Skip to main content

Posts

Showing posts from July, 2020

2. இராமானுசன் அடி பூமன்னவே - விதை நெல் !

2. இராமானுசன் அடி பூமன்னவே - விதை நெல் !  சில சமயம் ஒரு சாதாரண நிகழ்வு, பெரிய சம்பவங்களை விளைவிக்கிறது. நிகழும்போது அதன் விளைவுகளை நாம் அறிய முடியாது.  ’வை குந்தம் புகுவது மண்ணவர் விதியே ’ என்பதற்கு ஏற்ப ஆழ்வார்கள் எல்லோரும் வைகுந்தத்தை அடைந்தார். அதற்குப் பின் சுமார் 3500 ஆண்டுகள் கழித்து ஒரு நிகழ்வு வீரநாராயண பெருமாள் முன் நிகழ உள்ளது, அதை நிகழ்த்துபவரும் அவரே என்று சொல்லவும் வேண்டுமோ ?  ஆழ்வார்களின் பக்தி நெறியில் ‘தழுவ பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே’ என்று அவர்களைப் பின்பற்றிப் பக்தி நெரியில் வாழ்ந்தவர்கள் பாடி ஆடி வைகுந்தம் அடைந்தார்கள்.  கால போக்கில் ஒரு மரத்தின் கிளை ஒவ்வொன்றாகப் பட்டுவிடுவது போல ஆழ்வார் பாசுரங்கள் மறைய தொடங்கின. ஒரு காலத்தில் வேதத்தைப் பறி கொடுத்தது போல ஆழ்வார்களின் பிரபந்தங்கள் பறிபோயின.  யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம் என்று கண்ணன் கீதையில் எப்பொழுதெல்லாம் தர்மம் தேய்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்த உலகத்து மக்களுக்காக அதை மீட்டுக்கொடுக்க அவதாரமாக வருகிறேன் என்கிறான். இந்த வாக்கியம் சத்தியம்.  அத்தகைய சத்தியத்த

தினமும் கொஞ்சம் தேசிகன் - 5

ஸ்வாமி தேசிகன் பிரபந்த சாரத்தில் ஆண்டாள் என்ற பெயரையோ அல்லது கோதை என்ற பெயரையோ சொல்லாமல் ஆனால் படிக்கும்போது ஒவ்வொரு வரியும் ஆண்டளை என்று நமக்கு உணர்த்தும் ( மற்ற ஆழ்வார்களையும் இப்படியே பாடுகிறார் தேசிகன்).  ஸ்வாமி தேசிகன் எழில் கொஞ்சம் தமிழில் அருளிய பாசுரம்.  இந்த லாக்டவுன் காலத்தில் எந்தத் தமிழாசிரியரையும் தேடிச் செல்ல வேண்டாம். பாசுரம் கீழே இருக்கிறது நீங்களே படித்துப் பார்க்கலாம்.  வேயர் புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம்  மேன்மேலும் மிக விளங்க விட்டு சித்தன்  தூய திருமகளாய் வந்து அரங்கனுக்கு  துழாய் மாலை முடிசூடிக்கொடுத்த மாதே  நேயமுடன் திருப்பாவை பாட்டு ஆறு ஐந்தும்  நீ உரைத்த தையொரு திங்கட்பாமாலை  ஆய புகழ் நூறுடன் நாற்பத்து மூன்றும் அன்புடனே அடியேனுக்கருள்செய் நீயே! இதில்  ' வேயர் புகழ் வில்லிபுத்தூர் ’  என்ற முதல் மூன்று வார்த்தையை எடுத்துக்கொள்ளலாம். இதில் ’ வேயர் புகழ் வில்லிபித்தூர் ’  என்று ஆரம்பிக்கும் வாதையைப் பாருங்கள். இது நாச்சியார் திருமொழியில்  ’ வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை சொல்'   என்று உபயோகித்த வார்த்தை.  ஆண்டாள்  ’ வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் வி

சிறுகதை... சில எண்ணங்கள்...

