Skip to main content

Posts

Showing posts from February, 2005

மு.ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமி

இது காதல் படத்தை பற்றிய விமர்சனம் அல்ல. காதல் படத்தின் விமர்சனங்களை பற்றிய விமர்சனம். சமீபத்தில் 'காதல்' படத்தை பார்தேன். பார்க்க தூண்டியது இரண்டு விமர்சனங்கள். அதற்கு முன் படம் பார்க்காதவர்களுக்கு சின்னக் கதை சுருக்கம். மதுரை. பணக்கார வீட்டுப் பெண். சந்தியா.அப்பா ஒயின் ஷாப் ஓனர். +2 படிக்கிறாள். மதுரை. பரத். தெருவோர வொர்க் ஷாப் மெக்கானிக் பையன். இருவரும் காதலிக்கிறார்கள். சென்னைக்கு ஓடிப்போகிறார்கள். கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள். பெண்ணின் அப்பாவால் பரத் அடித்துத் துவைத்துக் கிழிக்கப்படுகிறார். அவனை சந்தியா தாலியைக் கழட்டி பரத்தை காப்பாத்துகிறார். சிலவருடம் கழித்து சந்தியா பரத்தை பையித்தியமாக பார்க்கிறாள் .கதறுகிறாள். இதைப் பார்த்த சந்தியாவின் இரண்டாவது கணவன். இருவரையும் அழைத்துச் செல்கிறான். அங்கே ஒரு பெரியார் சிலை லாங் ஷாட்டில் வருகிறது. படம் ஆரம்பித்த உடனேயே கிளைமாக்ஸ் காட்சிக்கு காத்திருந்தேன். காரணம் இரண்டு விமர்சனங்கள்...அதுவும் கடைசி காட்சியில் லாங்ஷாட்டில் தெரிந்த அந்தப் பெரியாரின் சிலையை பற்றி ... 1. புதிய பார்வை(ஜனவரி 2005) இதழில் வந்த 'மண்ணின் கதை' என்ற தலை

பெண்களூர்-0 5

Old comments from my previous Blog Ippo theriyudhu sir. Bangalore la mattum yaen indha pasanga ivlo kadalai podaraanga appadinu. Ellam indha maNNin magimai :-) By F e r r a r i, at Tue Feb 22, 05:04:34 PM IST   பிரபு, உங்கள் ஆராய்ச்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது ;-) தேசிகன் By Desikan, at Tue Feb 22, 05:19:45 PM IST   Desikan, Informative and also humorous :-) how many more 'peNgalUr' articles are you planning? Keep writing! 'Kadalai' reminded me of my good old GCT days :-( என்றென்றும் அன்புடன் பாலா By Anonymous, at Tue Feb 22, 05:46:08 PM IST   தேசி, ஸ்பெல்லிங் மிஷ்டேக், அது "பெந்த காளு" - "கள்ளே காளு" என்றால் வேர்கடலை உஷா By Anonymous, at Tue Feb 22, 06:08:55 PM IST   உஷா முந்திக் கொண்டார். பெந்தக்காளூர் என்பதே சரி. அப்புறம், கள்ளே காளு இல்லை. கட்லே காளு! [உச்சரிப்பு: kadle kaaLu] பெங்களூர் வரும் இளைஞர்களுக்கு ஏதோ நம்மாலான உதவி! :-) By சுபமூகா, at Tue Feb 22, 07:31:35 PM IST   உஷா, சுபமூகா, திருத்தியதற்கு நன்றி. தேசிகன். By Desikan, at Tue Feb 22,

ஏ.கே.ராமானுஜம் ஓர் அறிமுகம்

ஏ.கே.ராமானுஜம் ஓர் அறிமுகம் - தெ. மதுசூதனன் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட நவீன வளர்ச்சிகளை உள்வாங்கிக் கொண்டவராகவே ஏ.கே.ராமாநுஜம் வளர்ந்து வந்தார். இவர் மைசூரில் 1929 ல் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். பின்னர் மொழியியல் துறையின் பிடிப்பு ஆர்வம் கொண்டு தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டார். சிக்காக்கோ பல்கலைக் கழகத்தில் தெற்காசிய மொழிகள் மற்றும் பண்பாடு, மொழியியல் துறைகளில் பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார். இதன் பின்னரே ஏ.கே.ஆரின் ஆர்வத்துக்கும் விருப்பத்துக்கும் அமைய அவரது புலமையும் ஆளுமையும் தக்கவாறு இணைந்து புதுப் பரிணாமங்கள் துலங்க வெளிப்பட்டது. சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் சமூக சிந்தனைக்குழுவின் ஓர் உறுப்பினராகவும் திகழ்ந்தார். மேலும் ஹார்வர்ட், கலிபோர்னியா, மெக்ஸிகன், பெர்கிலியே, பரோடா, விஸ்கான்ஸின் ஆகிய பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியாகவும் இருக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றார். ஆங்கிலம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள புலமை அவரது பன்முக ஆற்றல் மேலும் சிறப்புற்று விளங்க காரணமாயிற்று. தமிழை தமிழரல்லாதோர் மத்தியில் அறிமுகம் ச

