“ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவாரோ” - திருமங்கை ஆழ்வார் சில மாதங்களுக்கு முன் தி.நகரிலிரிந்து தாம்பரம் சானிடோரியத்துக்கு குடிபெயர்ந்தேன். ஸ்ரீவைஷ்ணவர்கள் அதிகம் இருக்கும் இடம் அதனால் சரவணபவன் கூட கிடையாது என்பது முதல் ஆச்சரியம். பழம்பெரும் தமிழ் எழுத்தாளர்களைவிட கொசு அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் ரிஸ்க் எடுக்காமல் முதல் வேலையாக நெட்லானை வெல்கரோ கொண்டு கதவை விட்டுவிட்டு ஜன்னல் பொன்ற சின்ன ஓட்டைகளை அடைக்க ஏற்பாடு செய்தேன். பக்கத்துவிட்டு முருங்கை மர குப்பை உள்ளே வராமலும், நான் தாளித்தால் கடுகு கூட ஜன்னல் வழியாக வெளியே போகாதபடி மிகவும் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். மன்னிக்கவும் வாழ்ந்தேன். பெங்களூரில் ஒரு வாரம் வாசம் முடித்துவிட்டு செய்துவிட்டு இன்று சென்னை திரும்பினேன். காலை ஐந்தரைக்கு வீட்டை திறந்தால் எல்லாம் அலங்கோலமாக இருந்தது. ஷூராக் கீழே விழுந்து, நியூஸ் பேப்பர் கலைந்து, வீடு முழுக்க ஏதோ மஞ்சள் திரவம்... கூடவே வயிற்றை குமட்டிக்கொண்டு எலி செத்த நாற்றம். செத்த எலி எங்கே ? எங்கிருந்து வந்திருக்கும் என்று காலை ஆறு மணிக்கு ஆராய