Skip to main content

Posts

Showing posts with the label வலம்

கும்மாயம்

 கும்மாயம்   மனித மூளை விசித்திரமானது, அதற்கு விடை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றுக்கு விடை தெரியவில்லை என்றால் ஆழ்மனதில் அந்த விடைக்காகக் காத்துக்கொண்டிருக்கும். எதேர்ச்சையாக விடை கிடைக்கும்போது ஆனந்தப்பட்டு அடுத்த கேள்விக்கான விடையைத் தேடத் தொடங்கும்.    உ.வே.சா அவர்கள் மணிமேகலை என்ற நூலை ஆராய்ந்தபோது அதில் வரும் பல சொற்களுக்கு அவருக்குப் பொருள் கிடைக்கவில்லை. பல புத்தகங்களை ஆராய்ந்தும், பலரிடம் கேட்டும் தெரிந்துகொண்டார். அப்படி ஆராய்ச்சி செய்தபோது மணிமேகலையில் 27வது ‘சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை’யில்   “பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம், இயற்றி” (அடி, 175-6)   என்று ஒரு பகுதியில் ‘கும்மாயம்’ என்ற சொல்லின் பொருள் அவருக்குத் தெரியவில்லை. பலரைக் கேட்டுப்பார்த்தும் பயன் இல்லை.    காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும் என்பது போல, கோயிலும் கோயில் சார்ந்த இடம் கும்பகோணம் என்று சொல்லலாம். பல பிரசித்தி பெற்ற திருகோயில்கள் அங்கே இருக்கின்றன. உ.வே.சா கும்பகோணத்தில் இருந்த சமயம் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் சந்நிதி பட்டாசாரியர் உ.வே.ச...

செண்டலங்காரர் தெட்டபழம்

செண்டலங்காரர் தெட்டபழம்   தமிழில் சுமார் நூறு வார்த்தைகளை மட்டுமே நாம் அன்றாடம் பேசவும் எழுதவும் உபயோகிக்கிறோம். ஆழ்வார்கள் உபயோகித்த வார்த்தைகள் பல ஆயிரம் இருக்கும். நம் சொல்லகராதி (vocabulary) மிகக் குறைவு, ஆதலால் நமக்கு எளிய உரைகள் தேவைப்படுகின்றன. கீழே உள்ள பெரியாழ்வார் பாசுரத்தில் எவ்வளவு வார்த்தை உங்களுக்கு தெரியும் என்று பாருங்கள்.   பருப்பதத்துக் கயல் பொறித்த  பாண்டியர் குலபதி போல்  திருப் பொலிந்த சேவடி என்  சென்னியின் மேல் பொறித்தாய்   எளிய விளக்கம்: மேரு மலையில் தனது கயல் (மீன்) சின்னத்தை வெற்றிக்கு அடையாளமாகப் பொறித்த பாண்டியர் குலத்துப் பேரரசனைப் போன்று அழகு பொலிந்த திருவடிகளை என் தலை மீது அடையாளமாக (பெருமாள்) பொறித்தருளினான் என்று ஆழ்வார் கூறுகிறார். இன்னும் கொஞ்சம் ஆழமாக இந்தப் பாசுரத்தை அனுபவிக்க மேலும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.   பெரியாழ்வார் காலத்தில் மூன்று பாண்டியர்கள் அரசு செய்தார்கள். அவர்கள் முறையே கோச்சடையான், மாறவர்மன், பராந்தகன். பராந்தகன் பரம வைஷ்ணவன். ஆனால் அவன் தந்தை மாறவர்மன் அப்படி அல்ல. பெரியாழ்வார் காலத...

