Skip to main content

Posts

Showing posts from April, 2021

பதம் பிரித்த பிரபந்தம் - அப்டேட்

ஸ்ரீ ஸ்ரீமதே ராமானுஜாய நம:  கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பேக் செய்யப்பட்டு எல்லோருக்கும் அனுப்பிக்கொண்டு இருக்கிறோம்.   புத்தகம் வராதவர்களுக்கு இன்னும் சில நாட்களில் வந்து சேரும்.  கவலைப்படாதீர்கள்.  அடுத்த புதன் கிழமை வரை காத்திருந்து புத்தகம் வரவில்லை என்றால் டிரஸ்டுக்கு மெயில் அனுப்பவும். பெங்களூர் வாசிகள் லாக்டவுன் பிரச்சனையினால் கொஞ்சம் தாமதம் ஆகலாம் என்று நினைக்கிறேன். பொறுமையாக இருக்க பிராத்திக்கிறேன்.  இதுவரை புத்தகம் கிடைத்தவர்கள், சந்தோஷமாக அடியேனுக்கு அவர்கள் பூஜை அறையில் வைத்த புத்தகப் படமும் வாழ்த்துகளும் அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி.  இவை எல்லாம் ஆழ்வார்கள், ஆசாரியர்கள் மற்றும் மிக உன்னதமான பாகவதர்கள் துணைகொண்டு நடந்தவை. அவர்களுக்குப் பல்லாண்டு.  அடியேன் தாஸன்,  சுஜாதா தேசிகன் பிகு: புத்தகங்கள் தற்போது ஸ்க்டாக் இல்லை, உங்களுக்கு தேவை என்றால் rdmctrust@gmail.com மெயில் அனுப்புங்கள்.  எக்ஸ்டரா காபி இருந்தால் தொடர்பு கொள்கிறோம்.

"இப்போது, நடுவில்" சில ஆழ்வார்கள், ஆசாரியர்கள்!

" இப்போது , நடுவில் " சில ஆழ்வார்கள், ஆசாரியர்கள்! இந்தக் கட்டுரை தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைக்கலாம். படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். " இப்போது , நடுவில்"  என்ற இந்த இரண்டு சொற்களும் எப்படி எல்லாம் இந்தக் கட்டுரையில் வருகிறது நீங்கள் கவனிக்க வேண்டும் !  இன்று சித்திரையில் சித்திரை நாள். ஏன் முக்கியம் ? இன்று ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி மற்றும் ஸ்ரீ மதுரகவியாழ்வார் ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ நடாதூர் அம்மாள் முதலில் நடுவிலிருந்து ஆரம்பிக்கலாம். ‘நடு செண்டர்’, ‘நட்ட நடுவில் ’ என்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி உபயோகிப்போம்.  விழா மேடையில் ‘சீப் கேஸ்ட்’ நடுநாயகமாய் இருப்பார். நரசிம்ம அவதாரம் காலையும் இல்லாமல், இரவும் இல்லாமல் நடுவில் தான் நடந்தது. கஸ்தூரி மானின் வயிற்றின் நடுப்பகுதியில் தான் கஸ்தூரி கிடைக்கும்… அறிவியலில் center of gravity, center for attraction, epicenter என்ற வார்த்தைகள் உங்களுக்கு நினைவு இருக்கலாம். உயிரணு நடுவில் தான் DNAவின் பெரும் பகுதி இருக்கிறது. ஆங்கிலத்தில் ‘nucleus’ என்பதற்கு ‘the central and most important part of an object, movement, or gro

ஆழ்வார் + ஆசாரியன் ஆசீர்வாதம் !

ஆழ்வார் + ஆசாரியன் ஆசீர்வாதம் ! கருமையான மேகங்கள் சூழ சில மணி நேரம் முன் பெங்களூரில் பலத்த மழை. எங்கும் குளுமை பரவ அப்போது எனக்கு சில படங்கள் வந்தது.  "நின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே" என்ற சந்நிதியிலிருந்து வந்த படங்கள் அவை. திருவாய்மொழி திருநாள் ஏற்படுத்திய திருமங்கை மன்னன் காலையில் ஆசீர்வதிக்க ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவரான நம்மாழ்வார் இன்று மாலை புத்தகத்தை ஆசீர்வதித்தார்.  இந்த கோவிட் சமயத்திலும் மருத்துவர்களாக இருக்கும் ஸ்ரீ உ.வே கோகுல் தம்பதிகளாக சென்று ஞானபிரான், பொலிந்த நின்ற பிரான், ஆதிப்பிரான் சந்நிதிகளிலும், நம்மாழ்வார் மூலவர், உற்சவர் திருவடிகளிலிருந்தும், ஆதிக்ஷேனாக விளங்கும் உறங்காப்புளி பொந்தில் பதினாறு வருடங்கள் நம்மாழ்வார் தவம் இருந்து நமக்கு நாதமுனிகள் மூலம் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் கொடுத்த இடத்திலும் புத்தகம் ஆசீர்வாதம் பெற்றது.  அதே சமயம் எனக்கு சேலையூர் அஹோபில மடத்திலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு. ஸ்ரீமத் அழகிய சிங்கர் இப்போது தான் சென்னை ஏளினார், தபால்களை பார்த்த போது உங்கள் புத்தகம் வந்திருந்தது. ஸ்ரீமத் அழகி

ஸ்ரீ திருமங்கை மன்னன் ஆசீர்வாதம் !

