Skip to main content

Posts

Showing posts from May, 2005

ஸ்ரீரங்கம் - 1

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் சிறுகதை தொகுப்பில் உள்ள கோட்டோவியங்களைப் பார்த்தீர்பீர்கள். இதனை வரைவதற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு- சுஜாதா, ஸ்ரீரங்கம். கடந்த ஆண்டு(2003) ஜூலை-ஆகஸ்டு மாதம் சுஜாதாவுடன் பேசிக் கொண்டியிருந்த போது இந்த எண்ணம் தோன்றிற்று. சினிமாவில் கதைகளுக்கு சம்பந்தம் இல்லாமல் வரும் காமெடி டிராக் போல, கதைக்கு சம்பந்தம் இல்லாமல் ஸ்ரீரங்கத்தில் உள்ள சில முக்கியமான இடங்களை கோட்டோவியங்களாகப் பதிவு செய்வது என்று முடிவு செய்தேன். வரைவதற்கு ஒப்புக் கொண்ட நாள்முதல் எனக்குள் ஒரு சின்ன பயம் பற்றிக் கொண்டது. காரணம் நான் கடைசியாக வரைந்தது 10 வருடம் முன்னால்! மற்றொன்று கதை நான் பிறப்பதற்கு முன்பு நிகழ்ந்ததால் அன்றைய ஸ்ரீரங்கத்தை வரைய வேண்டும்! ஸ்ரீரங்கத்தின் மரபு வழி வரலாறு, தமிழ் இலக்கியத்தில் ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கத்தின் வரலாறு, கல்வெட்டுகள், அதன் பின் கோயிலுக்குள் செல்லலாம் என்று இருக்கிறேன். நான் பார்த்த ஸ்ரீரங்கத்தை எனது அனுபவத்தையும் அதன் சரித்திர சிறப்புக்களுடனும் வரும் வாரங்களில் தரவுள்ளேன். ஸ்ரீரங்கத்தைப் பற்றி புத்தகங்கள் படித்தும், சொல்லிக்கேட்டும் எனக்கு தெரிந்த வரை எளிமை

பிரதாப முதலியார் சரித்திரம்

பிரதாப முதலியார் சரித்திரம் , புத்தக விமர்சனம் - ஹரன்பிரசன்னா தமிழின் முதல் உரைநடை நவீனம் என்று சொல்லப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், மாயூரம் வேதநாயகம்பிள்ளையால் எழுதப்பட்டு 1879-ம் ஆண்டு வெளிவந்தது. தமிழின் முதல் உரைநடை நவீனத்தை வாசிப்பதிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த நான், அதன் நடையையும் அதிலிருக்கும் வார்த்தைப் பிரயோகங்களையும் ஒருவாறு கற்பனை கொண்டு, படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் பெரும் கஷ்டமாய் இருக்கும் என நினைத்திருந்தேன். புத்தகம் கையில் கிடைத்து அதை வாசிக்கத் துவங்கிய பின்பு, நான் செய்து வைத்திருந்த கற்பனை எத்தனை அபத்தமானது என்பது புரிந்தது. எவ்விதத் தங்குதடையில்லாமல் வாசிக்க முடிந்தது பெரும் ஆச்சரியமாய் இருந்தது. கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவலை வாசிக்கிறோம் என்கிற எண்ணமே பெரும் எழுச்சி தருவதாக அமைந்தது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை வாசிக்கும்போதும் என் மூதாதையர் எனக்கு விட்டுச் சென்ற தனிப்பட்ட கடிதத்தைப் படிப்பது போன்ற உணர்வு தொடர்ந்து கொண்டே இருந்தது. 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழின் நவீனம் இன்னமும் சரளமாய் வாசிக்கக்கூடியதாகவும் ப

