Skip to main content

Posts

Showing posts from August, 2018

மீசை

ஓர் நவராத்திரி தினம். லேலையூர் அஹோபில மடத்தில் இருந்தேன். இரவு கிட்டதட்ட 9.45 இருக்கும். அடியேனுடைய ஆசாரியன் (46வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ) அனைவருக்கு நல்லாசி அருளி, அட்சதை, பிரசாதம் தந்துவிட்டு சயனத்துக்குச் சென்றுவிட்டார். ’மயிரே போச்சு’ என்பது சொல் கெட்ட வார்த்தையாகி அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. திருமணம் முடிந்து ஐந்தாம் வருடத்தில், மீசையில் ஒரு வெள்ளை மயிர் எட்டிப்பார்த்தது. அதை வெட்டிவிட்ட பிறகு பல எட்டிப்பார்க்க மூக்கு அடியில் கிட்டதட்ட டால்மேஷன் குட்டிகளாக இருக்க டை, டிரிம் என்று பல முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். “அத்திம்ஸ்” என்று மனைவியின் கசின்ஸ் “அத்திம்பேர்” என்று ’பேர்’ சொல்லிக் கூப்பிடும் போது மீசை மட்டும் இல்லை, காது பக்கமும் டால்மேஷன் குட்டி போட தொண்டங்கியிருந்தது என்று புரிந்துக்கொண்டேன். ”அடடா சேவிக்க முடியாமல் போய்விட்டதே… “ என்று அங்கே இருந்தவர்களிடம் கேட்டேன். “ஆசாரியன் சயனத்துக்கு ( தூங்க ) சென்றிருப்பாரே.... இருங்கள்..” என்று உள்ளே சென்றார். கொஞ்சம் நேரம் கழித்து வெளியே வந்து “சீக்கிரம் வாங்கோ.. “ என்று அழைத்துச் சென்றார

சுஜாதா தேசிகன்

சுஜாதா தேசிகன் ஓர் அன்பர் சில நாள் முன் இன்பாக்ஸில் ‘சுஜாதா தேசிகன்’ என்ற பெயரை நீங்களே வைத்துக்கொண்டீர்களா ? என்றார். சுஜாதா தேசிகன் என்ற பெயர் நானே வைத்துக்கொண்டதில்லை. அதற்கு ஒரு கதை இருக்கு. ரஜினி மாதிரி எழுத்துலகில் சுஜாதா சூப்பர் ஸ்டார். மற்றவர்கள் அவரை போல எழுதினாலும் அவர்கள் நளினி காந்த் மாதிரி தான். ’சுஜாதா தேசிகன்’ என்ற இந்தப் பெயருக்கு ஒரு நீண்ட வாலாறு இருப்பதால் அதை முறைப்படி ஆவணப்’படுத்துவது’ தானே முறை. சுஜாதா, தேசிகன் என்ற இரண்டு பெயர்களையும் விவரிக்க வேண்டியதால் சற்றே பெரிய கட்டுரை. ஞாயிற்றுக்கிழமைகளில் படிப்பது உத்தமம். சுஜாதா தேசிகன் -oOo-.-oOo-.-oOo- -oOo--oOo-

நல்லான் - நாலூரான்

நல்லான் - நாலூரான் இந்த இரண்டு பெயர்களை கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? ஒருவர் நல்லான் இன்னொருவர் பொல்லான். அப்படி உங்களுக்குத் தோன்றினால் இந்தக் கட்டுரையை மேலும் படிக்க வேண்டும். நல்லான் : நல்லான் சக்கரவர்த்தி ஒரு முறை ஆற்றில் மிதந்து வந்த பாகவதர் ஒருவருடைய பிணத்தை எடுத்து இறுதிச் சடங்குகளைச் செய்வித்தார். அவ்வூர் அந்தணர்கள் அவரது செயல் கண்டு அவரைப் பழித்து, ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து அவரை ‘பொல்லான்’ என்று பழித்தனர். பெருமாள் அர்ச்சகர் மூலமாக ஆவேசித்து “நாட்டுக்குப் பொல்லான்; நமக்கு நல்லான்” என்று அவருக்கு சர்டிபிகேட் கொடுத்து அவர் பெருமையை ஊருக்கு உணர்த்தினார். பொல்லான்: கிருமிகண்ட சோழன் அரசவையில் கூரத்தாழ்வான் கண்ணிழப்பதற்கும், பெரியநம்பிகள் கண் மற்றும் உயிரிழப்பதற்கும் நாலூரானே முக்கிய காரணமானவர் என்று குருபரம்பரை மற்றும் கூரேச விஜயம் போன்ற நூல்களில் படித்திருக்கலாம். பெரும்பாலும் நாலூரானை ’இவர்’ என்று சொல்லாமல், அவன், இவன் என்று ஏகவசனத்தில் தான் பலரும் எழுதுகிறார்கள் (அதே போல தான் யாதவபிரகாசரையும் எழுதுவார்கள் ). நாலூரான் பின்விளைவுகளை சற்றும் யோசிக்காமல் சோழ

துணி சொல்லும் கதை

துணி சொல்லும் கதை படத்தில் பார்க்கும் இந்தத் துணியை நூறு ரூபாய் கொடுத்து வாங்கினேன்.  கொடி போல இருக்கிறதா ? உங்கள் ஊகம் சரி தான். வாங்கிய பின் பக்கத்தில் இருந்த ஒருவர் “இதை வைத்துக்கொண்டு என்ன செய்வீங்க? வாட் இஸ் தி யூஸ் ?” என்றார் பதில் கூறினேன். உடனே ஐந்நூறு ரூபாய் கொடுத்து இதே போல ஐந்து வாங்கிக்கொண்டார். அவருக்கு என்ன பதில் சொன்னேன் என்று தெரிந்துகொள்ள மேற்கொண்டு கட்டுரையை படிக்கவும். ”PAN India” என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். PAN - Presence Across Nation என்பதன் சுருக்கம். தமிழில் இந்தியா முழுவதும் என்று சொல்லலாம். கீழே உள்ள ஸ்ரீபராசுரபட்டர் எழுதிய  இந்த ஸ்லோகத்தை PAN இந்தியா ஸ்லோகம் என்றால் மிகையாகாது. ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரி சிம்மாசலவ் ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம் ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம் சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி பயப்படாதீர்கள். ஸ்ரீராமானுஜர் இந்தியாவைச் சுற்றி விஜயம் செய்த பாதையைக் குறிக்கும் ஸ்லோகம் இதில் இருப்பது ஊர்களின் பெயர்கள் தான் - ஸ்ரீரங்கம