Skip to main content

Posts

Showing posts from 2014

வணக்கம் சென்னை - 5

  திடீரென்று ஒரு நாள் பாரிஸ் கார்னரை ஒரு ரவுண்ட் அடிக்கலாம் என்று புறப்பட்டேன். பாரிஸ் கார்னர், எலிஃபெண்ட் கேட், பிராட்வே, பூக்கடை, சௌகார்பேட்டை, ஜார்ஜ் டவுன் என்று பல இடங்கள் ஒரே இடத்தைக் குறிப்பிடுகிறது என்று நினைக்கிறேன். இதே மாதிரி சென்னையில் வேறு இடங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த கடைகளின் அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது. ஒரு தெரு முழுக்க செண்ட் விற்பனை, மற்றொரு தெரு முழுக்க பாத்திரக்கடை; ஜவுளி கடை, நகை என்று தெருவிற்கு தெரு வித்தியாசமாக இருக்கிறது.  பைராகி மடம் என்று அழைக்கப்படும் பிரசன்ன வேங்கடேச பெருமாள்  கோயிலை அந்த கோயில் எதிர்த்த மாதிரி இருப்பவர்களுக்கு கூட தெரிவதில்லை. 400 வருடம் பழமை மிகுந்த இந்தக் கோயில் அங்கே வசிக்கும் மார்வாடி, சேட் உபயத்தில் ஸ்ரீநிவாசர் நன்றாக இருக்கிறார். அர்ச்சகர் புன்னகையுடன் எல்லோரையும் தங்கள் வீட்டுக்கு வரவேற்பதைப் போல வரவேற்று பெருமாள் சேவை செய்து வைக்கிறார். அர்ச்சனையை ராகத்துடன் பாடி அசத்துக்கிறார். கோயிலில் இருக்கும் ஆண்டாள் கொள்ளை அழகு. நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். திருப்பதிக்கே லட்டு மாதிரி திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு இங்க

திருச்சிடா - 2

2007ல் சுஜாதாவுடன் திருச்சி மலைக்கோட்டை ரயிலில் பயணம் செய்த பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் மலைக்கோட்டை ரயிலில் கடந்த வாரம் திருச்சிக்குச் சென்றேன். சென்டரல் ஸ்டேஷனை விட எக்மோர் சுத்தமாக இருக்கிறது. நிறைய பேர் ‘ரயிலில் நீர்’ வாங்காமல் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்ததைப் பார்த்தேன். எக்மோர் ஸ்டேஷனில் எல்.ஈ.டி. அறிவிப்புத்திரை வைரம் போல ஜொலிக்கிறது. ரயில் பெட்டிகள் சுத்தமாக, மொபைல் சார்ஜ் செய்ய வசதி எல்லாம் எனக்குப் புதுசு. மாம்பலம் வரும் முன்பே இளைஞர்களின் செல்ஃபோனில் படம் ஆரம்பித்து முதல் பாட்டு வந்துவிடுகிறது. வழக்கம் போல், ஸ்ரீரங்கத்துக்குப் பிறகு ராக்போர்ட் எஸ்பிரஸ் தவழ்ந்து திருச்சி ஜங்ஷன் வந்து சேருகிறது. முகமூடி அணிந்துகொண்டு பணிப் பெண்கள் சுத்தமான ஸ்டேஷனை இன்னும் சுத்தமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். திருச்சி அவ்வளவாக மாறவில்லை. இன்னுமும் மெயின்கார்ட் கேட்டிலிருந்து வரும் பேருந்துகள், கோர்ட் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் பிள்ளையார் கோயிலோடு ஏமாற்றிவிட்டு போகிறது. பின்னாடி ஏதாவது பஸ் வந்தால் இரண்டு கண்டக்டர்களும் விசிலில் பேச, பஸ் அசுர வேகத்தில் பறக்கிற

