திரு பாவை துதி -29 கோதா ஸ்துதி - 29 - நற்பயன் - மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே! இதி விகஸிதபக்தேருத்திதாம் வேங்கடேசாத் பஹுகுணரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய: | ஸ பவதி பஹுமாந்ய: ஸ்ரீமதோ ரங்கபர்த்து: சரணகமலஸேவாம் சாச்வதீமப்யுபைஷ்யன் || .29. எளிய தமிழ் விளக்கம் இக் கோதா ஸ்துதி, கோதையின் திருவடியில் விஸ்தாரமாக பக்தியின் ஈடுபாட்டால் வேங்கடேசனிடமிருந்து பக்தி பரவசத்தில் மலர்ந்து, தானாக அவதரித்து, மனங்கவரும் எல்லா வகையான குணங்களுடைய அழகிய கோதா ஸ்துதியை யார் சொல்லுகிறார்களோ, அவர்கள் திருமகளோடு கூடிய ரங்கநாதனின் முடிவில்லாத திருவடி கைங்கரியத்தைப் பெற்று மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே சற்றே பெரிய விளக்கம் நேற்றுடன் கோதா ஸ்துதி முடிந்தது. இந்த ஸ்லோகம் ‘பலச்ருதி’ - ஸ்தோத்ரத்தின் சிறப்பையும், பலனைச் சொல்கிறது. ஸ்ரீ வேங்கடேசன் என்ற நம் ஸ்ரீ வேதாந்த தேசிகன், இந்தக் கோதா ஸ்துதியை நான்...