[%image(20060226-Peoplesrailway.jpg|160|160|People's railway station)%] ரயில்வே பட்ஜட்டில் ரயில் டிக்கேட் எவ்வளவு கம்மியாகியிருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்த போது, NDTVல் பல்வந்த்பூரா ஸ்டேஷனை பற்றி ஒரு கொசுரு செய்தியை கான்பித்தார்கள். பல்வந்த்பூரா(Balwantpura) ஜெய்பூரிலிருந்து நூற்றியருபது கி.மீ தூரத்தில் இருக்கிறது. இந்திய வரைபடத்தில் இந்த மாதிரி ஓர் ஊர் இருக்கா என்று கூட தெரியாது. இந்த 1994 ஆம் ஆண்டு முதலே பல்வந்த்புராவில் வசிப்பவர்கள் தங்கள் ஊருக்கு ஒரு ரயில்வே ஸ்டேஷன் வேண்டும் விரும்பி, ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் போதிய அளவு நிதியில்லை என்று ரயில்வே நிராகரித்தது. இதனால் சுற்றி உள்ள ஐந்து கிராமங்களில் இருப்பவர்கள் பஞ்சாயத்தில் ஒன்று கூடி தாங்களாகவே ஸ்டேஷன் கட்ட முடிவு செய்தனர். அவர்கள் ரயில்வேயிடம் "நாங்கள் ஸ்டேஷன் கட்டினால் நீங்கள் அட்லீஸ்ட் இந்த வழியாக வரும் ரயிலை நிறுத்துவீர்களா என்றனர்?" ரயில்வே சம்மதிக்கவே 20,000 மக்கள் கொண்ட ஊர் மக்கள், பக்கத்தில் உள்ள பள்ளி, கல்லூரி என்று நன்கொடை வசூலித்து தாங்களாகவே ஸ்டேஷனை கட்டியுள்ளார்கள். அங்கு டீக்