போன வருஷம் என்ன செய்தேன்? பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை. கிச்சனில் தேதி கிழிக்கும் காலெண்டர் கூட 2.1.12 என்று காட்டிக்கொண்டு இருக்கிறது. சில அருமையான சிறுகதைகள் படித்தேன். ஆகஸ்ட் மாதம் கடைசியில் திடீர் என்று 4 சிறுகதைகள் எழுதினேன். தாராளமாய் சொல்கிறேன் தேசிகன் சார்உங்கள் போராளி ஸ்டோரி பிரமாதம் - ஏராள மாக எழுதுங்கள், மற்று மொருசுஜாதா ஆகயென் வாழ்த்துக்கள் அன்பு. ....என்று கிரேஸி மோகன் வாழ்த்தியது சந்தோஷமாக இருந்தது. நல்ல க்ரைம் கதை ஒன்று எழுத வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. மனைவி, "நீங்க எழுதுவதே ஒரு க்ரைம்தான்" என்றாள். புது காரை எடுத்துக்கொண்டு ஊட்டி, உடுப்பி என்று சுற்றினேன். இரண்டு முறை பஞ்சர் ஒட்டினேன். நிறைய சினிமா பார்த்தேன். இரண்டு மூன்று முறை தப்பாக ஓட்டியதற்கு யார்யாரிடமோ திட்டு வாங்கினேன். 'ஹம் ஆப் கே ஹை கோன்' ஹிந்தி படத்திற்குப் பிறகு மீண்டும் தலாஷ் படத்தை தியேட்டரில் பார்த்தேன். குழந்தைகளுடன் டிவி ரிமோட்டுக்கு சண்டை போட்டேன். டிவியில் கோசாமி, ஏர்டெல் சூப்பர் சிங்கர், நீயா நானா?, சமையல் எண்ணெய் விளம்பரம் பார்த்தேன். ஃபேஸ்புக்கினால் நி