Skip to main content

Posts

Showing posts from May, 2021

24. இராமானுசன் அடிப் பூமன்னவே - வடிவழகு

24. இராமானுசன் அடிப் பூமன்னவே - வடிவழகு  மணக்கால் நம்பி காட்டு மன்னார் முன்பு கைகூப்பி நின்றார். தன் ஆசாரியர்களின் ஆசை நிறைவேறப் போகிறது என்று அவர் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்க, அவர் திருவாக்கில் திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாடக பாசுரம்  உலகம் ஏத்தும் தென் ஆனாய்! வட ஆனாய்! குட பால் ஆனாய்! குணபால மத யானாய்! இமையோர்க்கு என்றும் முன் ஆனாய்!  பின் ஆனார் வணங்கும் சோதி! திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே! உதிர்ந்து காட்டுமன்னார் திருவடியில் விழுந்தது.(1) குருவை சீடன் தேடி அடையவேண்டியதே உலக நியதி. ஆனால் உலகம் நல்வாழ்வு பெறுவதற்கு சீடனைத் தேடி குருவும் செல்லலாம் என்று அந்த நியதியை மாற்றி மணக்கால் நம்பி நாள்தோறும் ஆளவந்தாரது அரண்மனைக்குச் சென்று அன்று இடைப் பிள்ளையான மாயக் கண்ணன் அர்ஜுனனுக்கு தேர்த்தட்டிலிருந்து அன்புடன் அருளிய பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட கீதையின் செம்மைப் பொருளை கண்ணபிரான் சொன்னபடியே ஆளவந்தாருக்குத் தெளிந்த ஆர்வம் உண்டாகுமாறு பதினெட்டு நாள் உரைத்தார்.  ஒரு நாள் மணக்கால் நம்பி கீதையின் சரம ஸ்லோகமான “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷ

இரண்டாம் அலை - சில கேள்விகள், சில பதில்கள்.

 இரண்டாம் அலை - சில கேள்விகள், சில பதில்கள்.  ஏப்ரல் முதல் வாரம் திருச்சிக்குச் சென்றிருந்தேன். நாகரமே முகக்கவசம் இல்லாமல்  “என்ன கொரோனாவா அப்படினா என்ன ?” என்று சுற்றிக்கொண்டு இருந்தது. முகக்கவசம் அணிந்தவர்கள் வெளியூர் தேசாந்திரிகள் என்று சுலபமான அடையாளம் எங்கள் மீது விழுந்தது.  திருவரங்கம் கோயிலுக்குள் முகக்கவசம் அணிந்துகொண்டு வரும் பக்தர்கள் உள்ளே சென்ற பிறகு அதை இடுப்பில் சுருக்குப்பை போலச் சொருகிக் கொள்கிறார்கள்.   தற்போது கோவிட் இரண்டாம் அலையில் சொந்தங்கள், நண்பர்கள் எனத் தினமும் யாராவது அதில் மாட்டிக்கொண்டு தத்தளிப்பதைப் பார்க்கும் போது பயமும் சோகமும் ஒன்றாக சேர்கிறது. விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தினாலும் அதை மக்கள் சரியாக கடைப்பிடிப்பதில்லை  முழு ஊரடங்குக்கு முதல் நாள் திருச்சி மலைக்கோட்டை கீழே உள்ள கூட்டத்தின் படத்தைப் பார்க்கும் போது மே மாதமே தீபாவளி  போல இருக்கிறது! உச்சிப்பிள்ளையார் தான் காப்பாற்ற வேண்டும். விழிப்புணர்வு கேள்வி பதிலாக  தருகிறேன். படித்துவிட்டு மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.  இது என்ன இரண்டாம் அலை ?  போன வருடம் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த வைரஸ் தற்போது இங்