வணக்கம் சென்னை - 4

சென்னையில் பண்பலை வரிசையில் பாப்புலர், பிந்து அப்பளம் எல்லாம் நமத்துப் போகும் அளவுக்கு தீவாவளி சமயம் மழை அடித்தது. தீவாவளி முடிந்து பெங்களூரிலிருந்து சென்னை திரும்பிய போது செண்டரல் ஸ்டேஷனில் ஓர் இடத்தில் நீர்வீழ்ச்சி போல ஜலம் கொட்டிக்கொண்டிருந்தது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்கள் நியூஸ்பேப்பரை கீழே விரித்துத் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். வெளியே ”ஆட்டோ வேண்டுமா?” என்று கேட்ட அந்த குங்குமப் பொட்டுக்காரரிடம் “தி.நகர்” என்று சொன்னவுடன் பதில் பேசாமல், எனக்கு பின் வந்தவரிடம் ஆட்டோ வேணுமா? என்று கேட்கப் போய்விட்டார். அடுத்து வந்தவர் ”800 ஆகும் சார் தி.நகர் முழுக்க ஒரே தண்ணி" என்றார் சென்னையில் இந்த சாதாரண மழைக்கே ராஜ்பவன் செல்லும் சாலை ’ஐ’ படத்தில் விக்ரம் மூஞ்சி போல ஆகிவிட்டது. மற்ற இடங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு வாரத்துக்கு முன் அதிகாலை தி.நகர் நாயர் சாலையில் சைகிள் ஓட்டிக்கொண்டு போன போது, போலீஸ் என்னை தடுத்தார்கள். பயத்தில் வேர்த்துவிட்டது என்ன விஷயம் என்று கேட்டதற்கு அங்கே 8x8 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்ட இடத்தை காண்பித்தார். நல்ல வேளை யாருக்கும் ஒன்ற

ஆழ்வார்கள் விஜயம்

ஒன்றாம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு ஆழ்வார்கள் அறிமுகமானார்கள். அந்த வயதில், திருப்பாவை முதல் இரண்டு பாடலும், கடைசி இரண்டு பாடலும் மனனம். அப்பாவுடன் சைக்கிளின் முன்சீட்டில் உட்கார்ந்து பயணிக்கும் போது, திருப்பாவை, ஆழ்வார்களின் திருநட்சத்திரம், அவர்களுடைய அவதார ஸ்தலம், அவர்களைப் பற்றிய கதைகள் எல்லாம் சொல்லிக்கொண்டே வருவார். கல்லூரி நாள்களிலும் தொடர்ந்து ஆழ்வார்களின் பாசுரங்களில் உள்ள அழகு, பக்தி பற்றிய பேச்சு, அப்பாவுடன் அவதார ஸ்தல விஜயம் என ஆழ்வார்கள் கூடவே வந்தார்கள். ஸ்ரீரங்கத்தில் ஒரு முறை (இருபது வருடம் இருக்கும்) வைகுண்ட ஏகாதசி பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தில் எல்லா ஆழ்வார்களையும் வரிசையாகப் பார்த்த போது அதுபோலவே வீட்டிலும் சின்னதாக மாடல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அதே மாதிரி மாடல் செய்ய-- கூகிள் இல்லாத காலத்தில்-- ஆழ்வார்கள் அவதார ஸ்தலத்தில் உள்ள உற்சவர் படங்களை சேகரிக்கத் தொடங்கினேன். பதினாறு வருடங்கள் முன்பிருந்தே ஆழ்வார்களின் அவதார ஸ்தலத்தில் உள்ளது போலவே சின்னதாக யார் செய்து கொடுப்பார்கள் என்று தேடத் தொடங்கினேன். ஆழ்வார்கள் கோஷ்டி பல இடங்கள