ஸ்ரீ திருமங்கை மன்னன் ஆசீர்வாதம் ! அடியேனுக்கு திருவாலி திருநகரியில் கலியனை மனம் குளிர சேவிக்க வைத்து இந்த வயதிலும் ( 80+ ) நித்திய கைங்கரியம் செய்யும் ஸ்ரீ உ.வே எம்பார் ராமானுஜன் ஸ்வாமிகள் இன்று காலை 'கடைக்குட்டி' ஆழ்வார் என்று போற்றப்படும் நம் கலியனிடம் புத்தகத்தை ஆசீர்வாதம் பெற்றி தந்தார். அவர்களுக்கு என் நன்றிகள் பல பல  அவர் விவரித்தது இது அதை இங்கே கொடுத்திருக்கிறேன்:  முதலில் தாயார் திருவடிக்கு சென்ற புத்தகத்துக்கு தாயார் பிரசாதமாக தன்னிடம் இருந்த மஞ்சள்காப்பு,  திருமுடியிலிருந்து புஷ்பம் பிரசாதிக்க,  அங்கிருந்து ஸ்ரீந்ருஸிம்ம சன்னதிக்கு சென்று பிறகு சிந்தனைக்கு இனியான் திருவடிக்கு சென்று, ஆழ்வார் திருவடி அதற்கு கீழே வீற்றிருக்கும் ஸ்ரீ உடையவர் திருவடிக்கு சென்றது. அப்போது  திருமங்கை மன்னன் பிரசாதமாக புஷ்பங்களை அருளினார்.  படங்கள் :  1.ஶ்ரீந்ருஸிம்ஹப் பெருமாள் ஸன்னதியில் 2.ஶ்ரீதிருமங்கைமன்னன் ஸன்னதி வாசலில்   3.ஸன்னதி அர்ச்சகர் மற்றும் ஸன்னதி ஸ்தலத்தார் திருக்கரங்களில் புத்தகம்.  - சுஜாதா தேசிகன் 23-04-2021

ஸ்ரீஆண்டாள் ஆசீர்வாதம்

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் 'மனத்துக்கு இனியான்' என்று அழைத்த ஸ்ரீராமரின் திருநட்சத்திரம் இன்று.  இன்றைய நன்னாளில் 'ஆழ்வார்கள் அருளிய திவ்யப் பிரபந்தப் புத்தகம்' ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலிலையில் பள்ளிகொண்ட வடபத்திரசாயி , ஸ்ரீபெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் திருவடியில் புத்தகம் ஆசீர்வாதம் பெற்றது.  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே பாலமுகுந்தாச்சாரியார் அரையர் ஸ்வாமி , பெரியாழ்வார் வம்சத்து ஸ்ரீ.உ.வே வேதப்பிரான் பட்டர் ஸ்வாமி,  ஸ்ரீ.உ.வே ஸ்தானிகம் ரங்கராஜன் ஸ்வாமி, ஸ்ரீ உ.வே ஹரிஷ்பட்டர் ஸ்வாமிகள் புத்தகத்தைப் பார்த்து வெவாகுக பாராட்டினார்கள் என்று அறிந்துகொண்டேன்.  இதை இன்று சாத்தியமாக்கியவர் 'மல்லிநாடாண்ட மடமயில்' என்று ஆண்டாளின் ஊரை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீ உ.வே. கண்ணன் ஸ்வாமி அவர்கள். அவருக்கு என் நன்றிகள் பல.   - சுஜாதா தேசிகன் 21-04-2021 ஸ்ரீராம நவமி

