Skip to main content

தினம் ஒரு பாசுரம்

ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

தினமும் ஒரு பாசுரம் படித்துவிட்டு, அதற்கு பூர்வர்களின் உரையை நிதானமாக படித்து அனுபவித்துவிட்டு அதைக்கொண்டு பாசுரத்துக்கு எளிய தமிழில் எழுத முற்பட்டேன். 

இதன் நோக்கம் நீங்கள் நாள் முழுவதும் ஒரு பாசுரத்தைச் சுவைத்து, பூர்விகளின் அழகான உரையைப் படிக்க வேண்டும். 

இதைத் தொடர்வதற்கு ஆசாரியன், ஆழ்வார்கள், தாயார், நம்பெருமாள் அனுக்கிரகிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஆரம்பிக்கிறேன். 

பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். 

அடியேன் தாஸன்.
- சுஜாதா தேசிகன்
https://t.me/joinchat/oYXHpcjLYyg3YzY1 டெலிகிராம் குருப்பில் சேர்ந்து தினமும் பெறலாம். 


வாழாட்பட்டு

இன்று 'தினம் ஒரு பாசுரத்தில்' பெரியாழ்வார் திருப்பல்லாண்டு ( 3 ) பாசுரத்தின் முதல் வார்த்தை 'வாழாட்பட்டு'. இந்த வார்த்தையை சற்று பார்க்காலம்.

பெண் பார்க்கும் படலம் என்று சில வருடங்கள் முன் வரை நடந்து கொண்டு இருந்தது.

பையன் தன் அம்மா அப்பாவுடன் பெண் வீட்டுக்கு வாகனத்தில் வந்து இறங்க, அவர்களை வாசலில் பரபரப்புடன் வரவேற்று, உள்ளே சோபாவில் உட்கார வைத்து, பஜ்ஜி, சொஜ்ஜி, காபி என்று ஆரம்பித்து, புடவையில் அலங்கரிக்கப்பட்ட பெண் குனிந்த தலையுடன் காபியைக் கொடுத்து, (வேண்டா வெறுப்பாக) நமஸ்கரித்து, தனக்குத் தெரிந்த பாடலை அவர்கள் முன் பாட, வந்தவர்கள் ஊருக்குச் சென்று தபால் போடுகிறோம் என்று கிளம்புவார்கள்.

பெண்ணை பிடிக்கவில்லை, வரதட்சணை என்று என்ன காரணமாக இருந்தாலும் ஜாதகம் சரியில்லை என்ற ஒரு சால்ஜாப்புக்குள் அந்த எப்பிசோட் அடங்கிவிடும்.

இப்படிப் பலர் வந்து அந்தப் பெண்ணை 'பார்க்க' அந்தப் பெண் அவர்கள் முன் தலை குனிந்து, பஜ்ஜி, சொஜ்ஜி.காபி, பாட்டு... என்று இது பல எபிசோடுகள் நடைபெறும்.

அந்தப் பெண்ணுக்குத் திருமணம் முடிந்து கணவனின் கையை பிடித்த பின் தான் இந்த வேதனை தீரும். அதற்குப் பிறகு யார் முன்னும் தலை குனிய வேண்டிய அவசியம் இல்லை, பஜ்ஜி, சொஜ்ஜி, பாட்டு எல்லாம் தேவை இல்லை.

அது போலப் பல சாமி ,சாமியார்களின் காலில் விழுந்து, அவர்களுக்குப் பிடித்த நெய்வேத்யம், பாட்டு எல்லாம் பாடி அவர்களைக் குஷி படித்த அவர்களும் ஊருக்குச் சென்று கடுதாசி போட நாம் காத்துக்கொண்டு இருக்க வேண்டும்.

அது போல

பெருமாளின் கையை பிடித்த பின் 'வாழாட்பட்டு' (சமாஸ்ரயணம் என்ற திருமணத்துக்கு) அந்தப் பெண் யார் காலிலும் விழு வேண்டிய அவசியம் இல்லை.
அவளுக்கு ஏதாவது வேண்டும் என்றாலும் கணவனான பெருமாளிடம் சொன்னால் அவன் பார்த்துக்கொள்வான்.

