Skip to main content

Posts

Showing posts with the label இசை

திவ்யப் பிரபந்த(த்துக்கு) இசை

திவ்யப் பிரபந்த(த்துக்கு)  இசை  ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவயப் பிரபந்தத்துக்குச் சமீபத்தில் ‘திவ்ய பாசுரங்கள்’ என்று இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டு அதை இந்நேரம் கேட்டிருப்பீர்கள்.  நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கு 1200 வருடங்கள் முன் இசை கூட்டிய  ‘இசைக்காரர் ஸ்ரீமந் நாதமுனிகள். நாதமுனிகள் பண்ணிசையிலும் தமிழிசையிலும் வல்லவராக விளங்கினார். திருவாய்மொழி பாசுர ஈட்டு உரையில் இசைக்காரர்  - இயலுக்கு இசையிட வல்லவர்கள் ஸ்ரீ மதுரகவிகளையும், நாதமுனிகளையும் போல இருக்குமவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆழ்வார்களும் இசையை அதன் சுவையை நன்கு அறிந்துள்ளார்கள். திருமங்கை ஆழ்வார் திருக்கோவலூரில் ‘வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்’ என்கிறார்.  எம்பெருமானையே ‘ஏழிசையின் சுவைதன்னை!” என்று இசையைச் சுவைத்துமுள்ளார் நம் திருமங்கை மன்னன். பட்டர் அருளிச் செய்த தனியனில் நம்மாழ்வார்  அருளிச்செய்த திருவாய்மொழிப் பாசுரங்கள் ‘யாழின் இசை வேதத்தியல்’ என்கிறார்.  ஆழ்வார்கள் இசைக்...

பாரோ கிருஷ்ணையா

பாரோ கிருஷ்ணையா கனகதாசரின் ‘பாரோ கிருஷ்ணையா’ என்ற கன்னட கீர்த்தனையை நீங்கள் கேட்டிருக்கலாம். இதைத் திரு மதுரை டி.என். சேஷகோபாலன் அருமையாகப் பாடியுள்ளார். முதலில் பெரியாழ்வார் கண்ணனை வாராய் என்று அழைக்கும் ‘ஆனிரை மேய்க்கநீ போதி’ என்ற தமிழ் பாசுரத்துடன் ஆரம்பித்துவிட்டு பிறகு கனகதாசரின் ‘பாரோ கிருஷ்ணையா’ என்று கன்னடத்தில் அழைக்கிறார். வெண்ணிலா ஐஸ்கிரீமையும், குலோப் ஜாமுனையும் கலந்து சாப்பிடுவது போல ருசிக்கிறது. கீழே பெரியாழ்வார் பாசுரமும், கனகதாசரின் கன்னட கீரத்தனையை (சுமாராகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்) தந்துள்ளேன். இதை வைத்துக்கொண்டு இப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். நல்ல அனுபவமாக இருக்கும். ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய் கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத் தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் எளிய விளக்கம் தேனைவிட இனியபிரானே ! உன் பகைவரெல்லாம் சிரிக்கும்படி பானையிலே உள்ள கறந்த பாலை பருகி கானகம் எல்லாம் அலைந்து உன் கரிய திருமேனி வாட பசுக்களை மேய்க்க நீ போகிறாய் நீ பெறுவதற்கு அரியமருந்து என்று யார் அ...

இராமானுசனுடையார் - இசையுடன் ஆழ்வார் பாசுரங்கள்.

ஸ்ரீராமபாரதியின் ’தேவகானம்’ என்னும் ஒலி நாடா தொகுப்பு என் திருதகப்பனாரின் சஷ்டியப்தபூர்த்திக்கு பரிசாகக் கிடைத்தது. அப்போது திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி அடியேனுக்கு ஒன்றும் தெரியாது. அந்த ஒலிநாடாக்களை வீட்டில் ஓட விட்ட போது ஆசாரியர்களின் தனியன்களும், ஆழ்வார் பாசுரங்களையும் முதல் முதலாக ராகத்துடன் கேட்டு அனுபவித்தேன். அது ஓர் ஆத்தும அனுபவம் விவரிக்க இயலாது. பிறகு அந்த ஒலி நாடா கொடுத்தவரை தேடி திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டென். நாதமுனிகள், ஆழ்வார்களின் பாசுரங்களை நுட்பமான தத்துவங்களை ஜனங்கள் கண்ணாரக் கண்டு தெளிவடையும் பொருட்டு பெருமாளுடைய புறப்பாடுகளில் அவைகளைப் பல விதங்களில் ஏற்பாடு செய்ய நினைத்தார். நாதமுனிகள் காலத்தின் ஏற்பாட்டின்படியே உத்ஸவங்கள் நடந்து ஸ்ரீராமானுஜர் காலத்தில் திராவிட வேதம் என்று அழைக்கப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் எல்லா திவ்ய தேசங்களிலும் சேவிக்க ( ஓதப்பட ) வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயிலில் எந்தெந்த காலத்தில் எந்தெந்த திவ்யபிரபந்தம் சேவிக்க வேண்டும் என்ற நியதி உண்டாக்கப்பட்டது. அதனால் தான் ஸ்ரீராமானுஜருடைய வாழித் ...

பித்துக்குளி முருகதாஸ்

இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. 1981-82 என்று நினைக்கிறேன். என் சித்தி பையனின் உபநயனத்துக்கு சென்றிருந்தேன். குமார போஜனத்துக்கு என்னை உட்கார வைத்தார்கள். என் மனம் முழுவதும் இலையில் இல்லாமல், சற்று நேரத்துக்கு முன் உபநயனத்துக்கு வந்திருந்த ஒருவர் கையடக்க டேப்ரிக்கார்டரின் மீது இருந்தது. அப்போது டேப்ரிகார்டர் புதுசாக வந்திருந்த சமயம். குமார போஜனம் போட்டோவிற்கு போஸ் கொடுத்த பின் ”பசி இல்லை” என்று எழுந்து அந்த டேப்ரிக்கார்டர் மாமாவை தேடி போனேன். “என்ன என்றார்?” “டேப்ரிக்கார்டர்... “ “ஆமாம் டேப்ரிக்கார்டர்.. அதுக்கு என்ன?” “இப்ப போட்டீங்களே அந்த பாட்டு யார் பாடியது?” “எந்த பாட்டு ?” என்று தன் பையை பெருமையாக திறந்து தன் கலக்‌ஷனை காண்பித்தார் அதில் ஏகபட்ட கேஸ்சட்... இதில் எப்படி தேடுவது ? “அலைபாயுதே கண்ணா...” “ஓ அதுவா அது பித்துக்குளி முருகதாஸ்.. “ என்று கேஸ்சட் படத்தை காண்பித்தார். டேப்ரிக்கார்டரை பார்க்காமல் அந்த கேஸ்சட்டை பார்த்தால் அவருக்கு கொஞ்சம் ஏமாற்றம்... தாம்பூலப் பையை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார் ”Lord Krishna - Pithukuli Murugadas" பித்துகுளி என்ற பெயர...