இந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி.
10 ஆண்டுகளுக்கு முன்(2005'ல் எழுதியது) நான் விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்.
என் வலைதளத்தில் சுஜாதாவின் சில கட்டுரைகளுடன் என்னுடைய அசட்டுத்தனமான கட்டுரைகளும் இடம்பெற்றன. அமெரிக்க அனுபவம், நான் வரைந்த சில படங்கள், சென்ற ஊர்கள் என்று தோன்றியவற்றையெல்லாம் எழுதினேன். தமாஷ் என்னவென்றால், நன்றாக இருக்கிறது என்று சிலர் பாராட்டியதுதான். அதானால் தலைகிறுக்கு ஏறி, இன்னும் கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன்.
தேவன், கல்கி, பாக்கியம் ராமசாமி எழுதிய சில நகைச்சுவை கட்டுரைகள், ஆழ்வார்கள் பற்றிய சில குறிப்புகளும் இடம்பெற்றன. கடந்த ஆண்டு வெயில் காலத்தில் ஒரு வலைப்பதிவையும் ஆரம்பித்தேன். வாரத்திற்கு ஒரு பதிவு என்று இன்றும் எழுதிக்கொண்டிருக்கேன்.
சுமார் ஐந்து வருடத்திற்கு முன் பிரபு ராமநாதன் எனக்கு அறிமுகமானார். அவர் என் பெயரில் ஒரு domain தருவதாகவும், அதில் என் வீட்டுப்பக்கத்தை கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார். அவரிடம் தொடர்ந்து கண்ணாம்மூச்சி விளையாடினாலும் என்னை அவர் விடுவதாக இல்லை. ஐந்து வருடம் என்னை துரத்தித் துரத்தி போன மாதம் எனக்கு என் பேரில் ஒரு domain வாங்கி தந்தார். நீங்கள் இதை படித்துக்கொண்டிருப்பது அதில் தான். அவருக்கு என் நன்றிகள்.
இந்த புது வீட்டில் வலைதளம், வலைப்பதிவு ஆகியவற்றை ஒன்றாக அமைப்பது என்று முடிவுசெய்தேன். முதல் கட்டமாக வலைப்பதிவை பழைய வீட்டிலிருந்து புது வீட்டுக்கு கொண்டுவந்துவிட்டேன்.
கொஞ்சம் கொஞ்சமாக என் வீட்டுப்பக்கத்தில் உள்ள சுஜாதாவின் கட்டுரைகளை இங்கு கொண்டு வர எண்ணம்.
இந்த தளம் முழுவதும் Blog:CMS'ல் இயங்குகிறது. யுனிக்கொடில் இருப்பதால் எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது. இருந்தாலும் IE, Firefox இரண்டிலும் நன்றாக தெரியவேண்டும் என்று ஸ்ரீரங்கநாதரை அட்வாஸாக பிராத்திக்கிறேன்.
இது வரை படித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
அன்புடன்
தேசிகன்
23-08-2005
பெங்களூர்.
நான் திரு.சுஜாதா அவர்களின் சிறிய ரசிகன்,நான் ஓரளவு படித்ததும்,மிகவும் நேசிப்பதும் அவர் ஒருவர் மட்டுமே,”ஸ்ரீரங்கத்து தேவதைகள்” என் விருப்பமான தொகுப்பு,அக்கதைகளில் எவை உண்மை,எவை புனைவு என்று,திரு.சுஜாதா அவர்கள் மட்டுமே கூற இயலும்,எனினும்..தற்போது ஸ்ரீரங்கத்தில் நான் நேரில் காண ஏதேனும் உள்ளனவா?,குறிப்பாக அந்த “மல்லிப்பூ”ஐயங்காரின் பூர்விக இடத்தில் உள்ள லாட்ஜ்,ரங்கு கடை..ஏதேனும் பார்க்க முடியுமா?நான் திருச்சியில்தான் வசிக்கிறேன்...
ReplyDeleteஅன்புடன்
மாணிக்கராஜ் ஜோசப் சஞ்சீவி
அன்புள்ள தேசிகன்:
ReplyDeleteநீண்ட நாட்கள் ஆகிவிட்டன நாம் உரையாடி! உங்களின் திருககோட்டியூர் நம்பி கட்டுரை படித்தேன். நானும் அங்கே சென்றிருக்கிறேன். உண்மையில் உடல் நலம் பலமாக இருந்தால் மட்டுமே அத்தனை உயரம் ஏறிச் சென்று பார்க்கமுடியும். அதிலும் ஸ்ரீ ராமானுஜர் அங்கிருந்து அனைத்து மக்களுக்கும் ஜாதி பேதமின்றி உபதேசம் செய்தார் என்ற சம்பவம் உணர்ந்து அந்த இடத்தில் கால் எடுத்து வைக்கும்போது உண்மையிலேயே மெய் சிலிர்த்தது. எத்தனை பெரிய மனத் படைத்த மாமனிதர்களெல்லாம் நம் தேசத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என எண்ணும்போது நிஜமாக மனசுக்குள் சந்தோஷம் பிரவகித்தது. எனது நினைவுகளை மீண்டும் ஒரு முறை ரீவைண்ட் செய்து மனக்கண்ணில் பார்த்து பரவசமெய்த காரணமாக அமைந்த உங்கள் கட்டுரைக்கு நன்றி!
