Skip to main content

Posts

Showing posts from November, 2018

திருவரங்க மாலை

சமீபத்தில்  ஸ்ரீரங்கம், உறையூர் சென்ற போது சில விஷயத்தைக் கண்டு ரசிக்க முடிந்தது. கூட்டமே இல்லாத உறையூரில் நம்மாழ்வார் சன்னதியில் சுவரில் இருக்கும் ஓவியங்கள். குறிப்பாக நம்மாழ்வாரிடம் பல திவ்ய தேசத்துப் பெருமாள் ‘நம்மைப் பாடு, நம்மைப் பாடு’ என்று போட்டிப்போட்டுக்கொண்டு வரும் காட்சி. நல்ல கூட்டத்தில் க்யூவுல் இருக்கும் போது சில நன்மைகள் ஏற்படுகிறது உதாரணமாகப் பெரிய பெருமாள் சன்னதிக்கு முன் குலசேகரப்படியும், அதற்குப் பக்கம் இருக்கும் திருமணத் தூண்களை பார்த்து ரசிக்க முடிந்தது.

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்

ஸ்ரீவைஷ்ணவத்தில் மூன்று சொற்களை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். பிரமாணம், பிரமேயம் மற்றும் பிரமாதா. இந்த மூன்று சொற்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்   பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.  மேலே படிக்கும் முன் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் - இந்தக் கட்டுரையில் பல ஆசாரியர்களின் பெயர்கள் வரப் போகிறது அதனால் கொஞ்சம் நிதானமாகப் படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்  (முடிந்தால் ஒரு பேப்பர் பேனா கொண்டு குறிப்பு எடுத்துக்கொண்டு வாருங்கள்)  பிள்ளை என்றால் என்ன ? லோகாசார்யார்   என்றால் என்ன ? என்று பார்த்துவிடலாம். அதற்கு சற்றே பின் சென்று நம்பிள்ளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.  இங்கேயும் ‘நம்’ என்றால் என்ன ‘பிள்ளை’ என்றால் என்ன என்று பார்க்க வேண்டும் !  குருபரம்பரையில் பட்டர் ( கூரத்தாழ்வான் திருக்குமாரர்) , நஞ்சீயர், நம்பிள்ளை என்ற வரிசை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் பட்டர் பரமபத்தித்த பின்னர் தான் நம்பிள்ளை அவதரித்தார் என்ற எண்ணம் வரும். ஆனால் பட்டர் வாழ்ந்த காலத்திலேயே நம்பிள்ளையும் வாழ்த்திருக்கிறார். இதைத் அவருடைய வியாக்கியானங்களில் வரும் ஐதிகங்களைக்

ஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது ?

’பேசும் அரங்கன்’ என்பார்கள். இந்த தலைப்பில் ஒரு புத்தகம் கூட வந்திருக்கிறது ( ஸ்ரீ முரளி பட்டர் எழுதியது ) கட்டுரையின் தலைப்புக்கு நேற்று எனக்கு விடை கிடைத்தது ! ’அரங்கன் பேசுவாரா ?’ என்று நாத்திகர்கள் போல நாம் பேசினால் பேச மாட்டான். நம் மனது அவனுடன் லயித்துவிட்டது என்றால் அவன் பேசிக்கொண்டே இருப்பான். ’நீ’ நம்ம ஆளு என்று தன்னுடன் சேர்த்துக்கொள்வான். ஸ்ரீரங்கத்தில் ‘பெரிய அவசரம்’ பற்றிப் போன செவ்வாய்க்கிழமை அடியேன் எழுதிய சாதாரண ஃபேஸ்புக் பதிவில் “என்றாவது ஒரு நாள் எனக்கு நம்பெருமாளுடைய ஈரவாடை கைலியைப் பிழிந்த பிரசாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன் !” என்று எழுதியது நினைவிருக்கலாம். நேற்று (ஞாயிறு) ஸ்ரீரங்கத்தில் இருந்தேன். ’காவிரி துலா ஸ்நானம்’ செய்ய கிளம்பு போது ‘அம்மா மண்டபம்’ போகிறீர்களா கீதாபுரம் டிரைப் பண்ணுங்களேன்” என்ற அட்வைஸை ஏற்றுக்கொண்டு அங்கே ‘டிரை’ பண்ணச் சென்ற போது காவிரியின் ஓசை ‘பொன்னியின் செல்வனின்’ வரும் வர்ணனை போல இருந்தது. வேகமாகத் தடுப்பு அணையில் தப்பி தவறி விழுந்து மீனாகிவிடுவோமோ என்று கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது. ஸ்நானம் முடித்துக்கொண்டு தாய