நல்ல சிறுகதையைப் படித்தவர்கள் அதன் முடிவை நிச்சயம் நினைவில் வைத்திருப்பார்கள். சிறுகதைகள் படிக்கும் வாசகர்கள் பலர் கடைசியில் அந்த எதிர்பாராத திருப்பம், அதில் கிடைக்கும் கிக்கிற்காகவே படிக்கிறார்கள்.   ஜெப்ரி ஆர்ச்சர், சாகி போன்றவர்கள் இதில் மிக பிரபலம் "A Twist in the Tale" என்ற சிறுகதைத் தொகுப்பு தற்போது எல்லா பிளாட்பாரம் கடைகளிலும் கிடைக்கிறது. இன்னும் படிக்கவில்லை என்றால் படித்துவிடுங்கள். ஜெப்ரி ஆர்ச்சர் பெங்களூரில் தந்த பேட்டியிலும் சிறுகதை முடிவைப் பற்றிப் பேசியுள்ளார்.  பல கதைகளின் முடிவுகளைப் பற்றி அவரிடம் பேசியிருக்கிறேன். ஒரு முறை மலைக்கோட்டை ரயிலில் என் கூடப் படித்த நண்பன் டீ விற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்து அதை வைத்து எழுதிய கதை வின்னி. சுஜாதாவிடம் பல அடித்தல் திருத்தல் வாங்கிய கதை இது. முடிவை வைத்துக்கொண்டு எழுதுவது என்பது சுவாரசியமான விஷயம் என்று கற்றுக்கொண்டேன். 'பிச்சை' என்ற கதை விகடனில் தேர்வான போது விகடன் அலுவலகத்திலிருந்து ஒருவர் "Selected" என்ற குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் உள்ள விசித்திரத்தை வியந்து எழுதிய கதை தான் ஆவி கதை. கதை ஆவி பற்

1. இராமானுசன் அடி பூமன்னவே - வீரநாராயண புரம்

1. இராமானுசன் அடி பூமன்னவே - வீரநாராயணபுரம்  அகண்டக் காவிரி வடதிருக்காவிரி, தென் திருக்காவேரி என்று இரண்டாகப் பிரிந்து அரங்கனுக்கு மாலையாக அவனுடைய பாதங்களை வருடுகிறாள்.  வடதிருக்காவிரி என்கிற கொள்ளிடம் ஆற்றிலிருந்து பல கிளைகளாக,  மேடு பள்ளங்களைத் தாண்டி வீரநாராயண ஏரியில் பாய்கிறாள். ஏரியைப் பார்ப்பவர்கள் ’இது கடலோ  ?’ என்று வியக்காமல் இருக்க மாட்டார்கள்.    பூமாதேவி அவதரித்த மாதமான ஆடி மாதம் சூரியன் தன் பயணத் திசையை மாற்றித் தெற்கு நோக்கி வருகிறான். அரங்கன் ’தென்திசை இலங்கை நோக்கி’ விபீஷணனை மட்டுமல்லாமல் கோதை அவதரித்த வில்லிபுத்தூரையும் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.    ஆடி மாதத்தில் காவிரியில் புது வெள்ளம் ஆடிக் காற்றில் அடித்துக்கொண்டு வரும். ஏரியில் நீர் ததும்பி படித்துறையில் மேல் வேகமாக அடிக்கும். ஏரி சுற்றி இருக்கும் மரங்களில் பறவைகள் ஆரவாரம் அந்த அந்த இடம் முழுக்க பரவியிருக்கும்.  அன்று காலைக் கதிரவன் மேலே வந்த அந்தச் சமயத்தில் கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் பறவைகள் ஒலி வழக்கத்துக்கு மாறாக அதிகம் கேட்டது. மூன்று பேர் ஏரியை நோக்கி வந்துகொண்டு இருந்தார்கள். அவர்கள் தோளில் கம்பு