ஓலைப் பத்திரக் கதைகள்

ஓலைப் பத்திரக் கதைகள் சமீபத்தில் திரு உ.வே.சாவின் கட்டுரை தொகுப்பு ஒன்றை படித்தேன். பெரும்பாலும் செவிவழிக் கட்டுரைகள், தனி மனித வாழ்வு சம்பவங்களின் தொகுப்பாக, 18-19ம் நூற்றாண்டு வாழ் தமிழ் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியை ஆவண படுத்துகிறது என்று சொல்லலாம்.   மருத பாண்டியர்கள் வீரத்துக்கு மட்டும் அல்லாமல், பக்தியும், புலவர்களையும், தம் மக்களையும் காப்பாற்றும் குணம் படைத்தவர்கள். அதில் மருத  பாண்டியரைப் பற்றிய ஒரு கர்ண பரம்பரையாக சொல்லப்பட்ட கதை ஒன்றை படித்தேன்.  முள்ளால் எழுதிய ஓலை ! மருத பாண்டியர் தம் இறுதிக் காலத்தில் தங்களைவிட வலியவரான சிலருடைய பகைமைக்கு இலக்கானார்.  பல தந்திரங்கள் செய்து பகைவர்களின் கைகளில் அகப்படமால் தப்பித்தார். ஒரு சமயம் திருக்கோட்டியூர் பெருமாள் கோயிலுக்கு எதிரிலுள்ள மண்டபமொன்றில் தங்கி இருந்தார்.  வலக்கையில் ஒரு கொப்புளம் உண்டாகி அவரை வருத்தியது. பகைவர்கள் ஊர் எல்லைக்குள் வந்துவிட்டார்கள் என்ற செய்தி ஒரு அந்தரங்க வேலையாள் வந்து சொன்ன போது வீரத்தால் அவருடைய இரத்தம் கொதித்தது. ஓர் ஆடையை உடனே கிழித்து அவர் கைக் கொப்புளத்தை இறுகக் கட்டிக்கொ...

பூனைக் கதைகள் | சுஜாதா தேசிகன்

 பூனைக் கதைகள் | சுஜாதா தேசிகன் காலை நடைப் பயிற்சியின் போது பூனை ஒன்று இறந்து கிடந்தது. சில நொடி மௌன அஞ்சலிக்குப் பிறகு கடந்து சென்றேன். நாங்கள் வசிக்கும் இருபது மாடிகள் கொண்ட ஃபிளாட்டில் மொத்தம் ஆயிரத்து ஐந்நூறு குடும்பங்கள் இருக்கின்றன. மதிலுக்குள் ஒரு கிராமம் என்று கூறலாம். குடும்பத்துக்கு இரண்டு காரும் ஒரு குழந்தையும்! பெரும்பாலும் அப்பா அம்மா வேலைக்குச் செல்லும் குடும்பங்கள். அழகிய பூந்தோட்டம் அதில் ஆங்காங்கே பூனைகள் ஓடிக்கொண்டு இருக்கும். குழந்தைகள் அதைத் துரத்திக்கொண்டு விளையாடுவார்கள். சில குழந்தைகள் வீட்டிலிருந்து பால் எடுத்துக்கொண்டு வந்து ஒரு தட்டில் அவற்றுக்குக் கொடுப்பார்கள். அப்பார்ட்மெண்ட் தகவல்களுக்கு ஓர் ஆன்லைன் குழு இருக்கிறது, அதில் ஒருவர் “இன்று இரண்டு இறந்த பூனைகளைப் பார்த்தேன். யாராவது பூனைகளுக்கு விஷம் வைக்கிறார்களா?” என்று கேட்க, இன்னொருவர் “சில நாட்களுக்கும் முன் மூன்று இறந்த பூனைகளைப் பார்த்தேன், ஆக மொத்தம் ஐந்து பூனைகள் இறந்துள்ளது” என்று பதில் கூற, இந்த விஷயம் சூடு பிடித்தது. அப்பார்ட்மெண்ட் அசோசியேஷன் இதைக் குறித்து ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று...

பாரதக் கோவில் !

 பாரதக் கோவில் ! நான் பள்ளியில் படிக்கும்போதுதான் எனக்கு அயோத்தி ஸ்ரீராமர் கோயில் அறிமுகம். என் தந்தையின் நண்பர் ஒரு பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். அவர் அச்சகத்தில் எழுத்துக்களைக் கோத்து வார்த்தையாக்குவதைப் பார்த்திருக்கிறேன். பத்திரிகையில் கிழித்த சிவகாமியின் சபதம் போன்ற கதைகளை பைண்ட் செய்து தருவார். புத்தகம் எப்படி பைண்ட் செய்ய வேண்டும் என்று எனக்குக் கற்றும் கொடுத்தார். பார்க்க மிக ஒல்லியாக ஊசிபோல இருப்பார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இருந்தார்.  அவர் என் இல்லத்துக்கு வரும்போது ‘ராம ஜன்ம பூமி’ பற்றிய பேச்சு ஆரம்பித்துவிடும். என் தந்தை அவரிடம் ‘உனக்கு வீடு மனைவி மக்கள் எல்லாம் இருக்கிறார்கள். போராட்டம் என்று நீ சென்று உனக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களின் நிலைமை என்னாவது?’ என்று அறிவுரை கூறுவார். அவர் தன் சொந்த நிலத்தை யாரோ ஆக்கிரமித்துவிட்டது போலச் சத்தமாகப் பேசுவார்.  ஒருமுறை என் இல்லத்துக்கு வந்து ‘ராமர் கோயில் கட்ட அயோத்திக்குக் கற்கள் அனுப்புகிறோம்’ என்று ரசீதுப் புத்தகத்துடன் வந்து பணம் வாங்கிக்கொண்டு சென்றார். பிறகு அவரை சிலகாலம் காணவில்லை. பிரிண்ட்டிங் பிரஸ...