ரயில் பிரயாணத்தின் கதை – ரயில் பயணங்களில்

ரயில் பிரயாணத்தின் கதை எஸ்.வி. ராமகிருஷ்ணன் எனக்கு விவரம் வந்தபின் அமைந்த முதல் நீண்ட ரயில் பிரயாணம் 1945ஆம் ஆண்டில். அப்போதெல்லாம் ரயில் என்றால் நிஜமாகவே "புகைவண்டி.' அதாவது குப்குப்பென்று புகை விட்டுக் கொண்டு சிறுவர்களின் (ஏன், பெரியவர்களின்கூட) கற்பனையைத் தூண்டிவிடும், நிலக்கரியை எரித்துத் தீயாக்கும் நீராவி வண்டி. மலையாளத்தில் அதன் பெயரே தீவண்டிதான். நமது இலங்கைச் சகோதரர்கள் யாழ்ப்பாணத்துக்கே உரித்தான அழகுத் தமிழில் அதைப் புகை இரதம் என்று அழைக்கிறார்கள். அந்தக் காலத்தில் ரயில் வண்டியில் மூன்று வகுப்புகள் இருந்தன. முதல் வகுப்பு என்பது பலருக்கும் எட்டாக்கை . . . அதாவது மிகப்பெரும்பாலானோர்க்கு அப்பாற்பட்டதொரு சங்கதி. வெள்ளைக்கார துரைகளும் ஐ.ஸி.எஸ். அதிகாரிகளும் இந்தியர்களில் ஜமீன்தார்களும் அதில் பிரயாணம் செய்தார்கள். இரண்டாம் வகுப்பு என்பதும் (கடந்த பத்தாண்டுகளில் ஏறக் குறையக் காணாமலேயே போய்விட்ட இன்றைய முதல் வகுப்பின் முந்தைய அவதாரம்) அன்றைய ரூபாய் மதிப்பின்படி மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்பட்டது. செல்வந்தர்கள் மற்றும் உயர் மத்திய வகுப்பினரில் சிலருமே அதில் பயணித்தனர

அது அந்தக் காலம்

சமீபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களைத் தேடி வாங்கினேன். அப்படி வாங்கிய புத்தகங்களில் "அது அந்தக் காலம்" என்ற புத்தமும் ஒன்று. நான்கு மாதம் என்று நினைக்கிறேன். உயிர்மையில் எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்கள் "ரயில் பிரயாணத்தின் கதை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். மிகவும் நல்ல கட்டுரை. அடுத்த மாதம் அசோகமித்திரன் "இரயில் பயணங்களில்" என்று அதைத் தெடர்ந்து எழுதினார். இது ஒரு போனஸாக அமைந்தது. நண்பர் மனுஷ்ய புத்திரனிடம் எஸ்.வி.ராமகிருஷ்ணனின் மற்ற கட்டுரைகள் கிடைக்குமா என்று விசாரித்ததில், இவரின் கட்டுரை தொகுப்பு ஜனவரியில் வரவிருப்பதாகச் சொன்னார். எஸ்.வி.ராமகிருஷ்ணன் பற்றி ... எஸ்.வி.ராமகிருஷ்ணன் 1936இல் கோவை மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தவர். சரித்திரமும் சட்டமும் பயின்ற ராமகிருஷ்ணன் சுங்க ஆனையாளராக இந்தியாவின் பல பகுதிகளிலும் பணிபுரிந்து, முதன்மை ஆனணயாராக ஓய்வுபெற்றார். தற்போது ஹைதராபாத்தில் வசித்துவருகிறார். தமிழின் முன்னணி இதழ்களில் கடந்தகால இந்தியாவைச் சித்தரிக்கும் கட்டுரைகளை எழுதியுள்ள இவரது முதல் கட்டுரைத் தொகுப்பு "அது அந்த காலம்&qu

