30. பாவை குறள் - சேயிழையார் வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி அங்கப் பறை கொண்ட-ஆற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப் இப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள் செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். திருப்பாற்கடலைக் கடைந்த மாதவனான கேசவனை சந்திரன் போல் முகமுடைய பெண்கள் சென்று யாசித்து விரும்பியதைப் பெற்ற வரலாற்றை(பாவை நோன்பு), அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய தாமரை மாலை அணிந்த பெரியாழ்வாரின் மகள் ஆண்டாளால் அருளிச் செய்த திருப்பாவை முப்பது பாடல்களையும் தவறாமல் பாடுபவர்கள் நான்கு தோள்களையும், செங்கண்களையும் பெற்ற திருமால் திருவருள் பெற்று எப்பொழுதும் பேரின்பத்துடன் வாழ்வார்கள். நம்பெருமாள் நெஞ்சில் சந்தனம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பார்க்கவில்லை என்றால் இந்தப் படத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள். இந்தச் சந்தனத்தைப் பார்க்கும் போது ரைதாஸ் என்ற பக்தர் பெருமாளைக் குறித்துப் பாடியது நினைவ...