பராசரன் என்ற இராமப்பிரியன்

பதினோராம் நூற்றாண்டு. ஸ்ரீ ராமானுஜர் தன் குருவான ஆளவந்தாரைப் பார்க்கக் காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு ஓடோடி வருகிறார். வருவதற்குள் ஆளவந்தார் பரமபதித்துவிட,  வட திரு காவிரியில் ஆளவந்தாரின் சரமதிருமேனியை கண்ணீருடன் நோக்கும்போது,  அதில் மூன்று விரல்கள் மட்டும் மடங்கியிருப்பதைக் கவனிக்கிறர்.  அவர் உள்ளத்தில் நிறைவேறாத ஆசை இருந்திருக்கிறது என்று ஒவ்வொரு ஆசையாக நிறைவேற்றுவேன் என்று பிரதிக்கினை செய்கிறார். ஆளவந்தாரின் விரல்கள் ஒவ்வொன்றாக விரிகிறது..  அதில் ஒரு ஆசை : “விஷ்ணுபுராணம் அருளிய பராசர மகரிஷியின் பெயரையும், மஹாபாரதத்தை அருளிய அவரது குமாரரான வேத வியாசர் பெயர்களைத் தகுதியுள்ளோருக்குச் சூட்ட வேண்டும்” என்பது.  ஸ்ரீ ராமானுஜர் அவருடைய சிஷ்யரான கூரத்தாழ்வானுடைய புதல்வர்களுக்கு இந்தப் பெயர்களைச் சூட்டினார். ஒருவர் ஸ்ரீ பராசரபட்டர் , இன்னொருவர் ஸ்ரீவேதவியாஸ பட்டர்.  ஸ்ரீரங்கத்தில் பிறந்த ஸ்ரீ பராசர பட்டர் புலமை மிகுந்தவராகவும், ஸ்ரீராமர் மீது அளவு கடந்த பிரேமையும் வைத்திருந்தார். இவருடைய சிஷ்யர்கள் கண்ணனின் குணங்களைச் சொல்லி ஸ்ரீராமர் இப்படிச் செய்தாரா ? என்று ...

மேட்டழகிய சிங்கர் (சிறுகதை)

நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் - ஆண்டாள், நாச்சியார் திருமொழி ஸ்ரீரங்கவாசிகளுக்கே ‘EVS’ சாலையின் விரிவாக்கம் தெரியாது. நமக்கும் அந்தக் கவலை வேண்டாம். இவிஎஸ் சாலையும் வரதாச்சாரி தெருவும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ‘பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா’ என்று அந்தக் காலைவேளையிலும் பிடிவாதமாக அலறிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண தினத்தில் க்ரோமியத்தில் குளிப்பாட்டிய பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள். இறங்கியது ஜெயபாலனும், கண்ணம்மாவும். தூக்கம் மிச்சம் அவர்களின் கண்களில் தெரிந்தது. இறங்கியவுடன் கண்ணம்மாவிற்கு ஸ்ரீரங்கம் கோபுரமும் ஆவின் பால்வண்டிகளும் மூடப்பட்ட ஜன்னல்களும் வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பவர்களும் கண்ணில் பட்டார்கள். “காபித் தண்ணி கிடைக்குமா?” என்றாள் “கிடைக்கும் பேசாம வா!” “உள்ளே அஞ்சு மாசக் குட்டி இருக்கு” என்ற தன் மேடிட்ட வயிற்றைத் தடவிக்கொண்டாள். ஜெயபாலன் அதைக் கவனிக்காமல் காது குடைந்துவிட்டு, தன் வேட்டியை மேலுயர்த்தி பட்டாப்பட்டியிலிருந்து செல்போனை எடுத்து அழுத்தினான். “காபி கிடைக்குமா கேளுங்க.” “சட்... சும்மா இரு..” என்றபோது மறுமுனை ‘சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்’ என்றபோது...