்ச்சகர் சைக்கிள் கேரியர் மீது ஏறி சில பூக்களை பறித்துக்கொண்டு இருந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த மரம் இருந்த இடம் அண்ணன் தம்பிக்கு பங்கு போடப்பட்டு சில நாட்களில், இரண்டு பேர் சில மணி நேரத்தில் மரத்தை மாட்டுவண்டியில் எடுத்துக்கொண்டு போனார்கள்.

ஜாகரண்ட பூக்கள்

17.11.2006 அன்று எழுத்தாளர் சுஜாதாவுடன் பேசியதிலிருந்து சில பகுதிகள்... (ஒலிப்பதிவு செய்யப்பட்டதிலிருந்து) "நடு ராத்திரி ஒருத்தர் வந்து கதவை தட்டி ஒரு கதையை கொடுத்து இதில என்ன தப்பு சொல்லுங்க... நீங்க எழுதற குப்பைய எல்லாம் போடறாங்க.. எவ்வளவோ முறை நான் எழுதி திரும்ப வந்துவிட்டது" என்றார். அந்தக் கதையைப் படித்த போது, அது ஒரு காலேஜ் காதல் கதை. "எந்த காலேஜ்?" என்று கேட்டேன். ஏதோ பேர் சொன்னான். "சரி அந்த காலேஜுல நுழையும் போது, என்ன இருக்கும்?" "என்ன... உள்ளே போகும் போது மரங்கள் எல்லாம் இருக்கும்" "சரி அந்த மரத்துக்கு பேர் என்ன ?" "அதெல்லாம் தெரியணுமுங்களா ?" "ஏம்பா, நீ தினமும் ஒரு காலேஜ் போற. அந்த மரத்தை எப்பவாவது நிமிர்ந்து பார்த்திருக்கியா? என்ன மரம்னு கூட சொல்ல முடியலை. அந்த Detail இல்லைன்னா நீ எப்படி எழுத்தாளன் ஆறது?" "ஏங்க நீங்க கூட நிறைய கொலை கதை எழுதியிருக்கீங்க. நீங்க என்ன கொலையா செய்திருக்கீங்க?" என்றார். என்னால பதிலே சொல்ல முடியலை.

ஆடாதோடையும், அப்பாவின் ஆசையும்!

திருச்சியில் இருந்த போது எங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் வேலிகளை சுற்றி கரும் பச்சை இலைகளுடன் செடிகள் இருக்கும். ஒரு முறை பாட்டி "இந்தத் தழைகளை ஆடு சாப்பிடாது அதனால் இதற்கு 'ஆடு தொடா இலை' என்று பெயர்" என்றாள். சின்ன வயதில் இதை நம்பாமல் "என்ன ஆடு சாப்பிடாத தழைகளா?" என்று சில தழைகளை பறித்துக்கொண்டு ஆடுகளைத் தேடித் "சாப்பிடு" என்று சொன்ன போது ஆடுகள் முகர்ந்துவிட்டு சாப்பிடாமல் போய்விட்டது. "ஆட்டுக்கு அதைச் சாப்பிடக்கூடாது என்று யார் சொல்லித்தந்தது" என்று பாட்டியிடம் கேட்ட அந்த கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. எந்த ஊர் ஆடுகளாக இருந்தாலும் அந்தத் தழைகளைச் சாப்பிடாமல் போய்விடும். இயற்கை. தாவரவியல் பெயர் Adhatoda vasica Nees. நீட்டமான இலைகளும், வெள்ளை நிறப் பூக்களையும் உடைய புதர்ச்செடி ( Shrub ) வகையைச் சார்ந்தது. எல்லா இடங்களிலும் இருந்த இந்தச் செடி இப்போது கிராமங்களில் மட்டும் தான் இருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். சில வாரங்களுக்கு முன் கும்பகோணத்தில் திருக்கண்ணமங்கை கோவிலுக்கு ஏதோ ஒரு கிராமம் வழியாகப் ...