கல்யாணம் ஆன பெண் சில காலத்துக்கு பிறகு கணவனைப் பார்த்து "உனக்கு வாழ்க்கைப்பட்டு என்னத்த கண்டேன்..? என்பாள் இது பெருமாளுக்குப் பொருந்தாது.

பெருமாளிடம்
பகல் கண்டேன்; நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டும் அவனை, மெய்யே மிகக் கண்டேன்
என்று பலவற்றை கணலாம்.
- சுஜாதா தேசிகன்


நன்கு  
இன்றைய 'தினம் ஒரு பாசுரத்தில்' (4)  ஆழ்வார் நாடும் நகரமும் நன்கு அறிய என்பதில் 'நன்கு' என்ற வார்த்தையைச அழுத்திச் சொல்லுகிறார்.
'நன்கு' என்றால் என்ன ? 
ஊர் உலகம் என்ன சொல்லுமோ என்று 
வீட்டுக்குள் பெருமாளைச் சேவித்துவிட்டு வெளியே நாத்திக வேஷம் போடுபவர்கள். 
ஊர் உலகம் என்ன சொல்லுமோ என்று 
இடத்துக்கும், உடைக்கும் தகுந்தாற்போல் முழுத் திருமண் அல்லது ஸ்ரீ சூர்ணம், அல்லது எதுவும் இல்லாமல் இருப்பாவர்களைப் போல இல்லாமல் 
ஊர் உலகம் என்ன சொல்லுமோ என்று பயப்படாமல் 
ஊரும் உலகமும் 'நன்கு' அறிய நான் ஒரு ஸ்ரீவைஷ்ணவ பக்தன் என்று கூறிக்கொள்ள வேண்டும் என்கிறார். 
'நன்கு'  எனக்கு நானே  'நங்குனு' தலையில குட்டிக்கொண்டது போல இருந்தது.  
- சுஜாதா தேசிகன்



சில வார்த்தை பிரயோகங்கள், சில விளக்கங்கள்

திருவோணத்தான் - ஒரு பாசுரத்தில் பெரியாழ்வார் பெருமாளை திருவோணத்தான் என்கிறார் அதனால் அதை உபயோகித்தேன். 

அச்சுதன் - "அரி முகன் அச்சுதன்"  என்கிறாள் ஆண்டாள் அஅஉ 

அந்தியம் போதில் - இரணியனின் வரம் பெற்றதால் மாலைப் பொழுது என்று சொல்லுவது உண்டு. அந்தியம் என்றால் மரணகாலம் என்றும் கூறுவர், எந்த சமயத்தில் பெருமாள் வந்திருந்தாலும், இரணியன் தொலைந்திருப்பான் அதுவே அவனுக்கு அந்திம காலமாக இருந்திருக்கும். பெரியாழ்வாரின் தமிழ் இரண்டு வித அர்த்தங்களுக்கும் பொறுந்தும். 

பந்தனை - ஆயாசம்/டயர்ட் - என்ற பொருளும் வரும். ஆனால் பெரியாழ்வாருக்கு பெருமாள் எப்போதும் அவனுக்கு என்ன வந்துவிடுமோ என்ற பயம் தான். அவருக்கு பெருமாள் எப்போழுதும் குட்டிக் கண்ணன் தான் அதனால் தான் பந்தனை - பிறந்த குழந்தைகளுக்கு உண்டாகும் தோஷக்காய்ச்சல் என்று கூறினேன்.  
பெரியாழ்வார்  பாசுரங்களை அனுபவிக்க அவருடைய மனோபாவத்தை நாம் அறிந்துகொள்வது மிக முக்கியம். 

- சுஜாதா தேசிகன்















Comments

  1. முதல் பாசுரம் கடைசி வரி சேவடி or செவ்வடி. Santhaiyil செவ்வடி என்று சேவிப்பது வழக்கம் .இதில் அர்த்தம் மாறுமா?

    ReplyDelete
    Replies
    1. இரண்டும் சரி. இதை பாட பேதம் என்று கூறுவார்கள்.

      Delete
  2. நல்ல கேள்வி... அடியேனுக்கும் இந்த சந்தேகம்... இப்போது புரிந்து விட்டது... நன்றி

    ReplyDelete

Post a Comment