தினமும் கொஞ்சம் தேசிகன் - 4

ஆண்டாளின் திருப்பாவை நாச்சியார் திருமொழி உபன்யாசங்களில் இந்த ஸ்லோகத்தை தனியன்களுடன் சேவிப்பார்கள்.  ஸ்ரீ விஷ்ணு சித்த குலநந்தன கல்பவல்லீம் ஸ்ரீ ரங்கராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம் | ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம் கோதாமநந்ய சரண : சரணம் ப்ரபத்யே  இது எங்கே வருகிறது என்று நீண்ட நாட்களாக எனக்குத் தெரியாது. வடமொழியில் புரியாமல் இருந்தாலும் கேட்கும்போது பிடித்துவிடும்.  இது ஸ்ரீ வேதாந்த தேசிகனின் கோதாஸ்துதில் முதலில் வரும் ஸ்லோகம். இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று பார்க்கலாம்.  சுலபம் தான்  ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்ப வல்லீம்  பெரியாழ்வாருடைய குலமாகிய நந்தவனத்திற்கு கற்பக கொடி போன்றவளாய் ஸ்ரீ ரங்கராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம்  திருவரங்கப் பெருமாளாகிய ஹிரி சந்தன மரத்தோடு சேர்ந்து இருப்பதால் காண அழகியவளாய்  ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம் நேராக பொறுமையும் பூமி தேவியுமே வடிவுகொண்ட வளாய் கருணையால் மற்றொரு பெரிய பிராட்டி போன்றவளாயுள்ள  கோதாமநந்ய சரண : சரணம் ப்ரபத்யே   ஆண்டாளை வேறு புகலற்றவனாய் சரணமாக அடைகிறேன்.  மேலே தடித்த எழுத்துக்களை மட்டும் படித்தால் புரிந்துவிடும். ஆனால்  இ

இராமானுசன் அடி பூமன்னவே - கிளம்பலாம் வாருங்கள் !

அன்பான வாசகர்களே!  இன்றைக்கு சுமார் 1200 வருடங்கள் பின்னோக்கி ஒரு வித்தியாசமான பிரயாணத்துக்கு உங்களை அழைக்கிறேன். இந்தப் புண்ணிய பூமியில் பல கோயில்களுக்குச் சென்று, 'கிடந்த, இருந்த, நின்ற, நடந்த'  பெருமாள்களைத் தரிசிக்க இருக்கிறோம்.புண்ணிய நதிகளில் நீராடி, பல ஆசாரியர்களுடன் பழக இருக்கிறோம். இயற்கையை ரசிக்கப் போகிறோம்  இந்தப் பிரயாணம் பல நாள், மாதங்கள், ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம். செல்லும் இடங்களில் தங்க வேண்டியிருக்கலாம். அதனால் பிரயாணத்துக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்வது உசிதம். அதிகம் சுமக்க வேண்டாம், கையில் ஆழ்வார்களின் அருளிச் செயல் புத்தகமும் மனத்தில் ராமானுஜரும் இருந்தால் போதும். கிளம்பலாம். உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் கூட்டமாக வரலாம். கவலை இல்லை. நாளை ஆடிப் பூரம் ! எல்லோரும் வீரநாராயணப்  புரத்துக்கு வந்துவிடுங்கள். பயணத்தை அங்கிருந்து துவங்கலாம்.   சொல்ல மறந்துவிட்டேனே...நம் பயணம் முழுவதும் நம்முடன் ஸ்ரீராமானுஜரும் வரப் போகிறார்!  - சுஜாதா தேசிகன்  23-07-2020