லொஸ்கு

" Nothing is real " என்ற Beatles பாடலை விக்கிரமாதித்தன் பாடிக்கொண்டு வந்தான். "என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு" என்றது வேதாளம். "ஒண்ணுமில்லை, சும்மா தான்" "ஒண்ணுமில்லையா?" "ஒண்ணுமில்லைதான் ஆனா ஒண்ணுமில்லையிலே ஏகப்பட்டது இருக்கு" "சரி ஒரு முடிவோட வந்துட்டே சொல்லிதொலை" என்றது வேதாளம். ஆங்கிலத்தில் 'நத்திங்'(Nothing), 'நாட் எனிதிங்(not anything) என்று பொருள். தமிழில் ஒன்றுமில்லை. இந்த 'ஒன்றுமில்லாத'தற்கு நிறைய சொற்கள் இருக்குறது - காலியான, பூச்சியம், வெறுமை, அவாந்தரம், சூனியம், சுத்தசூனியம், ஒன்றுமில்லை, பூரை, லொஸ்கு , ஆகாசமயம்.. பார்க்கப் போனால் எல்லா துறைகளிலும் இந்த 'நத்திங்' இருக்கிறது. ஆங்கில அகராதியில் இதற்கு என்ன பொருள் என்று பார்த்தால் - nil, none, nulliform, nullity, noughts... என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. சுருக்கமாக ஒன்றுமில்லாததில் எல்லாம் இருக்கிறது - பூச்சியம்/ஸைபர்(Zero/Chiper), ஸீரோ பாய்ண்ட்ஸ்(Zero points), ஸீரோ ஹார்(Zero Hour), வெற்றிடம்(vacuous), காலியான(void), சூனியப்பிரதேசம்(v

பணம் காசின் பரிணாமம்

பணம் காசின் பரிணாமம் - எஸ்.வி. ராமகிருஷ்ணன் ஓரிடந் தனிலே நிலைநில்லாது லகினிலே உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே ’வேலைக்காரி’ படத்தில் (1949) ஒரு பாடல். எனக்கு ஏழு வயது ஆனபோது (1944) ஒரு அசாதாரணமான சம்பவம் நிகழ்ந்தது. அதுதான் ஓட்டைக் காலணாவின் பிறப்பு. காலணா என்பது ஒரு ரூபாயின் 1/64 பகுதி. இன்று அதற்கு அர்த்தமே இருக்க முடியாது. ஆனால் அன்றைய தேதியில் அதற்கு மிட்டாயோ தேங்காய் பர்பியோ வாங்க முடியும். ‘சின்னக் கிளாஸ் பசங்களிடம்’ அதிகமாகப் புழங்கியது காலணாக்கள்தான். காலணாதான் குழந்தைகளின் அடிப்படை நாணயமென்றே சொல்லலாம். அதுவரையில் வழங்கி வந்த காலணாவுக்கான செப்பு நாணயங்கள் பெரிதாகவும் கறுத்துப் போயும் சில சமயங்களில் பச்சைக் களிம்பு பிடித்தும் காணப்படும். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய விக்டோரியா மகாராணியின் காலணாவிலிருந்து என் காலத்தின் ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி படம் பொறித்த காலணா வரையிலும் இதேபோலத்தான் இருந்தன. ஆனால் திடீரென்று முளைத்த புதிய காலணாவோ அதுவரை கேட்டிராத அதிசயமாக நடுவில் பெரிய ஓட்டையுடன் ‘வாஷர்’ மாதிரி விளங்கியது. பளபளவென்று தங்கம்போல் மின்னியது. இது குழந்தைகளின் உள்ளங்கள

வேதாளம்'s Day Out

காலை பத்து மணிக்கு , வேதாளம் விக்கிரமாதித்தனை எழுப்பியது. "நானும் உன்னோட இன்னிக்கு ஆபிஸ் வரேன்" என்றது. அதிர்ச்சியில் விக்கிரமாதித்தனுக்கு தூக்கம் கலைந்தது "என்ன நீயா ? No way" என்றன். "நான் வ-ரே-ன்" என்று அழுத்தமாக சொல்லியது வேதாளம். ஜீன்ஸ்-T-Shirt- Nike ஷூவுடன், காலை பதினோறு மணிக்கு தூக்கக்கலகத்துடன் விக்கிரமாதித்தன் வேதாளதுடன் ஆபிஸுக்கு சென்றான். கதவிற்கு பக்கத்தில் தன் ஐடி கார்டை தேய்த்து, "குவிக்" சத்தத்திற்கு பிறகு உள்ளே சென்றான். ஏசி காற்று மேல் அடித்தது. வேதாளம் சினிங்கியது. "இது என்ன நாய் செயின் மாதிரி" என்றது வேதாளம். "நக்கலா ? இது தான் ஐடி கார்ட்" என்றான் விக்கிரமாதித்தன். வேதாளம் "என்ன எவ்வளவு லேட்டா ஆபிஸ் போறேயே" என்றது .விக்கிரமாதித்தன் பெருமையாக "you know we have flexi-timings" என்றான். விக்கிரமாதித்தன் தன் இருக்கையில் உட்கார்ந்தான். அவன் தோளின் மேல் வேதாளம் உட்கார்ந்தது. பக்கத்து இருக்கைகள் காலியாக இருந்தது. தூரத்தில் யாரோ இரண்டு மூன்று பேர் கண்ணுக்கு தெரிந்தார்கள்... பிசிக்கு இடது பக்கத்தி

