ஆயிரம் ! மதுரகவி ஆழ்வார் ’கண்ணி நுண் சிறு தாம்பு’ என்று தன் பிரபந்தத்தை ஆரம்பிக்கிறார். இதை சின்னஞ்சிறு முடிகளையுடைய 'கண்ணி' தாம்பு உடலில் அழுந்தும்படியான 'நுண்' தாம்பு நீட்டமில்லாத 'சிறு' தாம்பு கயிறு இப்படிப் புரிந்துகொள்ளலாம். ஒரு சாதாரணக் கயிறு அதற்கு இவ்வளவு முக்கியத்துவமா ? என்ற எண்ணம் எழலாம். கண்ணன் திருமேனி மீது அழுந்தி அவனுக்கு தாமோதரன் என்ற திருநாமம் பெற்றுக்கொடுத்து, அவன் சம்பந்தம் பெற்று, அதனால் அந்த ஏற்றம் பெற்றது. பொதுவாக இந்த பிரபந்தத்தைப் படிக்கும் போது இதைக் கவனிக்க மாட்டோம். இதே போல இன்னொரு வார்த்தை ஆயிரம். ஆயிரம் என்ற வார்த்தை நம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மிக மிக முக்கியமான வார்த்தை. ஏன் என்று சொல்லுகிறேன். உங்களுக்குத் தெரிந்த கதை தான். ஒரு சமயம் வீர நாராயணபுரத்தில் இருக்கும் மன்னார் என்ற பெருமாளைச் சேவிக்க சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்தார்கள். அவர்கள் பெருமாளைச் சேவிக்கும் போது நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியின் முதல் பதிகமான "ஆராவமுதே" என்ற பதிகத்தைப் பாட, அதைக் கேட்ட நாதமுனிகள் கடைசியில் "ஆயிரத்துள் இப்பத்தும்&qu