பகல் வேஷம்

வெயில் இல்லாத இன்று காலை ’ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா படங்களை பார்த்துக்கொண்டு இருந்தபோது வெளியே கானம் ஒன்று கேட்டது. ராம கானம். அனுமாரை தவிர இவ்வளவு நல்ல ராம கானத்தை யார் பாட முடியும் என்று வெளியே பார்த்தபோது அனுமாரே பாடிக்கொண்டு இருந்தார். காலில் சலங்கை, பிளாஸ்டிக் மூக்கு, ஜிகினா பேப்பர் கீரிடம், தாடிக்கு ஏதோ புசுபுசு துணி, நெற்றியில் பச்சை பெயிண்ட் என்று அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுத்து வந்தார் அவர். அவர் அடுத்த வீட்டுக்கு சென்ற பிறகும் அவர் குரலின் வசீகரம் என்னை இழுத்தது. அவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் வந்து அவரை தேடிக்கொண்டு சென்றேன். தேடுவது கஷ்டமாக இல்லை. அவர் குரல் வந்த திசையை நோக்கி சென்றேன்.

வணக்கம் சென்னை - 3

சென்னை வெயிலும் வேர்வையும் பழகிவிட்டது. சினிமாக் கதாநாயகன் பாடல் காட்சியில் விதவிதமாக உடை மாற்றுவது போல வேர்த்துக்கொட்டும் போது மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த முறை நான் கவனித்த சில விஷயங்கள். இரண்டு இலக்கியம் ஒரு ஆன்மீகம் என்று மூன்று விழாக்களுக்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் விழாவில் என் பக்கத்தில் உட்கார்தவர் கை பேசியில் பேசியது பத்து அடி சுற்றளவில் உட்கார்ந்த எல்லோருக்கும் கேட்டது. மறுமுனை என்ன சொன்னது என்று தெரியாது. ஆனால் இவர் பேசியது இது தான்.

தூது சென்ற தூதுவளை

தூதுவளை கொடி போன வாரம் தூதுவளை கீரை ( இதன் தாவரப் பெயர் Solanum trilobatum என்பதாகும். செடி முழுக்க ஏன் இலையில் கூட முட்கள் இருக்கும்) சென்னையில் எங்கே கிடைக்கும் என்று விசாரிக்க தொடங்கினேன். “மைலாப்பூர் போங்க சார் அங்கே தான் எல்லாம் கிடைக்கும்” “சைதாப்பேட்டையிலே டிரை பண்ணுங்களேன்?” “பெஸ்ட் திருவல்லிக்கேணி கங்கனா மண்டபம் தான் சார்” கடைசியில் தி.நகர் மார்கெட்டில் ஒரு பாட்டியிடம் கேட்க “முள்ளு அதிகம்.. இப்ப எல்லாம் பறிப்பதற்கு ஆள் இல்லை...கஷ்டம், நாளைக்கு வாங்க” அடுத்த நாள் ஒரு பாக்கெட் நிறைய தூதுவளை கீரையை தருவித்துத் தந்தார். “யாருக்காவது சளி, இருமலா ?” “இல்லை இது ஆளவந்தாருக்கு” என்றேன். ஆளவந்தாருக்கும் தூதுவளைக்கு என்ன சம்பந்தம் ? ஆளவந்தார் வாழி திருமாமத்தில் ”பச்சை இட்ட ராமர் பதம் பகருமவன் வாழியே” என்ற ஒரு வரி வருகிறது. அதற்கு என்ன அர்த்தம் என்று பார்க்கும் முன் அவர் சரித்திரத்தின் ஒரு பகுதியை சுருக்கமாக பார்க்கலாம்: ஆளவந்தார், காட்டுமன்னார் கோயில் ஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாதமுனிகள

வணக்கம் சென்னை - 2

ஒரு மாலை, ரங்கநாதன் தெரு அன்பழகன் பழக்கடை முதல் ’தாயார் டைரி’ வரை ஊர்ந்து சென்றேன். பிளாஸ்டிக், துணி, மக்கள் என்று ரங்கநாதன் தெருவை சுலபமாக வகைப்படுத்திவிடலாம். கூண்டு மாதிரி இருக்கும் தாயார் டைரி கடையில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்று கடைக்காரருக்கே தெரியுமா என்பது சந்தேகம். ஒரே டிசைனில் புடவை கட்டிய பெண்கள் ஜவுளி கடைகளுக்கு முன் வடை, போண்டா, அல்வா விற்க தொடங்கியிருப்பது புதுசு. தி.நகர் முழுவதும் இப்போது ’சாஃப்டி’ ஐஸ்கிரிம் கடைகளும் பக்கத்திலேயே ஸ்வீட் கார்ன், லெமன் சோடா கடைகளும் நிறைய முளைத்திருக்கின்றன. பனகல் பூங்காவில் மகிழம்பூ மரம் ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தேன். யாராவது பனகல் பூங்காவில் இருக்கும் மரங்களிலெல்லாம் அதன் பெயர்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்கும். பனகல், நடசேன், ஜீவா என்று எந்தப் பூங்காவிற்குச் சென்றாலும் காலையில் மக்கள் ஊர்வலமாக நடைபயிற்சி செய்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் சிக்னல் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மதியம் பனகல் பூங்காவை மூடிவிடுகிறார்கள்! சென்ற வாரம் காலை பனகல் பூங்காவில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்த போது “எப்படி சார் இருக்கீங்க?” என்ற

வணக்கம் சென்னை - 1

கடந்த சில வாரங்களாகச் சென்னை வாசம். பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்றாலும், நுழையும் எல்லாச் சாலைகளிலும் ஒரு தடுப்பு வைத்து ஒத்தையடிப் பாதையாகவோ, அல்லது அம்பு குறிப் போட்டு ஒரு வழிப்பாதையாகவோ மாற்றுவழியில் திருப்பிவிடுகிறார்கள். மெட்ரோ, மேம்பாலம் பழுது என்று ஏதாவது காரணம் இருக்கிறது. கடைசியாக பசுல்லா சாலையில் திருப்பிவிடப்பட்ட போது அங்கிருந்த சங்கீதா ஹோட்டலைக் காணவில்லை. பக்கத்தில் இருக்கும் மரத்துக்குக் கீழே “மெட்ராஸ் காஃபி ஹவுஸ்” என்று சின்னதாக முளைத்திருக்கிறது. சென்னை பெங்களூர் நெடுஞ்சாலை முழுவதும், ”கும்பகோணம் காபி” கடை இறைந்து கிடைக்கிறது. யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்று கண்டுபிடிப்பது கஷ்டம். ஐயங்கார் பேக்கரி, தலப்பாக்கட்டி பிரியாணி, கோவை பழமுதிர் நிலையம் எல்லாம் இந்த வகை தான். அலுவலகம் செல்லும் போது பண்பலையில் தினமும் ஒரு முறையாவது கோச்சடையான் -மெதுவாகத்தான்; சைவம் - அழகு பாடல்களைக் கேட்டுவிட முடிகிறது. போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பித்தாலும் மஞ்சப்பை ”பாத்து பாத்து” பாடலிருந்து தப்பிப்பது கஷ்டம். கொசுக்களை விரட்டும் புதிய LG ஏஸி; ”கேரியர் ஏஸி பொருத்திய ராசி நான

