Skip to main content

பெண்களூர்-0 6

நேற்று தான் பெங்களூர் வந்தது போல் இருக்கிறது, அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. இந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி வாரயிறுதி ஏதாவது ஒரு காரணம் வைத்துக்கொண்டு சென்னை சென்றிருக்கிறேன்.  போன ஜென்மத்தில் ரயில்வேக்கு நிறைய கடன் பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த ஒரு வருடத்தில் இரண்டு வீடு மாத்த வேண்டியிருந்தது. தற்போது புதிதாக குடிபெயர்ந்த வீட்டின் பால்கனியில் வாழைப்பழம் சாப்பிட்டால் ஆபத்து. காரணம் கடைசியில்.



பெங்களூரில் வீடு தேடுவது அவ்வளவு சுலபம் இல்லை.


வீடு தேடும் போது முதல் முதலில் இவரைதான் சந்தித்தேன்.
"சார், உங்கள் வீடு காலி என கேள்விப்பட்டேன் .."
"ஆமாம், நீங்கள் எவ்வளவு பேர்?"
"நான், என் மனைவி, குழந்தை, வீட்டை பார்க்கலாமா ?"
"அப்படியா? வாடகை 14,000/= அதைத்தவிர மெயிண்டெனஸ், EB...எல்லாம் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்"
"சார் விட்டை பார்க்கலாமா..."
"ஆணி அடிக்க கூடாது, நாய் வளர்க்க கூடாது..."
"சார் வீட்டை பார்க்கலாமா..."
"பால்கனியில் பூத்தொட்டி வைக்கக் கூடாது"
"அப்புறம் கடைசியாக ஒரு கண்டிஷன். நான் கொடுக்கும் சாய்பாபா படத்தை ஹாலில் மாட்ட வேண்டும்"


"சரி சார், இன்னும் கொஞ்சம் கண்டிஷன்களை யோசித்து வையுங்க நான் அப்புறம் வரேன்"
என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. சொல்லவில்லை.


அடுத்ததாக FreeAds பேப்பரில் வந்த நபரை போனில் அழைத்தேன்.
"சார், FreeAds  பேப்பரை பார்த்து போன் செய்கிறேன், ஐ வாண்டு டாக் டு ராஜேஷ்"
"எஸ். ராஜேஷ் ஸ்பீக்கிங்"
"உங்க வீட்டோட விளம்பரம்.. "
"2BHK, ஈஸ்ட் ஃபேசிங், பூஜா ரூம், பால்கனி..." என்று அடுக்கிக்கொண்டு போனார்
"சார் வீட்டை எப்போ பார்க்கலாம்"
"இப்பவே, எனி டையம் ஐயம் ரெடி, Where are you put up now"
"சாந்தி சாகர் பக்கத்தில இருக்கேன்"
"ஓ, குட், நானும் அது பக்கத்துலதான் இருக்கேன், பக்கத்துல ஒரு பச்சை லைட் கம்பம் தெரியுதா ?"
"ஆமாம்"
"அது பக்கத்துல தான் நான் இருக்கேன் என்னை தெரியலை"
"அப்படியா ?, அந்த லைட் கம்பத்து பக்கத்துல ஒரு கருப்பு மாடு தான் இருக்கு"
எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்து
"சார் நீங்க எந்த ஏரியாவுல இருக்கிங்க?"
"நான் ஜே.பி நகரிலிருந்து பேசரேன்"
"நான் குந்தனஹல்லியிலிருந்து பேசரேன்"
பிறகு தான் தெரிந்தது அவர் கொடுத்த ஜே.பி நகர் விளம்பரம் தவறுதலாக குந்தனஹல்லியில் பகுதியில் வந்திருக்கிறது!"
கருப்பு மாடு தான் என்னை காப்பாத்தியது.


இன்னும் ஒன்று சொல்ல வேண்டும், பெங்களூர் பிரோகர்கள் ரொம்ப நல்லவர்கள் ( அல்லது நான் பார்த்தவரை). உங்களுக்கு வீடு கிடைக்கும் வரை உங்களிடமிருந்து காலணா வாங்க மாட்டார்கள்.  அவர்களுடைய பெட்ரோல் செவில் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்கள்.


கார் வாங்கிய பின் பொறுமைசாலி என்று பட்டம் எடுத்துவிட்டேன். நன்றி பொங்களூர் டிராபிக் நெரிசல்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் பெங்களூர் டிராபிக் ஜாம் பற்றி எனக்கு மின்னஞ்சல் மூலம் கிடைத்த கார்டூன்கள் இங்கே ...


[%popup(20060210-traffic_1.jpg|414|521|பெங்களூர் டிராபிக் - 1 )%],[%popup(20060210-traffic_2.jpg|437|521|- 2)%],[%popup(20060210-traffic_3.jpg|500|318|- 3)%],[%popup(20060210-traffic_4.jpg|500|279|- 4)%]


போன வருடம் தவற விட்ட மலர் கண்காட்சியை இந்த முறை தவற விடவில்லை. நானும் போய் வந்தேன் என்பதற்கு சாட்சியாக சில படங்கள்.


[%popup(20060210-flower_ex1.jpg|300|221|மலர்கள் - 1)%], [%popup(20060210-flower_ex2.jpg|300|201|மலர்கள் - 2)%], [%popup(20060210-flower_ex3.jpg|300|201|மலர்கள் - 3)%], [%popup(20060210-flower_ex4.jpg|300|201|மலர்கள் - 4)%]


 வீட்டில் பால்கனியில் வாழைப்பழம் சாப்பிட்டால் (சாப்பிடாவிட்டாலும்) குரங்கு வரும் :-)





பெண்களூர் 1 , 2,  3, 4, 5

Comments