பரவச பொங்கல் அன்புள்ள சுஜாதா தேசிகன் அவர்களுக்கு, நலமா ? கல்கியில் சமீபத்தில் நீங்கள் எழுதிய கதையை படித்தேன். நன்றாக இருந்தது. உங்கள் ஃபேஸ்புக்கிலும் கமெண்ட் போட்டிருக்கிறேன். உங்களிடமிருந்து ஒர் உதவி தேவைப்படுகிறது. ’Orgasm’ என்று ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன ? ஆய்வுக்காக எனக்கு இந்த தமிழாக்கம் தேவைப்படுகிறது. ஒரு சொல்லாக இருந்தால் நன்றாக இருக்கும். . இணையத்தில் தேடினால் கெட்ட கெட்ட விஷயங்கள் தான் வருகிறது. கூகிளில் தேடிய போது பரவசநிலை, உச்சநிலை, பரவச பொங்கல் போன்ற சொல் பிரயோகங்கள் தான் வருகிறது. சிலர் கிளைமாக்ஸ் போன்ற ஆங்கில வார்த்தையையே உபயோகிக்கிறார்கள். திருப்திபடுதல் கிட்டே வருகிறது ஆனால் திருப்தியாக இல்லை. ”ஐ” படத்தில் வருவது போல ”அதுக்கும் மேலே” என்பது மாதிரியான ஒரு வார்த்தை வேண்டும். எனக்கு நீங்கள் உதவுவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. K.... k......b@gmail.com அன்புள்ள கே... நலம். தேடி பார்த்தேன். கிடைக்கவில்லை. இன்றைய என் அனுபவத்தை சொல்லுகிறேன். அதிலிருந்து அந்த வார்த்தைக்கு விடை கிடைக்கிறதா என்று பாருங்கள். சரியாக பதினோரு மணிக்கு அந்த இடத்த