Skip to main content

Posts

Showing posts from July, 2016

பனை மரம்

குணசீலத்தில் நுங்கு  பனை மரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் இருக்கிறதா என்று தேட வேண்டும். ரயில், பேருந்து பயணங்களில் புறம்போக்கு நிலங்களில் பனை மரங்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். நுங்கு வாங்கும் போது பனை இலை வாசனையுடன் முன்பு எல்லாம் நுங்கு கட்டித் தருவார்கள். இப்போது எல்லாம் கேரி பேக் தான். ஆனால் இந்த வருடம் குணசீலத்தில் ஒரு தாத்தா பனை ஓலையில் எங்களுக்கு நுங்கு கட்டித்தந்தார். பனை மரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களிலும், ஆழ்வார் பாடல்களிலும் இருக்கிறது ரயில், பேருந்து பயணங்களில் புறம்போக்கு நிலங்களில் பனை மரங்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். நுங்கு வாங்கும் போது பனை இலை வாசனையுடன் முன்பு எல்லாம் நுங்கு கட்டித் தருவார்கள். இப்போது எல்லாம் கேரி பேக் தான். ஆனால் இந்த வருடம் குணசீலத்தில் ஒரு தாத்தா பனை ஓலையில் எங்களுக்கு நுங்கு கட்டித்தந்தார். மடல் இலக்கியத்தில் மடல் ஏறுவோர் பனைஓலையைப் பயன்படுத்துவர் என்று இருக்கிறது.  பனை மரத்தின் கிளையின் இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்து அதன் ம

மாப்பிளையை வரவேற்ற மாமனார் !

ஒன்றாம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு ஆழ்வார்கள் அறிமுகமானார்கள். அந்த வயதில், திருப்பாவை முதல் இரண்டு பாடலும், கடைசி இரண்டு பாடலும் மனனம். அப்பாவுடன் சைக்கிளின் முன்சீட்டில் உட்கார்ந்து பயணிக்கும் போது, திருப்பாவை, ஆழ்வார்களின் திருநட்சத்திரம், அவர்களுடைய அவதார ஸ்தலம், அவர்களைப் பற்றிய கதைகள் எல்லாம் சொல்லிக்கொண்டே வருவார். கல்லூரி காலத்தில் ஆழ்வார்களின் பாசுரங்களில் உள்ள அழகு, பக்தி பற்றிய பேச்சு, அப்பாவுடன் அவதார ஸ்தல விஜயம் என ஆழ்வார்கள் என் கூடவே பயனித்தார்கள். ஆழ்வார்கள் கோஷ்டி ஸ்ரீரங்கத்தில் ஒரு முறை (25 வருடம் முன்) வைகுண்ட ஏகாதசி பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தில் எல்லா ஆழ்வார்களையும் வரிசையாகப் பார்த்த போது அதுபோலவே வீட்டிலும் சின்னதாக மாடல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அதே மாதிரி மாடல் செய்ய, கூகிள் இல்லாத காலத்தில், ஆழ்வார்கள் அவதார ஸ்தலத்தில் உள்ள உற்சவர் படங்களை சேகரிக்கத் தொடங்கினேன். கிட்டதட்ட 16 வருடங்கள் முன்பிருந்தே ஆழ்வார்களின் அவதார ஸ்தலத்தில் உள்ளது போலவே சின்னதாக யார் செய்து கொடுப்பார்கள் என்று தேடத் தொடங்கினேன். பல இடங்களில் விசாரி