Skip to main content

Posts

Showing posts from September, 2018

தூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்

அப்பாவுக்குத் திருமணம் ஆவதற்கு முன்பே தேசிகன் என்று எனக்குப் பெயர் வைத்துவிட்டார். அதாவது பிறக்கப் போகும் முதல் பையனின் பெயர் தேசிகன் என்று தீர்மானித்துவிட்டார். இதை என் அப்பாவே என்னிடம் சொல்லியிருக்கிறார். ”பெண்ணாகப் பிறந்திருந்தால் என்ன செய்திருப்பே?” என்று ஒரு முறை கேட்டதற்கு . ”பெருமாள் ஏமாற்ற மாட்டார்” என்றார் நம்பிக்கையுடன். அவருக்கு ஸ்ரீ வேதாந்த தேசிகன் மீது இருந்த பற்று அப்படி. பெயரில் என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். கொஞ்சம் பின்னோக்கி ஸ்ரீ ராமானுஜர் சரித்திரத்தை புரட்டலாம். ஸ்ரீஆளவந்தார் திருநாடு அலங்கரித்த சமயம். அவருடைய மூன்று விரல்கள் மடங்கியிருந்தது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஸ்ரீராமானுஜர் ஆளவந்தாரின் ஆசையை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என்று சொல்ல, மடங்கிய விரல்கள் விரிந்தன. அந்த மூன்று ஆசைகள் நம்மாழ்வாரின் திருநாமத்தை சூட்ட வேண்டும். பராசர பட்டர், வேத வியாசர் திருநாமங்களை சூட்ட வேண்டும் ஸ்ரீபாஷ்யத்துக்கு உரை இதில் முதல் இரண்டு ஆசைகள் - பெயர் சூட்ட வேண்டும் என்பது ! பாஷ்யம் எழுதுவது போல கஷ்டமானது கிடையாது. சில வருடங்கள் முன் பெரியவாச்சான்

குங்மம், குதம், விடன்

இன்று எங்கள் வீட்டு பக்கம் உள்ள கடையில் மூன்று புத்தகங்களை ஒரே மாதிரி பார்க்க முடிந்தது. முன்பு பொதுவாக ஏதாவது பத்திரிக்கைக்கு அடையாளமாக “சார் ....நடிகை அட்டைப்பட ...இஷ்யூ “ என்று தான் அடையாளம் சொல்லுவோம். அட்டையை கழட்டிவிட்டால் எந்த பத்திரிகை என்று கண்டுபிடிக்க முடியாது என்று சொல்லுவார்கள். இந்த வாரம் அட்டையை கழட்டவே வேண்டாம். ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி அன்று ஆச்சி மசாலா போஸ்டர் போல .. எனக்கு என்னவோ இந்த அட்டைப்படம் எல்லாம் coincidence என்று நம்ப முடியவில்லை. அடுத்த காரணம் - பெண்கள் இல்லாத அட்டைப்படம் அரிது அரொது நடிகை இல்லாத அட்டைப்படம் அரிது. அதனினும் அரிது ஒரே மாதிரி ஆண் அட்டைப்படம் ... பொறுப்பாசிரியர்கள் காலை வாக்கிங் போது ஒரே கடையில் கடுக்காய் ஜூஸ் குடித்தால் மட்டுமே இது சாத்தியம். - சுஜாதா தேசிகன் 16.9.2018

இடிந்த வீடு, கிழிந்த புத்தகம்

இடிந்த வீடு, கிழிந்த புத்தகம் நேற்று ஒரு கோயிலுக்கு சென்றிருந்தேன். கோயில் அர்ச்சகர் “தேவரீருக்கு எந்த ஊர்” என்று கேட்ட போது யோசிக்காமல் “ஸ்ரீரங்கம்” என்றேன். நான் பிறந்த கிட்டதட்ட ஐந்து வயது வரை செகந்திராபாத்தில் தான் இருந்தேன். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளின் முன்னுரையில் இப்படி எழுதியிருப்பார் “நான் பிறந்த ஊர் சென்னை, ஆனால் வளந்து படித்தது ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். ‘நேட்டிவ் ப்ளேஸ்’ என்று ஏதாவது மனுவில் கேட்டால் ‘ஸ்ரீரங்கம்’ என்று தான் எழுதுகிறேன். சுஜாதா பிறந்தது திருவல்லிக்கேணியில். அங்கு அவரைத் தூக்கி வளர்த்தவர் கணித மேதை ராமானுஜத்தின் மனைவி. சுஜாதா ஒரு கட்டுரையில் அதை எழுதியிருக்கிறார். 'அப்பாவின் ஆஸ்டின்' என்ற சுஜாதாவின் சிறுகதையைப் படித்திருப்பீர்கள். அதில் சுஜாதாவின் அப்பா அழுக்கு கலரில் ஒரு ஆஸ்டின் கார் வாங்குவார். குடும்பத்தில் எல்லோரும் அதன் கலரை மாற்றச் சொல்லியும் மாற்றாமல் இருப்பார். பிறகு ரிடையர் ஆன பிறகு விற்றுவிடுவார். அவர் ஏன் நாங்கள் எல்லோரும் சொல்லியும் கலர் மற்றவில்லை என்று எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் பிறகு "He had a mes

இலக்கியக் கூட்டத்துக்கு வந்த பூனை !

இலக்கியக் கூட்டத்துக்கு வந்த பூனை ! வாசகசாலை 11வது நிகழ்வில் இன்று நான் கோபிகிருஷ்ணனின் ஒரு ரூபாய்க்கு ஒரு கதை பற்றிப் பேசினேன். மொத்தம் 21 பேர் வந்திருந்தார்கள். அதில் ஒரு பூனையும் அடங்கும். வெகு நாட்கள் கழித்து நண்பர் மணிகண்டனை சந்தித்து பேசியது இனிமை. நான் பேசியதை முன்பே கட்டுரையாக எழுதிக்கொண்டு சென்றுவிட்டேன். அதை கீழே கொடுத்துள்ளேன். விருப்பம் இருப்பவர்கள் படித்துக்கொள்ளலாம். என்னையும் பேச அழைத்த அவர்களுக்கு நன்றி. -சுஜாதா தேசிகன் 9.9.2018 ஒரு ரூபாய்க்கு ஒரு கதை பரிட்சையில் சாய்ஸ் மாதிரி மூன்று கதைகளை கொடுத்து ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் என்ற போது இந்தக் கதையை எடுத்ததற்கு முதல் காரணம் இது மிகச் சிறிய கதை. சிந்து பைரவியில் சுலக்ஷ்னா ‘கத்திரிக்கா கிலோ என்ன விலை’ என்பது போல் தான் என் சிறுகதை ஞானம். கோபி கிருஷ்ணன். பெருமாள் பெயராக இருக்கிறதே என்பது இன்னொரு காரணம். கதையின் தலைப்பு ‘ஒரு ரூபாய்க்கு ஒரு கதை’ தலைப்பைப் பார்த்த போது கமலஹாசனின் “ஒரு கோடி ரூபாய் கனவு” என்ற காஸ்டிலியான தலைப்பு தான் உடனே ஞாபகத்துக்கு வந்தது. கதையைச் சுருக்கமாக பிறகு சொல