பொன்னியின் செல்வன் - நாடகம்

அக்னி வெயில் நாளையுடன் முடிவடைகிறது என்பதை நம்பிச் சில வாரங்களுக்கு முன் சென்னை வந்த போது தலையில் தோசை வார்க்கும் அளவிற்கு வெயில் இருந்தது. அலுவலகம் செல்லும் வழி எல்லாம் பொன்னியின் செல்வன் நாடகம் பற்றி விளம்பரத்தைப் பார்த்து டிக்கெட் முன்பதிவுச் செய்யலாம் என்று முயற்சி செய்த போது டிக்கெட் எல்லாம் தீர்ந்துவிட்டது என்றார்கள். எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்று நேற்று மியூசிக் அகாடமிக்கு சென்ற போது டிக்கெட் கவுண்டர் பக்கம் ஒருவர் என்னை அணுகி “என்ன சார் டிக்கெட் வேணுமா ? என்றார் “ஆமாம்” “கொஞ்சம் எக்ஸ்டரா ஆகும்” “அவ்வளவு ?” “பார்த்துக் கொடுங்க... என்று ஒரு டிக்கெட் கொடுத்தார்” ( எவ்வளவு கொடுத்தேன் என்பது இங்கே தேவையில்லை என்பதால் அதை பற்றி நோ கமெண்ட்ஸ்) பிளக்கில் டிக்கெட் வாங்குவது குற்றம், படித்தவர்கள் இப்படிச் செய்யலாமா என்று உள் மனது சொன்னாலும், கல்கியின் பொன்னியின் செல்வனை பார்க்க வேண்டும் என்ற ஆவலால் இந்தத் தப்பை செய்தேன். நாடகம் எப்படி இருக்கும்... ஐந்து பாகங்களை எப்படிச் சுருக்க போகிறார்கள், காட்சி அமைப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வி வந்தவர்கள் பலர் மனதில் ஓடுவதைப

கையெழுத்து

தினமும் பல ஆச்சரியங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. அவற்றை கவனிப்பதில்லை.சலூனில் இத்துணூண்டு க்ரீமைக் கொண்டு ஷேவிங் பிரஷ்ஷால் தேய்க்கத் தேய்க்க அட்ஷயப் பாத்திரத்திலிருந்து வருவது போல நுரை வருவது; நூலில் சுற்றப்பட்ட சமோசா கோபுரத்தை கீழே விழாமல் எலக்டரிக் ரயிலில் கூட்டத்தின் மத்தியில் விற்கும் அந்தச் சின்னப் பையன்; எப்போது போனாலும் சரவணபவன் சாம்பார் ஒரே மாதிரி இருப்பது; பர்வீன் சுல்தானா எல்லா ஆக்டேவிலும் ஸ்ருதி பிசகாமல் பாடுவது... புத்தகக் கண்காட்சிக்குப் போன போது இதே மாதிரி இன்னொரு ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டது.

தற்செயல்

சென்னையில் ஒரு நாள்

திங்கள் அன்று சென்னயில் இருந்தேன். புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் முன் ஏழே முக்காலுக்கு ராயர்ஸ் கஃபேவுக்கு ரொம்ப நாள் கழித்துச் சென்றேன். பெரிய க்யூ நின்று கொண்டு இருந்தது. முதல் பந்தியிலேயே இடம் கிடைத்தது. முதலில் எல்லோருக்கும் கப்பில் கெட்டிச் சட்னி தருகிறார்கள், மற்றபடி எதுவும் மாறவில்லை. சுடசுடப் பொங்கல், வடை, இட்லி என்று சாப்பிட்டுவிட்டுப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். Tamil Calendar ! நுழைந்தவுடன் ஒரே மலைப்பாக இருந்தது. பல வருஷங்கள் முன்பு புத்தகக் கண்காட்சியில் பதிப்பகங்கள் சார்ந்து ஸ்டால்கள் இருக்கும். ஆனால் தற்போது பல ஸ்டால்களில் பல பதிப்பகங்களின் புத்தகங்கள் விசிரி போல அடுக்கி வைத்திருக்கிறார்கள். நீயா நானா கோபினாத் பல ஸ்டால்களில் சிரித்துக்கொண்டு இருக்கிறார். பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு மலிவாகத் தருகிறாரார்கள். பதிப்பகங்கள் சார்ந்த ஸ்டால்களில் பார்த்திவிட்டு மினி சூப்பர் மார்கெட் ஸ்டால்களைச் சுலபமாகக் கடந்து சென்றேன். கீதா பிரஸ் ஹரன் பிரசன்னாவை கிழக்குப் பதிப்பகத்தில் சந்தித்தேன். பார்த்தவுடன் சிரித