சிஷ்யன் பெயரில் ஆசாரியன் - எங்கள் ஆழ்வான்

 சிஷ்யன் பெயரில் ஆசாரியன் - எங்கள் ஆழ்வான்  திருவெள்ளறைக்கு பல வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன்.  என் பெண் ஆண்டாளுக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கும் இந்தக் கோயிலுக்கும் ஒரு தொடர்பு  இருக்கிறது. பெருமாள் தீர்த்தம் வாங்கிய பின் ”இன்னும் கொஞ்சம் வேண்டும்” என்றாள்.  அர்ச்சகர், அந்தத் தீர்த்த வட்டிலை அப்படியே அவள் கையில் கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துவிட்டு தா என்றார்!  புண்டரீகாட்சனை சேவித்துவிட்டு, மணக்கால் நம்பியின் ஆசாரியரான உய்யக்கொண்டார் மற்றும் எங்கள் ஆழ்வான் இருவரையும் சேவித்தோம்.  ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு இந்த ஊரில் அவதரித்த உய்யக்கொண்டார் தான் திருப்பாவை தனியனான “அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு... என்ற தனியனை அருளினார் என்று நேற்று கட்டுரையில் பார்த்தோம்.  இந்த ஊரில் அவதரித்த இன்னொரு ஆசாரியன் ‘’எங்கள் ஆழ்வான்’  ஆழ்வான் என்றால் கூரத்தாழ்வானை குறிக்கும். இவருக்கும் ‘எங்கள் ஆழ்வானுக்கும்’ ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும் என்று உங்கள் யூகம் சரி தான்.  உடையவர் ஸ்ரீபாஷய வியாக்கனத்தை சொல்லச் சொல்ல அதை எழுத ஸ்ரீகூரத்தாழ்வானை பணித்தார். துரதிஷ்டவசமாக அந்தப் பணிய

உய்யக்கொண்டர் கோதைக்கு சூட்டிய பெயர் !

 உய்யக்கொண்டர் கோதைக்கு சூட்டிய பெயர் !  நாதமுனிகள் தன் மகன்  ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி அருளுரை வழங்குமாறு உய்யக்கொண்டாரைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் காலத்தில் அது முடியாமல் போக, உய்யக்கொண்டார் தன் இறுதிக்காலத்தில் தனது மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் அப்பணியை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி தமது ஆசிரியரின், ஆசாரியன் விருப்பப்படி ஈசுரமுனி மகனுக்கு ’யமுனைத்துறைவன்’ என்று பெயர் சூட்டி அருளிச்செயல் பாடம் புகட்டினார்.  “யமுனை துறைவன்” என்ற பெயர்  எங்கிருந்து வந்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்ததே.  திருப்பாவையில்  மாயனை மன்னு வடமதுரை மைந்தனை  தூய பெரு நீர் யமுனை துறைவனை திருவரங்கத்து அமுதனார் தம் இராமானுச நூற்றந்தாதியில், ஆளவந்தார் என்று கூறாமல் 'யமுனை துறைவன்' என்று நாதமுனிகள் விரும்பிய பெயரையே உபயோகிக்கிறார்.  எதிகட்கு இறைவன் யமுனை துறைவன் இணை அடியாம் கதி பெற்றுடைய இராமாநுசன் என்னை காத்தனனே நாதமுனிகளின் நேர் சிஷ்யர் உய்யக்கொண்டார் இவருடைய இயற்பெயர் புண்டரீகாக்ஷர்.  உய்யக்கொண்டார் (திருவெள்ளறையில் பிறந்தவர்).  இவருக்கு எப்படி உய்யக்க

பதம் பிரித்த பிரபந்தம் - நன்றி

 பதம் பிரித்த பிரபந்தம் - நன்றி  சில வருடங்கள் முன் ஸ்ரீரங்கத்தில் ஒரு கடையில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். பெரிய திருமண்காப்புடன் ஒரு சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர் அங்கே  வந்தார்.   "சாமி பெரிய எழுத்தில் பிரபந்தம் புத்தகம் இருக்கா?" என்று விசாரித்தார் "பெரிய எழுத்தில் எல்லாம் இப்போது யாரும் போடுவதில்லை. இந்த ஒரு புத்தகம் மட்டும் தான் பெரிய எழுத்து. இரண்டு பகுதிகளாக இருக்கிறது" என்று அவரிடம் கொடுத்தார் கடைக்காரர்.  சந்தோஷத்துடன் அதைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீ வைஷ்ணவர் புத்தகத்தைத் திறந்து பார்த்து "நன்னா இருக்கு எவ்வளவு சாமி ?" என்று தன் பர்சை திறந்தார்.  “அறநூற்றி….  ரூபாய்” என்று கடைக்காரர் கூற தன் மார்போடு அணைத்திருந்த அருளிச் செயல் புத்தகத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார் அந்த ஸ்ரீ வைஷ்ணவர்.  அவர் கைக்கு எட்டிய ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் அவர் வாய்க்கு எட்டவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஆனால்  அந்தச் சமயத்தில் அந்தப் புத்தகத்தை அவருக்கு வாங்கி தரும் எண்ணம் அடியேன் உள்ளத்தில் வரவில்லை. ஒரு வைணவனாக ஸ்ரீரங்கத்தில் இருந்தும், கையில் பணம் இருந்த