அன்புடன்:
க்ளிக் ரவி
மிக சந்தோஷமான ஒரு அதிர்ச்சி இப்படி ஒரு வலைத்தளத்தைப் பார்த்ததற்கு . நான் சுஜாதாவின் எழுத்திற்கு ஓர் தீவிர ரசிகன் - அன்னாரின் மறைவுக்கு இன்னும் துக்கம் அனுஷ்டிப்பவன். சுஜாதாவின் கட்டுரைகள், அவரைப் பற்றிய இதுவரை அறியாத கோணங்கள் ஆகிய வற்றை எதிர்பாக்கிறேன் - 04-Apr-2012
ReplyDeletegreat work sir! make more! we enjoy it!
ReplyDeletevery very great work! make more! we can enjoy it!
ReplyDeletePlease help me where can I get SUJATHA's books about srivaishnavam and other spiritual topics. Please help me. PARTHASARATHI.R. VELACHERY, CHENNAI
ReplyDeleteஅன்புள்ள பார்த்தசாரதி - There only 3 publishers now - கிழக்கு, உயிர்மை, விசா இவர்களிடம் கேட்டுப்பாருங்கள்
DeleteDear Desikan,
ReplyDeleteHow are you doing?.How is Sada doing ?.
Good to Read your blog again.
Where can i get e-copy of Alwargal-Oru Eliya Arimugam.
Balaji
விசா, கிழக்கு பதிப்பகத்தில் கேட்டுப்பாருங்கள். நியூ புக் லேண்ட்ஸ் தி.நகரில் கிடைக்கும்.
Deletehttp://www.desikan.com/blogcms/wiki/index.php?id=azhvar_sujatha என்ற லிங்கிலும் இருக்கிறது.
DeleteDesikan Swamin,
DeleteCan you please enable the link ?.
Adiyen,
Balaji
Dear Balaji,
DeleteThe link is not working...you I will try to get it for you when time permits.
Sir,
ReplyDeleteI don't know whether u remember me, i got introduced to this site when it was in the early stages, some where between 2002-2003. I am hardcore fan of Sujatha Sir from college days and my native is trichy and did my schooling in ER till 1996. 1996-2000 Engineering in Angalamman College, after that Bangalore wasi. Very happy to see you back and i and thrilled in meeting you as well. Let me know when u r free sir. Also i kindly request you to involve me in the work that you are doing which is for our thalaiavar Sujatha Sir.
Regards,
Ramprasad
Dear Ramprasad,
DeleteGlad to hear this. Send a mail and we can connect.
regards,
Sir,
ReplyDeleteI have been read your blog since 2005. I am a big fan of Writer Sujatha like you. I would like to get in touch with you. Can you please drop me an email?
Thanks
Thiyagu
Dear Thiyagu,
Deletesend me a mail to desikann at gmail dot com
br
good
ReplyDeleteவணக்கம். எனக்கு பிடித்த சுஜாதா புகழ் பாடும் வலைதளங்களில் உங்களுடையது ஒன்று.
ReplyDeleteநான் அவரின் ஒரு சிறுகதை ஒன்றை தேடுகிறேன். அமைச்சர் ஒருவரின் வெளிநாட்டு அரசு முறை பயணத்தில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாய் எழுதி இருப்பார். அமைச்சர் வந்த வேலையைவிட்டுவிட்டு நைட் கிளப் போவதற்கு ப்ளான் செய்வார்.
கதையோ அல்லது நாவலோ அதன் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.
நன்றி.
I got to learn from a Tamil Heritage Group's website that you have developed a quickguide on Srirangam Temple. Would like to get a copy of the same. Can you let me know the ways to procure the same? Am in Ahmedabad, Gujarat these days :)
ReplyDeletegreetings. very nice to know about you mr sujatah desikan. can u kindly share your email idadn contact no as i wish to stay connected with your good self. thank you
ReplyDeleteDear Sir, you can contact me on desikann@gmail.com
Deleteமகிழ்ச்சி. நன்றி.
ReplyDeleteDesigan nanum Sujatha vasagi.... Kumbakonathil vasikkum oru rasigai....ungal ezhuthukkalum ippathan padikka mudindathu.nanraga irukku.....
ReplyDeleteநான் சுஜாதாவின் பக்தன். நேரம் இருக்கும் போது வருகை தாருங்கள் இந்த வலைப்பூவிற்கு.
ReplyDeleteramhongkong.blogspot.hk
குறிப்பாக கேவி மாமாவுடன் ஒரு அனுபவம்.
ReplyDeletehttp://ramhongkong.blogspot.hk/2014/07/blog-post.html
Sir,thank you very much for creating this blog.was a sujatha premi since my teens(D.O.B.1967).even now,I forget food while reading his books.
ReplyDeleteSir,whether பிரிவோம் சந்திப்போம் is available in PDF format.can u pls hep,
Excellent Writting ! Hats off !
ReplyDeleteDear Mr Sujatha Desikan,
ReplyDeleteCan you please tell me the title of a short story about parents complaining about their NRI son and the reply from the NRI son regarding the lovely childhood he had lost because of his parent strictness etc.,
Thanks