பெண்களூர்-0 4

  பிரபு விரித்த பிஸ்கட் வலை நண்பர் பிரபு பெங்களூர் வாசி. போன மாதம் சென்னை மியூசிக் அகாடமியில் ஒரு விழாவில் அவரை சந்தித்தேன். கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நான் சில கடி ஜோக்ஸ் சொல்லிக்கொண்டிருந்தேன். "இதோ வரேன்" என்று வெளியில் போனவர், இரண்டு பிஸ்கட் (Milk Bikis) பாக்கெட்டுடன் வந்தார். எனக்கு இரண்டு பிஸ்கட் கொடுத்தார். சில வாரங்களுக்கு முன் பெங்களூர் நாய்கள் பற்றி நான் எழுதியது நினைவிருக்கலாம். அதற்கு பிரபு தன் வலைப்பதிவில் பெங்களூர் நாய்கள் கடிக்காமலிருக்க தானும் பிஸ்கட் (Milk Bikis) போடுவதாக எழுதியிருந்தார் . எனக்கு அன்று ஏன் பிஸ்கட் கொடுத்தார் என்று அப்போது புரியவில்லை. பிரபுவிடம் ஒரு செல் போன் இருக்கிறது ( நோக்கியா 6230 ). அதில் பாட்டு கேட்கிறார், ஈமெயில் பார்க்கிறார். கூகிளில் ஏதாவது தேடுகிறார். பக்கத்தில் இருப்பவரை படம் பிடிக்கிறார். வீடியோ எடுக்கிறார் ( ஜாக்கிரதையாக இருக்கணும்! ). கீதாஞ்சலி சீரியல் பார்க்கிறார். எப்பொழுதாவது போன் பேசுகிறார். சாம்சங்கில் ஒரு மாடல்( SCH-S310 ) வந்திருக்கிறது. 'செல் போனை ஆட்டினாலே எல்லா வேலையும் செய்கிறது அதை வாங்கணும்' என்ற

ஏஞ்சல் அனாமிகா

தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் என மூன்று இனத்தவர்கள் வாழும் இலங்கையில் சுனாமியால் எல்லோருக்குமே பாதிப்புதான். பாதிப்புகள் என்னென்ன, இறந்தவர்கள் எத்தனை பேர் என அரசால் இன்னமும் முறையாக கணக்கெடுக்க முடியாத அளவுக்கு பிரச்னை. பாதிக்கப்பட்டதில் பாதி பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அரசுத்தரப்பு, புலிகள்தரப்பு என ஒவ்வொருவரும் வேறுவேறு விதமாக சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். உண்மையில் அங்கு நடந்தது என்ன? சுனாமி பாதிப்புகளுக்கு நேரடி சாட்சியாக இருந்த பேராசிரியர் பாலசுகுமாரை சந்தித்துப் பேசினோம். பாலசுகுமார் மட்டக்களப்பில் இருக்கும் கிழக்கு பல்கலைக் கழகத்தில் கலைகலாசார பீடத்தின் தலைவராக இருக் கிறார். பிரபல எழுத்தாளரும், இலங்கை நாடக அரங்கில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவருமான அவர் சொந்த வேலையாக தமிழகம் வந்திருந்த போதுதான் சந்தித்தோம். சுனாமிக்கு சாட்சியாக இருந்தது மட்டுமின்றி, அதில் சொந்த இழப்புகளையும் சந்தித்தவர் பாலசுகுமார். தன் ஒரே செல்ல மகளை சுனாமிக்கு இழந்தவர். மனைவி பிரமீளா செத்துப்பிழைத்தவர். அந்தக் கொடூரமான நிமிடங்களைப் பற்றி இப்போது பேசும்போதும் கலங்குகிறார். ‘‘அன்றைக்கு

City Tour

Nagar Valam (1976), Sci-Fi of Sujatha was in limelight during the Tsunami attack. Two weeks back an English translation of the story appeared in Sunday issue of The Indian Express. The same is reproduced in my blog. Ranga Rengarajan(Sujatha’s son) has done the translation. City Tour That craft was very big. But we couldn’t call it a ship. A big craft built for the pleasures of its passengers. In the upper deck amongst comfortably standing, sitting, basking in the sun,lazily swimming in a moon-shaped pool people was Aathma waiting for Nithya. Not really paying any attention to the book in his hand… he kept glancing at pretty Nithya who was visible every now and then. We couldn’t tell that the craft was going very fast. Powered by a nuclear power plant in its belly it kept floating on an air cushion. For Aathma this trip was an important event in his life… In eleven minutes the craft will reach Chennai. Chennai! His ancestral place! His great-great-great grandfather’s… f