செவிக்கினிய செஞ்சொல்

’செவிக்கினிய செஞ்சொல்’ என்றால் அர்த்தம் புரிகிற மாதிரி இருக்கும். ஆனால் ‘செஞ்சொல்’ என்றால் என்ன என்று கேட்டால் முழிப்போம். இதே போல் தான் ‘செம்மொழி’, ‘செந்தமிழ்’ போன்ற வார்த்தைகளும். செஞ்சொல் என்றால் செம்மையான என்று பொருள். ’செமையா’ இருக்கு என்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் செம்மை இல்லை, செம்மை என்றால் உள்ளதை உள்ளபடி செல்லுவது எதுவோ அது தான் செம்மை. நல்ல சொற்களை செம்மையாக சொன்னால் அதில் ஈரம் இருக்கும். இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும். அன்பாக சொல்லும் சொல்லை ஈரம் கலந்தாக இருக்கும் என்கிறார் வள்ளுவர். நஞ்சீயர் பல சாஸ்திரங்களை எல்லாம் மேல்கோட்டையில் கற்றபின் ஸ்ரீரங்கம் வந்து பட்டரிடம் ஆழ்வார்களுடைய பாசுரங்களை கற்ற பின் ஆழ்வார்களின் பாசுரங்களில் இன்சொல்லில் ‘ஈரம்’ இருக்கிறது என்பாராம். சென்னை வெய்யிலில் எப்படி ஏ.சி ரூம் சுகமாக இருக்குமோ அது போல ஆழ்வார் பாசுரங்களில் ஈரம் இருக்கும். செஞ்சொல், ஈரம் கலந்த தமிழில் பாடும் போது ஆழ்வார்கள் உருகியது த

நம்பெருமாளும் மாலைத் தாங்கியும்

இடிதாங்கி என்று கேள்விப்பட்டிருக்கிறோம், மாலைத்தாங்கி ? ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் முதல் முதலில் மதுரா விஜயத்தின் போது ஊரைச் சுற்றி வருகிறார்கள். நல்ல துணியை உடுத்த எண்ணி ஒரு சலவைக்காரனிடம் கேட்க அவன் மறுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அடுத்ததாக ஒரு பூக்கடைக்கு சென்று அங்கே சுதாமா என்ற ஒரு மாலை கட்டுபவர் இருக்க அவர் கிருஷ்ணனுக்கு அன்பாக மாலை ஒன்றைத் தருகிறார். ஆனால் கிருஷ்ணனின் சின்ன கழுத்துக்கு அது சரியாக பொருந்தவில்லை. பக்கத்தில் மாடு மெய்க்கும் சிறுவர்கள் வைத்திருக்கும் ஒரு சின்ன கோலை வாங்கி கழுத்துக்கு மாலைத் தாங்கியாக வைத்து மாலை சூட்டி அழகை ரசிக்கக் கண்ணன் ”சுதாமா உனக்கு என்ன வேண்டுமோ அதை நான் தருகிறேன்” என்றதற்கு சுதாமா “இந்த அழகு முகத்தைப் பார்த்தால் போதும் கண்ணா, வேறு என்ன வேண்டும் எனக்கு?” என்கிறார். இன்றும் உற்சவர்களுக்கு சின்னதாக மாலைத் தாங்கி வைத்து அலங்காரம் செய்வதை பார்க்கலாம். கண்ணனுக்குப் பூமாலை பிடிக்கும் என்ற ரகசியத்தை உணர்ந்த ஆண்டாள் தினமும் தான் சூடிக் கண்ணாடியில் அழகு பார்த்த மாலையை பெருமாளுக்கு அனுப்பினார். ஆண்டாளை தன்னுடன் சேர்த்துக்கொள்ள

ஈரவாடை பிரசாதம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீ முரளி பட்டர் ஸ்வாமிகள் திருப்பாணாழ்வார் பற்றி அருமையான பதிவு ஒன்று எழுதியிருந்தார். சைன்ஸ் படித்தால் கேள்வி கேட்க தோன்றும். (சந்தேகம் என்று கூட சொல்லலாம்) அதை எல்லாம் தூர வைத்துவிட்டு பிரபந்தமும் ஆழ்வார்களும் படித்தால் தான் பக்தி வரும் என்று என் அப்பா அடிக்கடி சொல்லுவார். அர்ச்சகர் மூலமாக பெருமாள் பேசினார், திருப்பதி பெருமாளுக்கு தாடையில் ரத்தம் வர அதை நிறுத்த பச்சைக் கற்பூரம் போன்ற கதைகளை படிக்கும் போது ‘இது உண்மையா?’ என்று நம் மனதின் ஓரத்தில் ஒரு சந்தேகம் இருந்துக்கொண்டே இருக்கும். இவை எல்லாம் உண்மை என்று எனக்கு 20 வருடங்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட அனுபவம். அதைப் பற்றி இல்லை இந்த கட்டுரை ! பயப்படாதீர்கள் ! கடந்த டிசம்பர் மாதம் ஸ்ரீரங்கத்தில் இருந்தேன். பெரிய பெருமாளை சேவிக்கப் பெரிய க்யூ வரிசையில் நின்று கொண்டு இருந்த போது பெரிய பெருமாளை சேவித்துவிட்டு வெளியே வந்த ஒருவர் முகத்தில் பூரிப்பு. நெற்றி கோபி சந்தனம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்றது. பூரிப்புக்குக் காரணம் கையில் வைத்திருந்த துளசி மாலை பிரசாதம். எங்களுக்குப் பின்னே மேலும் சில ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பக்த்தர்