தினமும் கொஞ்சம் தேசிகன் - 3

சிலர் உரையாற்றும்போது உரையின் நடுவே உதாரணம் சொல்லுகிறேன் என்று தன் சொந்தக் கதையை ஆரம்பித்துப் பிறகு, நாம் இணையத்தில் தேடுவது போலப் பல இணைப்பைக் கிளிக் செய்துகொண்டு சென்று கடைசியில் என்ன தேடினோம் என்று மறந்துவிடுவது மாதிரி உரை நிகழ்த்துபவர் ‘எதுல விட்டேன்?’ என்று மீண்டும் ஆரம்பிப்பார். (நம்முடைய மைண்ட் வாயிஸ் ”கடைசியில் என்னதான் சொல்லவர  ?”)  ஆனால் ஆசாரியர்கள் பேசும்போது இந்த மாதிரி எல்லாம் இருக்கவே இருக்காது. பல விஷயங்களை விரிவாகச் சொன்னாலும் கடைசியில் 'நறுக்கு என்று’ அதன் சுருக்கத்தைச் சொல்லிவிடுவார்கள்.   ஸ்வாமி தேசிகனின் ‘Magnum opus' (மகத்தான பணி)  என்று போற்றப்படும்  ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் கடைசியில் இப்படி ஒரு 'நறுக்கு’ நமக்குக் கிடைக்கிறது.  ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் ’ஆச்சார்ய க்ருத்ய அதிகாரத்தில்’ நமக்கு இரண்டு தமிழ் பாசுரத்தைத் தமிழில் அருளியிருக்கிறார். ( இது சம்பிரதாய முறையில் இங்கே  நமக்கு ஆசாரியர்கள் உபதேசிக்கிறார்கள்) முதல் பாசுரம் :   பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒரு கால் மாட்டுக்கு அருள் தரு மாயன் மலிந்து வருத்துதலால் நாட்டுக்கு இருள் செக நான்மறை

இராமானுசன் அடி பூமன்னவே !

இராமானுச நூற்றந்தாதியின் கடைசி வரியில் வரும் ’ இராமானுசன் அடி பூமன்னவே ’ இது தான் தொடரின் தலைப்பு. இந்த ஜகத்தில் யார் பெரியவர் ? பெரியவர் பெரியவர் திருமால் பெரியவர் திருமால் தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம் தொண்டருள் பெரியோர் தூய சடகோபன் சடகோபன் அருள் ஜகத்தினும் பெரிதே சடகோபன் தூய இராமானுசர் உள்ளத்தோடு ஒடுக்கம். அதனால் உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ! பெரும் புகழையுடைய இராமானுசரின் திருவடித்தாமரைகளைத் தலையில் தாங்கி அவர் பாதையில் பயணிப்போம். 

நல்ல ‘காபி’ - சில எண்ணங்கள்..

சென்னை FMல் “கிரிகிரி”க்கு நடுவில் ஒன்றைக் கவனித்தேன், கீழ்பாக்கம் என்ற சொல்லை ‘கீழ்போக்’ என்று லண்டனில் உள்ள ஊர் போல ஸ்டைலாக சொல்லுகிறார்கள்.  அதே போல்   திருமயிலை  மைலாப்பூர். அந்தணர்கள் அதிகம் வசிக்கும் மைலாப்பூரில் ’ லியோ காபி’ கடையில் காலை ஏழு மணிக்கு விஸ்வரூப தரிசனம்.  பழைய காலத்து மாவு மிஷின் மாதிரி வைத்து அரைத்துக் கொடுக்கிறார்கள். இங்கே வசிப்பவர்கள் பாலை அடிப்பில் வைத்துவிட்டு நூறு கிராம் காபி பொடி வாங்கி ஃபிரஷாக போடலாம்.  சிறுவயதில் எங்கள் தாத்தா வீட்டில் பச்சை காபி கொட்டை வறுத்து வீட்டிலேயே இருக்கும் சக்கர இயந்திரத்தை இரண்டு சுற்று சுற்றி அரைத்துக்கொள்ளலாம். ஒரு முறை காபி கொட்டை வறுக்கும் போது அதில் சில சிகப்பு மிளகாயைப் போட்டுவிட்டு ஓடிவிட்டேன். வீட்டில் எல்லோரும் கண்ணீரும் கம்பலையுமாக என்னைத் தேடினார்கள். திருச்சியில் முன்பு ஜோசப் காபி, நரசுஸ் இருந்தது பிறகு பத்மா காபி படையெடுப்புக்குப் பின் பத்மா காபி இன்றைய திருச்சியின் அடையளமாகிவிட்டது. ஸ்ரீரங்கம் கோபுரம் முன் முரளி கஃபேயில் கூட கிலோ கிலோவாக பத்மாவை அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்தேன். பெங்களூரில் ’சுமா’ காபி, கோத்தாஸ் க

