இரட்டை ஆசாரியர்கள் கண்ணன் பிறந்த இடம் எது ? என்றால் உடனே மதுரா என்று பதில் சொல்லுவீர்கள். ஆனால் பெரியாழ்வாருக்கு கண்ணன் பிறந்த இடம் திருக்கோட்டியூர் ! தான் ! வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன்முற்றம் கலந்து அளறு ஆயிற்றே. என்கிறார். ஆண்டாள் துளசி தோட்டத்தில் பிறந்து ஆயர்பாடியில் பெண்ணாக தன்னைப் பாவித்துக்கொண்டு ’சங்கத்தமிழ் மாலை’ என்ற திருப்பாவையை நமக்கு தந்தாள். திருப்பாவை தனியனான ”நீளாதுங்கஸ்தன கிரிதடீ ஸுப்தம் முத்போத்ய க்ருஷ்ணம்” என்ற தனியனுக்கும் மேலே சொன்ன திருக்கோட்டியூருக்கும் சம்பந்தம் உண்டு. இந்தத் தனியன் எப்படி அவதரித்தது என்று பார்க்கலாம். திருக்கோட்டியூருக்கு ஸ்ரீராமானுஜர் பதினெட்டு முறை நடந்தார் என்ற சரித்திரம் பிரசித்தம் ஆனால் ஸ்ரீராமானுஜருக்கு பிறகும் அங்கே நடந்த சில சரித்திர நிகழ்வுகள் பற்றி பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். வாருங்கள் கிபி 1122க்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். கூரத்தாழ்வான் திருகுமாரரான பட்டர் காலம் கிபி 1122 முதல் கிபி 1174. இந்தக் காலத்தில் விக்கிரம சோழன் ஆட்சி புரிந்தான் ( மு