தான் உகந்த திருமேனி எம்பெருமானார் ஸ்ரீரங்கத்துல் கத்ய த்ரயம் சாதித்து, கோயிலில் பல மாறுதல்களை செய்து உயர்ந்து நின்ற சமயம். ஸ்ரீரங்கத்தில் சிலருக்கு அவர் இது மிகுந்த பொறாமையையும், எரிச்சலையும் கொடுத்தது. அந்த அஸுயை அவர்களை கொலை செய்யவும் தூண்டியது. அவரது பிக்ஷையில் விஷம் கலந்து கொடுக்க அதிலிருந்து தப்பினார். அமைதியாக நஞ்சு கலந்த அன்னத்தை திருக்காவிரியில் கரைத்து உபவாசம் மேற்கொண்டார். இதை கேள்விப்பட்ட திருகோட்டியூர் நம்பி உடனே திருவரங்கம் விரைந்தார். தனக்கு உபதேசம் செய்த ஆசாரியரை எதிர்கொண்டு அழைக்க காவேரிக் கரைக்கு எழுந்தருளினார் எம்பெருமானார். கொதிக்கும் வெயிலில் கொதித்துக்கொண்டு இருந்த மணலில் நம்பிகள் திருவடிகளிலே தண்டம் சமர்பித்தார். ஆசாரியன் “எழுந்திரு” என்று சொல்லும் போது தான் எழுந்திருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நம்பியோ ஒன்றும் சொல்லாமல் அப்படியே இருக்க அங்கிருந்த கிடாம்பி ஆச்சான் “ஐயோ இது என்ன ஆசாரிய சிஷ்ய லட்ஷணம் ? நெருப்பில் இட்ட இளந்தளிர்போல சூடு மணலில் கிடக்க அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா ? “ என்று ஓடி பரிவுடன் அவரைத் தூக்கிவிட நம்பி “ஆச்சான், உம்மை போல் அவர் திருமே...