மேட்டழகிய சிங்கர் (சிறுகதை)

நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் - ஆண்டாள், நாச்சியார் திருமொழி ஸ்ரீரங்கவாசிகளுக்கே ‘EVS’ சாலையின் விரிவாக்கம் தெரியாது. நமக்கும் அந்தக் கவலை வேண்டாம். இவிஎஸ் சாலையும் வரதாச்சாரி தெருவும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ‘பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா’ என்று அந்தக் காலைவேளையிலும் பிடிவாதமாக அலறிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண தினத்தில் க்ரோமியத்தில் குளிப்பாட்டிய பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள். இறங்கியது ஜெயபாலனும், கண்ணம்மாவும். தூக்கம் மிச்சம் அவர்களின் கண்களில் தெரிந்தது. இறங்கியவுடன் கண்ணம்மாவிற்கு ஸ்ரீரங்கம் கோபுரமும் ஆவின் பால்வண்டிகளும் மூடப்பட்ட ஜன்னல்களும் வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பவர்களும் கண்ணில் பட்டார்கள். “காபித் தண்ணி கிடைக்குமா?” என்றாள் “கிடைக்கும் பேசாம வா!” “உள்ளே அஞ்சு மாசக் குட்டி இருக்கு” என்ற தன் மேடிட்ட வயிற்றைத் தடவிக்கொண்டாள். ஜெயபாலன் அதைக் கவனிக்காமல் காது குடைந்துவிட்டு, தன் வேட்டியை மேலுயர்த்தி பட்டாப்பட்டியிலிருந்து செல்போனை எடுத்து அழுத்தினான். “காபி கிடைக்குமா கேளுங்க.” “சட்... சும்மா இரு..” என்றபோது மறுமுனை ‘சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்’ என்றபோது

தினமும் கொஞ்சம் தேசிகன்! - 2

தினமும் கொஞ்சம் தேசிகன்!  - 2 கடந்த பகுதியில் பரி  என்ற வார்த்தை வந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். ஒன்று ’திருக்குறள் பரி மேலழகர்’;  மற்றொன்று  திருச்சின்ன மாலை பாசுரத்தில் ‘ஆனை, பரி, தேரின்மேல் அழகர் வந்தார்’ என்ற வாக்கியம்.  இந்நேரம் பரி என்ற வார்த்தையின் பொருள் உங்களுக்குப் புரிந்திருக்கும். குதிரை.  காஞ்சி பேரருளாளன் குதிரை வாகனத்தில் வந்தார் என்கிறார் ஸ்வாமி தேசிகன். இதில் அவர் ‘அழகர்’ என்ற ஒரு வார்த்தையை அழகாக நுழைத்திருக்கிறார் பாருங்கள்.  அழகர் குதிரையின் மீது அமர்ந்து ஆற்றில் இறங்குவது பிரசித்தம். பரி என்றவுடன் 'பரி, தேரின்மேல் அழகர்' என்கிறார் தேசிகன். அதாவது குதிரை மேல் அழகர் ! இப்போது குதிரை என்ற வார்த்தைக்குப் பதில் பரி என்று மாற்றிப் பாருங்கள் உங்களுக்குப் பரி மேல் அழகர் என்ற வார்த்தை கிடைக்கும்.  ஹயக்ரீவர் என்று கூறியவுடன் +2 தேர்வுக்கு வேண்டிக்கொள்வது நினைவு வரும் அடுத்து ஸ்வாமி தேசிகன் நினைவுக்கு வருவார்.  ஸ்வாமி தேசிகனின் தாய் மாமா அப்புள்ளார் சொல்லிக்கொடுத்த கருட மந்திரத்தைத் திருவயிந்திபுரம் மலையில் ஓர் அரச மரத்தடியில் நாதமுனிகள் கண்ணிநுண் சிறுதாம்பு ப