வந்தே குரு பரம்பராம் எங்கள் வீட்டு பால்கனியில் பூக்கும் கொடி ஒன்று புதுசாக வளந்து வருகிறது. அதற்கு அருகில் சின்ன சுள்ளியை வைத்து மேலே எழுப்பிவிட்டேன். தினமும் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என்று பார்ப்பது எனக்கும் என் பையனுக்கும் பொழுதுபோக்கு. இன்று அவன் ”கொடியை சைடில் படரவிட்டால் இன்னும் வேகமாக வளரும்” என்றான். ”அப்படியா ? எப்படி ?” அதன் விடை கடைசியில் தருகிறேன். கூரத்தாழ்வான் அருளிய தனியன் இது. லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம் அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் இந்தத் தனியன் வட மொழியிலிருந்தாலும், அர்த்தம் சலபமாகப் புரியும். திருமகள், திருமால் முதற்கொண்டு நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு வழிவழி வந்த குருக்கள் இன்றளவும் அத்தனை ஆசார்யர்களுக்கும் வணங்குகிறேன் கூரத்தாழ்வான் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீ ராமானுஜருடன் குருபரம்பரை முடிவடைந்தாலும், தொலை நோக்குடன் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கணினி கோட் போன்று மிக அருமையாகச் செதுக்கப்பட்ட தனியன் இது. பல நூற்றாண்டுகள் கழித்து வரப் போகும் எல்லா ஆசாரியர்களையும் இதில் அடக்கிவிடலாம். சங்கீதத்தில் எப்படி ஆரோகண, அவரோகண இருக்கிறதோ அதுப