Skip to main content

Posts

Showing posts with the label நகைச்சுவை

சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் !

 சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் ! ஜோ பைடன் தலைக்கு மேல் பறந்த சீன பலூனை கொஞ்சம் நாள் வேடிக்கை பார்த்துவிட்டுச் சுட்டு வீழ்த்திய காணொளியைப் பார்த்திருப்பீர்கள். கடலில் விழுந்த பலூனின் பாகங்களை ஆய்வு செய்கிறார்கள் என்று படித்த போது ஒரு ’பக்’ ஏற்பட்டது. காரணம் சிறுவயதில் நாங்கள் விட்ட அந்த ஸ்பெஷல் பலூனாக இருக்குமோ சந்தேகம். ஏழாவது என்று நினைக்கிறேன், எட்டாவது கூட இருக்கலாம், அது முக்கியமில்லை நான் அரைக்கால் டவுசர் போட்ட காலத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்று ஹிந்தி தமிழ் எழுத்துக்களுடன் தற்காலிகமாக முளைத்தது. அதற்குள் நுழைவதற்கு முன் பலூனை கொஞ்சம் ஊதலாம். பத்துப் பைசாவிற்கு இரண்டு பலூன் கிடைத்த காலம். போச்சம்பள்ளி சேலை போல மஞ்சள் சிகப்பு, நீலம், பிரவுன், சிகப்பு, பச்சை என்று இரண்டு நிறமாகவோ , புள்ளிகள் நிறைந்த சுங்குடி போலவோ விதவிதமாகக் கிடைக்கும். பலூன் காரர் மூங்கில் குச்சியில் பூனை, பறவை போன்று பலூன் சிற்பங்களுடன் அழுக்கான ஒரு பிளாஸ்டிக் பையில் பிஜிலி வெடி போலப் பல பலூன்களுடன் கையில் ஒரு வெள்ளரிப் பிஞ்சு அளவுக்கு பலூன் ஒன்றை ஜபமாலை போல உராய்ந்து பலூனுள...

முடி - பாஞ்சாலி முதல் பதஞ்சலி வரை

சில மாதங்களுக்கு முன் ’கொம்பன்’  படத்தைப் பார்த்தேன். அதில் ஒரு வசனம் “மீசைய முறுக்கிட்டு திரியற இவிங்கள போல நீயும் உருப்படாம போவ” எனக்கு மீசை இல்லை, அதனால் பக்கத்தில் இருந்தவரைப் பார்த்தேன். படத்தில் நடிப்பவர்கள் எல்லோர் முகத்திலும் புசுபுசுவென்று முடியும், சண்டைக்குச் சட்டையை கழட்டினால் நெஞ்சிலே அதே புசுபுசு. ”நீ என்ன பெரிய கொம்பனா?  அல்லது உன் தலையில் என்ன பெரிய கொம்பா மொளச்சிருக்கு” என்று பேசுகிறோம்.  மீசைக்கும் கொம்புக்கும் என்ன சம்பந்தம். இருக்கிறது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். சினிமாவில் ஒருவனுக்குத் தலை நிறைய முடி இருந்தா அவன் நகரத்துப் பொறுக்கி; மூஞ்சி முழுக்க இருந்தா கிராமத்து ரவுடி; கிராப் வெட்டியிருந்தால் போலீஸ்; பங்க் என்றால் தாதா என்ற அடையாளங்கள் இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெய் சங்கர் படங்களில் எக்ஸ்டராவாக கண்ணத்தில் ஒரு மச்சம் இருக்கும். சிலருக்கு மச்சத்தின் நடுவில் ஒரு முடி வளரும். ஏன் என்று தெரியாது. தேவர் மகனில் சிவாஜி சாருக்கு அடுத்ததாகக் கமல் சார் வாரிசாக மாறும் போது தலையில் ’பங்க்’கை எடுத்துவிட்டு அப்பா மாதிரி மீசை வைத்துக்கொண்டு முடி திருத்தி...

பரவச பொங்கல்

பரவச பொங்கல் அன்புள்ள சுஜாதா தேசிகன் அவர்களுக்கு, நலமா ? கல்கியில் சமீபத்தில் நீங்கள் எழுதிய கதையை படித்தேன். நன்றாக இருந்தது. உங்கள் ஃபேஸ்புக்கிலும் கமெண்ட் போட்டிருக்கிறேன். உங்களிடமிருந்து ஒர் உதவி தேவைப்படுகிறது. ’Orgasm’ என்று ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன ? ஆய்வுக்காக எனக்கு இந்த தமிழாக்கம் தேவைப்படுகிறது. ஒரு சொல்லாக இருந்தால் நன்றாக இருக்கும். . இணையத்தில் தேடினால் கெட்ட கெட்ட விஷயங்கள் தான் வருகிறது. கூகிளில் தேடிய போது பரவசநிலை, உச்சநிலை, பரவச பொங்கல் போன்ற சொல் பிரயோகங்கள் தான் வருகிறது. சிலர் கிளைமாக்ஸ் போன்ற ஆங்கில வார்த்தையையே உபயோகிக்கிறார்கள். திருப்திபடுதல் கிட்டே வருகிறது ஆனால் திருப்தியாக இல்லை. ”ஐ” படத்தில் வருவது போல ”அதுக்கும் மேலே” என்பது மாதிரியான ஒரு வார்த்தை வேண்டும். எனக்கு நீங்கள் உதவுவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. K.... k......b@gmail.com அன்புள்ள கே... நலம். தேடி பார்த்தேன். கிடைக்கவில்லை. இன்றைய என் அனுபவத்தை சொல்லுகிறேன். அதிலிருந்து அந்த வார்த்தைக்கு விடை கிடைக்கிறதா என்று பாருங்கள். சரியாக பதினோரு மணிக்கு அந்த இடத்த...