வண்ணங்கள் எண்ணங்கள் - பெங்களூர் சித்திர சந்தை 2014

பெங்களூரில் வருடா வருடம் ’சித்திர சந்தே’ என்று அழைக்கப்படும் ஓவியக் கண்காட்சி கர்நாடகா சித்ரகலா பரிக்ஷத் வருடா வருடம் நடத்திவருகிறது. குமர க்ருபா சாலையை முழுவதும் கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓவியர்கள் பங்கேற்கிறார்கள். சாலை இருபுறமும் மரங்கள் சூழ்ந்திருக்க மக்கள் கூட்டமாக குடும்பத்துடன் வந்து ரசிக்கிறார்கள். காண கண் கோடி வேண்டும் என்று சொல்லுவது இந்த கண்காட்சிக்கு பொருந்தும். மூன்று மணி நேரம் சாப்பாட்டை மறந்து பல சித்திரங்களை பார்த்துக்கொண்டு, கூடவே பொரி கடலை, குச்சி ஐஸ் சாப்பிட்டது இனிய அனுபவம். சின்ன வயது முதல் ஓவியத்தில் ஆர்வம் கொண் ட எனக்கு இந்த கண்காட்சியை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசை, ஆனால் ஒவ்வொரு வருடமும் கண்காட்சி முடிந்த பிறகு மறுநாள் நாளிதழில் வரும் செய்தியை பார்க்கும் போது ‘அடடே’ மிஸ் செய்துவிட்டோம் என்று வருந்துவேன். இந்த வருடம் நினைவு வைத்துக்கொண்டு சென்று வந்தேன். .. எவ்வளவு வண்ணங்கள்...எவ்வளவு எண்ணங்கள் !

பீபீ

மற்ற சேனல்களை காட்டிலும் தூர்தர்ஷன் பொதிகையில் சில சமயம் நல்ல நிகழ்ச்சிகள் வருவதுண்டு. இன்று விசாகா ஹரி குருவாயூரப்பன் பற்றி மார்கழி மஹா உற்சவத்தில் உருகிக்கொண்டு இருந்த போது நடுவில் ஒரு விளம்பரம் இடைவேளையின் போது பொதிகைக்கு தாவினேன். வீண் போகவில்லை.  நாதஸ்வரத்தில் சொருகப்பட்டிருக்கும் தக்கைக்கு பெயர் ”பீபீ” என்று இவ்வளவு நாளாக நினைத்துக்கொண்டு இருந்தேன். அதன் பெயர் சீவாளி. அதை எப்படி செய்கிறார்கள் என்று நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது.  திருவாரூர் பக்கம் வாய்க்காலை கடந்து அங்கே விளைந்திருக்கும் நாணல் செடிகளில் கிட்டதட்ட மெலிதான பிரம்பு மாதிரி செடிகளை எடுத்து வந்து அதை ஒரு மாதம் வெயிலில் காய வைத்து பிறகு வீட்டு பரணில் ஒரு வருடம் போட்டு வைக்கிறார்கள். ஒரு வருடத்துக்கு பிறகு அதை எடுத்து வேண்டாத பகுதிகளை நீக்கிவிட்டு தண்ணீரில் ஊற போட்டு பிறகு சின்ன கரும்பு பிழியும் மிஷின் போன்ற இயந்திரத்தில் பட்டை அடித்து ( நசுக்கி) அவற்றை இருக்கமாக கட்டாக சணல் நூலில் கட்டி, பெரிய அண்டாவில் நெல்லை புழுங்க போட்டு அதில் இந்த கட்டுகளையும் சேர்த்து கொதிக்க வைக்கிறார்கள். பிறகு அதை எடுத்து பிரித்து சோற்று