Skip to main content

Posts

Showing posts with the label பார்த்தேன் எடுத்தேன்

இரண்டு சொட்டு.. இரண்டு குழந்தைகள்

சென்ற வருடம் ஸ்ரீவேளுக்குடி ஸ்வாமியுடன் யாத்திரை சென்ற போது மதுரா, கோகுலம், பிருந்தாவன், நந்த கிராமம் என்று சுற்றிய போது என் பக்கம் இருந்த மாமியின் தோளில் இருந்த கைப்பை என்னை கவர்ந்தது. அதன் வாரில் சின்ன குஞ்சலம் மாதிரி ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது. என்னவாக இருக்கும் என்ற மண்டைக் குடைச்சல் ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன் அவர் சட்டென்று “ஏதாவது வேண்டுதலாக இருக்கும்.. மறந்துவிடக் கூடாது என்று இந்த ஏற்பாடு” என்றார். “எனக்கு அப்படி தெரியலை...” “அப்ப திருமண் பெட்டியாக இருக்கலாம்” “மாமி நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு...” மாமி அசந்த சமயம் உற்றுப் பார்த்தேன்... குஞ்சலத்தின் உள்ளே சின்ன பாட்டில் மாதிரி ஒரு வஸ்து இருப்பது தெரிந்தது. மீண்டும் பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன். “நிறையப் புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்கிறோம்.. அதை எல்லாம் சேகரித்து வைத்துள்ளார் மாமி” என்றார். லாஜிக் உதைத்தது. உதைப்பட்டாலும் பரவாயில்லை, மாமியையே கேட்டுவிடுவது என்று முடிவு செய்தேன். சட்டென்று கேட்டால் வேளுக்குடி ஸ்வாமியிடம் புகார் செய்துவிடுவாரோ என்ற பயத்தில் “எங்கிருந்து வருகிறீர்கள் ?”...

பார்த்தேன் எடுத்தேன் - 2

நம் தேசம் பாரம்பரியம்மிக்கது. கோயில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லை. இங்கே தான் கல்வி, கலாச்சாரம் வளர்ந்தது. மழை, புயல் போன்ற காலங்களில் பலருக்கு பாதுகாப்பாக இருந்திருக்கிறது. பஞ்சகாலத்தில் மக்களுக்கு உணவுவளித்து காத்துள்ளது. ”கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொன்னாரகள். ஸ்ரீரங்கம் போன்ற திவ்ய தேசங்களை வாழ் நாள் முழுக்க பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். பல்லவர்கள், சேர, சோழ, பாண்டியர்கள், நாயக்கர்கள் மட்டும் இல்லாமல், விஜயநகர, ஹோய்சாளப் பேரரசர்கள் ஸ்ரீரங்கத்தை பல நூற்றாண்டுகளாக பல் வேறு காலகட்டங்களில் கட்டியது. இங்கே பல மொழிகளில், 644 கல்வெட்டுகள் இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் விட்டு சென்ற எழுத்துகள், ஆவணங்கள். 2013ல் ஸ்ரீரங்கம் சென்ற போது இந்த சின்ன சிற்பம் கண்ணில் பட்டது. சின்ன தவழும் கண்ணன் கையில் வெண்ணையுடன்!.  கைநாட்டு வைக்கும் கட்டைவிரல் அளவு தான் இருக்கும் இந்த சிற்பம். ஆனால் நாம் கையை வைத்துக்கொண்டு சும்மா இருப்போமா ? சூப்பர் கம்யூட்டர், கிளவுட் கம்ப்யூட்டிங் என்று வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் இது போல கையால் செய்வதற்கு ஆ...

பார்த்தேன் எடுத்தேன் - 1

இந்த படத்தில் இருக்கும் பூ இன்று காலை வாக்கிங் போகும் போது - ’பார்த்தேன் எடுத்தேன்’. நான் குடியிருக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தில் இந்த செடியை பார்த்து வியந்திருக்கிறேன்.எப்போது பார்த்தாலும் வசிகரிக்கும். பல நாள்கள் அதைத் தொட்டுப் பார்த்து அனுபவித்திருக்கிறேன். பழைய சினிமா வில்லனின் புலி நகம் வைத்த செயின் மாதிரி என்ன விதமான படைப்பு! பூவின் பெயர் தெரியாது. 2011 ஆஸ்திரேலியா சென்றபோது, சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) பக்கம் பெரிய மரம் அதிலும் அதே பூ!. சிறிது நேரம் மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அங்கே கிளி இரண்டு விளையாடிக்கொண்டு இருந்ததையும் கவனிக்க முடிந்தது. பச்சைக் கிளிகளையே பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு வானவில் நிறத்தில் அந்தக் கிளிகளைப் பார்க்கும்போது அத்தை பெண்ணுக்குப் பதில் ஆண்ட்ரியாவைப் பார்த்த மாதிரி இருந்தது. சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு சிட்னி துறைமுகப் பாலத்தில் நடக்க ஆரம்பித்தேன். பாலத்தின் தடுப்புச் சுவற்றிலும் அதே டைப் கிளிக்குஞ்சு. பிரியாவிடை கொடுத்துவிட்டுத் திரும்பி வந்ததிலிருந்து அந்தப் பூவின் பெயரையும் அந்தக் கிளி...