”ராமானுஜலு பற்றியும் எழுதுங்களேன்”...
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் செய்ய கூடாது - பகவத அபச்சாரம்( நாராயணனே நமக்கே பறை தருவான்!), பாகவத அபச்சாரம்.
இதில் பாகவத அபச்சாரம் செய்யவே கூடாது. அந்த அபச்சாரத்தை பெருமாள் கூட மன்னிக்க மாட்டார்.
கூரத்தாழ்வாருக்கு கண்ணிழந்த போது, உடையவர் அவரை பார்த்து
உமக்கு இந்த நிலையா ?” என்று கேட்ட போது அதற்கு கூரத்தாழ்வார் ”யாராவது ஒரு வைணவரின் நெற்றியிலுள்ள திருமண் கோணலாக உள்ளதே என்று நினைத்திருப்பேனோ என்னவோ” என்று பதில் அளித்தார். அவருக்கே இந்த நிலமை என்றால் நம் போன்றவர்களுக்கு ?
ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீசூர்ணம் கூட இட்டுக்கொண்டு வெளியே போக வெட்கப்படும் இந்த காலத்தில் நாயுடு சமுகத்தினர் நெற்றி நிறைய திருமண் தரித்துக்கொண்டு கோயிலில் “அங்கே போய் நில்லு” என்று அந்த பாகவதர்களுக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் துளிக்கூட Ego இல்லாமல் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் காண்பிக்காமல் அவர்களால் எப்படி இருக்க முடியும் என்று யோசித்ததுண்டு.
இதை வைத்துக்கொண்டு எழுதியது தான் ராமானுஜலு கதை. ஸ்ரீராமானுஜர் பாஞ்சஜன்யம் ( சங்கு ) அம்சம் ஆவார். கதையில் நம் ராமானுஜலுவின் அப்பாவின் பெயர் சங்கு கோவிந்தசாமி என்று சின்ன சின்ன விஷயங்களை வைத்தேன்.
இந்த கதையை பிரசுரித்தவுடன் சுஜாதா எனக்கு மெயில் அனுப்பி நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அவர் தயாரித்த டைம்ஸ் இலக்கிய மலருக்கு இதை அவரே தேர்வு செய்து பிரசுரித்தது அவரின் பெருந்தன்மை!

இவர்கள் புலையர்கள். இவர்கள் நரகத்தழுந்துவதிலிருந்து அந்த ஆனானப்பட்ட நைமிசாரணியத்துள் எந்தையாலும் காப்பாற்ற முடியாது.
ReplyDeleteஐயா திரு இராமணுஜர் ஆதிஷேஷன் அவதாரம் என தாங்களே மணவாளமுனிகளைப்பற்றி எளுதியதில் சொல்லிஉள்ளீர்கள்.இங்கு பாஞ்சஜன்யம் அவதாரம் என எளுதி உள்ளீர்கள்.தயவு செய்து பதில் தரவும்.நன்றி.
ReplyDelete