23. இராமானுசன் அடிப் பூமன்னவே - தூதுவளை

     பல மாதங்களாக இராமானுசன் அடிப் பூமன்னவே தொடரை வேறு பல வேலைகள் காரணமாக எழுத முடியவில்லை. இராமானுசரின் 1004 திருநட்சத்திரம் அன்று மீண்டும் இராமானுசருடன் நம் பயணத்தை தொடங்கலாம். பலருக்கு இதற்கு முன் பகுதி மறந்திருக்காலாம். அதை இங்கே படித்துவிட்டு இதை தொடங்கலாம்...  வீர நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வந்த மணக்கால் நம்பி பெருமாள் முன் நின்ற போது ஆளவந்தார் யானையின் மீது செல்லும் காட்சி மனதில் ஓடியது.  நடுக்காட்டில் ஒருவனுக்குக் கண்ணைக் கட்டிவிட்டு, அவனிடம் இருக்கும் செல்வத்தைத் திருடர்கள் வந்து பறித்துச் செல்ல, முள்ளும் கல்லும் நிறைந்த பாதையில், எங்கும் காட்டு விலங்குகள் இருக்க ‘ஐயோ எனக்கு நல்ல பாதையைக் காட்டுபவர் யாரும் இல்லையா ?’ என்று தவிப்பவனைப் போல ஆளவந்தார் இருக்கிறார்.   முள்ளும், கல்லும் நிறைந்த சம்சாரம் என்ற காட்டில், மோகம் என்ற திருடர்கள் ஞானம் என்ற செல்வத்தை அபகரித்துச் செல்ல,  பாதை தெரியாமல் ஆளவந்தார் யானையின் மீது செல்கிறார். தவிப்பவனுக்குக் கண்கட்டைத் திறந்துவிட்டு நல்வழியைக் காட்டுபவன் தானே குரு.  ஆனால் இனி ஆளவந்தாரை நேரில் சந்திக்க முடியுமா ?  சோழ மன்னனது ராஜ்யத்தில் பாதியை

திவ்யப் பிர’பந்தம்’ வெளியீடு

 திவ்யப் பிர’ பந்தம் ’ வெளியீடு  இன்று ஸ்ரீராமானுஜரின் 1004 திருநட்சத்திரம்.  வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்* ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும்*- ஈன்ற முதல்தாய் சடகோபன்* மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன். என்று நம் அமுதத் திருவாய் ஈரத் தமிழினான சடகோபன் திருவரங்கன் மேல் பாசுரங்களை சொல்லச் சொல்ல தமிழ் சொற்கள் எல்லாம் ஆழ்வாரின் திருவாக்கில் வர வரிசையில் நின்று பணி செய்யத் துடித்தன. நம்மாழ்வாரே இதை “சொல் பணி செய் ஆயிரத்துள்” என்கிறார். இவரிடம் பணி செய்ய கொடுப்பினை இல்லாத சொற்கள் எல்லாம் ‘ஐயோ! நம்மாழ்வார் திருவாக்கில் வரமுடியவில்லையே என்று ஏங்கி அழுதனவாம்.  ஆழ்வாரின் திருவாக்கில் வந்த அந்த ஈரச்சொற்களை ‘நாவினால் நவிற்று இன்பம் எய்தினார்’ மதுரகவிகள்.  நம்மாழ்வார் முதல் தாய் என்றால் அதை வளர்த்த தாய் நம் இராமாநுசன்.   ஆழ்வாரின் ஈரச் சொற்களை ‘ ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் ’  புத்தகம் ஆழ்வார் ஆசாரியர்களின் அருளால் இன்று வெளியிடப்படுவதில் அடியேனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.  வரும் வாரங்களில் புத்தகம் உங்களை வந்தடையும்..  புத்தகத்தின் கடைசியில் ’வா

பதம் பிரித்த பிரபந்தம் - எப்போது எனக்கு வந்து சேரும் ?

பதம் பிரித்த பிரபந்தம் - எப்போது எனக்கு வந்து சேரும் ?  சிலர் புத்தகம் எப்போது வரும் என்று கேட்கிறார்கள்,  பலர் எப்போது வரும் என்று கேட்கத் தயங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.  பிழை திருத்தம் முடிந்து பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீரங்க நாச்சியாரும், ஸ்ரீ நம்பெருமாளும் சேர்த்தி கண்டருளும் போது புத்தகம் அச்சடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட முடிவு பெறும் நிலையில் இருக்கிறது.  புத்தகத்தின் முன் அட்டையில் நம்பெருமாள் சேவை சாதிக்க பின் அட்டையில் ஆழ்வார்கள் கோஷ்டியாக எழுந்தருளியிருக்கிறார்கள். படங்களைக் அன்புடன் கொடுத்து உதவிய D Sudhakaran Sudhas , Sowbaktha Gopala, SriRengaVilasam  அவர்களுக்கு நன்றி.   புத்தகம் அச்சாகும் முன் கடைசியாகப்  புத்தகம் வெளியீடு செய்யும் நாளையும் அதில் குறிப்பிட்டு அச்சடிக்க அனுப்பினேன். அந்த நாள் வரும் சித்திரை திருவாதிரை ( 18-ஏப்ரல் ) ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திரம்.  புத்தகம் ஸ்ரீரங்க நாச்சியார், உறையூர் நாச்சியார், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், திருவாலிதிருநகரி திருமங்கை மன்னன் இவர்களுக்கு அனுப்பிய பின் மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.   உட