வில்வ மரமும், விஷ்ணு பக்தனும்

தமிழ் ஸ்டுடியோ, கூடு இதழில் எழுதுவதற்கு நீங்க பெரிசா ஒன்றும் செய்ய வேண்டாம், சும்மா உங்க வீட்டை சுற்றி ஒரு ரவுண்ட் போய் செடி கொடிகளை படம் எடுத்தால் போதும் என்று சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் கமெண்ட் அடித்தார். அதனால் இந்த வாரம் ஒரு மாறுதலுக்கு வீட்டை சுற்றாமல் கும்பகோணத்தை சுற்றி வந்தேன். அங்கே வில்வ மரம் ஒன்றை பார்த்தேன். வில்வ மரம் இருந்த இடம் சக்கரபாணி திருக்கோயிலில். பொதுவாக வில்வமரம் சிவன் கோயிலில் தான் இருக்கும். சின்ன வயதில் எங்கள் பாட்டி வீட்டு பக்கம் இருக்கும் சிவன் கோயிலில் பெரிய வில்வ மரத்தை பார்த்திருக்கிறேன். பிறகு சென்னையில் திருமதி ராதா விஸ்வநாதன் ( எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மியின் மகள்) வீட்டில் என் மனைவி பாட்டு கற்றுக்கொள்ளும் போது திரு விஸ்வநாதனுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமை பேசிக்கொண்டு இருந்த போது அவர் வீட்டில் இருந்த வில்வமரத்திலிருந்து ஒரு பழுத்த வில்வப் பழம் கீழே விழுந்தது. உடனே அவர் அதை எடுத்து என்னிடம் கொடுத்து ஜூஸ் செய்து சாப்பிடு நன்றாக இருக்கும் என்றார். சரி என்று அதை வாங்கிக்கொண்டேன். எப்படி ஜூஸ் செய்வது, நல்லா இருக்குமா ? எவ்வளவு சக்கரை போடணும...

வீட்டுக்கு பின் பிருந்தாவனம்

இந்த வாரம் கூடு இதழில் எழுதியது. எங்கள் வீட்டுக்கு பின்புறம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுடன் குளம் ஒன்று இருக்கிறது. குளத்துப் பக்கம் ஒரு முறை போன போது குறுக்கே ஒரு பாம்பு ஓடியது. அதற்குப் பிறகு அந்தப் பக்கம் கால் வத்து வைத்துப் படுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் பெங்களூர் அரசுக்கு என்ன தோன்றியதோ அந்தக் குளத்தைச் சுத்தம் செய்து, அதைச் சுற்றி நடைபாதை அமைத்து வேலி எல்லாம் போட்டு அமர்களப்படுத்திவிட்டார்கள். குளத்தில் வாத்துக் கூட்டம், வேடந்தாங்கல் மாதிரி பறவைக் கூட்டமுடன் மக்கள் கூட்டமும் சேர்ந்தது. பக்கத்தில் இருக்கும் கம்பு தோட்டத்தில் காலை எழறை மணிக்கு கிட்டத்தட்ட 100 கிளிகளை ஒன்றாகப் பார்க்கலாம். ஒரு முறை கருடன் ஒன்று ஒரு கிளியை 'லபக்' என்று தூக்கிகொண்டு போனது.

சூரியனை பார்த்தால் தும்மல் வரும்

இரண்டு வார விடுப்புக்கு வெளியூர் செல்லுமுன் சமையல் அறையை ஒழித்துக் கட்டும் போது ஒரே ஒரு சின்ன சர்க்கரைவள்ளிக் கிழங்கு கிடைத்தது. தூக்கிப் போடலாம் என்று எடுத்த போது அதன் மேற்புறம் இளம் சிகப்பில் சின்ன சின்ன முளைகளைப் பார்க்க முடிந்தது. தூக்கி போட மனம் வராமல் பால்கனியில் இருக்கும் ஒரு மண் தொட்டியில் அதை ஊன்றி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றிவிட்டுக் கிளம்பினேன். இரண்டு வாரம் கழித்து திரும்ப வந்தபோது, பால்கனியில் இன்ப அதிர்ச்சி; சர்க்கரை வள்ளிக் கிழங்குச் செடி கொடிபோலப் படர்ந்திருந்தது. காங்கிரஸ் கட்சிச் சின்னம் போல அதன் இலைகள்.