ஹாப்பி பர்த்டே சுஜாதா ! - Follow-up

சென்ற வாரம் விகடனில் நான் எழுதியக் கட்டுரையை மிகப் பலர் போனிலும், நேரிலும், மென்மெயிலிலும், மின்மெயிலிலும் பாராட்டினார்கள். சிலர் கட்டுரை சோகமாக இருந்தது என்றார்கள். சிலர் தமாஷாக இருந்தது என்றார்கள். மதன், 'இந்தமாதிரி எனக்கு எப்ப சார் எழுத வரும்?' என்றார். 'எழுபது வயசானதும்' என்றேன். ஜெயமோகன் அது, நான் எழுதிய சிறந்த கட்டுரைகளில் ஒன்று என்றார். அவருடைய மனைவி, அதில் சோகமும், வருத்தமும் இழையோடுவதாகச் சொன்னார். தேசிகன் அதைக் காலையில் படித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் சுற்றினேன். தூக்கம் போய்விட்டது என்றார். எனக்கு எழுபது வயது நிறைந்ததைப் பற்றி எழுதிய கட்டுரை அது. தேசிகனின் blogல் உள்ளது . எழுபது - பல பாசாங்குகளுக்குத் தேவையும், அர்த்தமுமில்லாமல் போகும் வயசு. நமது கன்விக்ஷன்ஸ் எல்லாம் மெல்ல மெல்லக் கழன்று கொள்ளும். மற்றவர் பார்வையிலும் தீர்க்கம் உள்ளது என்பதை உணரும் வயசு. நம்முடைய அத்தியாவசியப் பட்டியல் அடித்துத் திருத்தப்படும் வயசு. இதையெல்லாம் உண்மையாக எழுதினபோது அதே மாதிரி உணர்ந்தவர்கள், ஆனால் சொல்ல தயக்கமுள்ளவர்கள் அந்தக் கட்டுரையுடன் சுலபமாகத் தங்களை அடையாளம் கண்டு க

ஹாப்பி பர்த்டே சுஜாதா !

  சுஜாதா எழுதிய எல்லாவற்றையும் படித்து அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவம் குதூகலம், விளையாட்டு, பக்தி, உற்சாகம், துக்கம் என கலவையானது. ஆனால் நேற்று ஆனந்த விகடன் 'கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா எழுதிய இந்த கட்டுரை என்னை கொஞ்சம் டிஸ்டர்ப் செய்தது. முதுமை ஒரு தவிர்க்க இயலாத கட்டளை என்ற போதிலும் அதை எதிர்கொள்வது ஒரு கலை. வயோகதிகத்தின் அச்சுறுத்தும் இருண்ட கனவுகளை அங்கதமாக மாற்றி அதனோடு விளையாடுவதற்கு வாழ்க்கையின்மீதான ஒரு பெரிய தரிசனமும் சுய வெளிச்சமும் இருந்தால்தான் சாத்தியம். சுஜாதாவின் இந்தக் கட்டுரை அந்த வெளிச்சத்தை கொஞ்ச நேரம் நம் மனங்களில் ஏற்றுகிறது. அவர் இந்தக் கட்டுரையில் கூறியிருக்கும் ஞாபக மறதி உட்பட பல symptoms எனக்கு இந்த வயதிலியே இருப்பதை நினைத்தால் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது இன்று தனது 70வது பிறந்த நாள் காணும் திரு.சுஜாதாவிற்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள். அவரை ஸ்ரீரங்கநாதர் நல்ல உடல் நலத்துடன் வைத்துக்கொள்ள பிரார்த்திக்கிறேன். நான் சுஜாதாவின் தீவிர வாசகன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.   இந்த வார 'கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா... மே மாதம் மூன்றாம்