Skip to main content

திரு பாவை துதி - 14

திரு பாவை துதி - 14



கோதா ஸ்துதி - 14 - மார்பில் சூடிய வனமாலையை விட கோதை சூடிய மாலைக்கு சிறப்பு


த்வத்புக்த மால்யஸுரபீக்ருத சாருமௌளே:

த்யக்த்வா புஜாந்தரகதாமபி வைஜயந்தீம்|

பத்யுஸ்தவேஶ்வரி மித:ப்ரதிகாதலோலா:

பர்ஹாதபத்ர ருசிமாரசயந்தி ப்ருங்கா:|| .14.



எளிய தமிழ் விளக்கம்


உலக நாயகியே !

நீ முடிசூடி நன்கு அனுபவித்த தனி மணம் மிக்க மாலையை 

உன் நாயகனின் திருமுடியை அலங்கரிக்க, அதனால் ஈர்க்கப்பட்ட 

வண்டுகள் அவன் மார்பில் சூடிய வனமாலை விட்டு விட்டு 

இறக்கைகளை அடித்துக்கொண்டு 

ஒன்றுக்கொன்று தள்ளிக்கொண்டு 

திருமுடிக்கு மேல் வட்டமிடுவது

மயில் தோகை குடை போலக் காட்சி அளிக்கிறது



சற்றே பெரிய விளக்கம்


சென்ற ஸ்லோகத்தில் திருமணத்தின் போடு கோதையை அவளுடைய தோழிகள் கேலி செய்வதாக அமைந்திருந்தது. இந்த ஸ்லோகம் திருமணத்தின் போது காசி யாத்திரைக்கு மணமகன் குடையுடன் புறப்படுவதாக அமைந்தது அந்தக் குடையை ஆண்டாள் எப்படிப் பரிசளித்தாள் என்று சொல்லுகிறார் ஸ்வாமி தேசிகன் 


திருமங்கை ஆழ்வார் பெரியதிருமொழியில் “வண்டு அமரும் வனமாலை மணி முடிமேல் மணம் நாறும்” என்கிறார். (அதாவது 

"வண்டுகள் படிந்த திருத்துழாய் மாலை ரத்னக் கிரீடத்தின் மீது பரிமளம் கமழ நிற்கிறது"). இங்கே ஸ்வாமி தேசிகன் வண்டுகள் திருமுடிக்கு மேலே வட்டமிடுவதை மயில் தோகை குடை போல இருக்கிறது என்கிறார். (மயில் தோகையில் மயில் கண் என்று கருப்பாக அவை வண்டுகள்)


மனம் சந்தோஷமாக இருந்தால் முகம் மலர்ந்து அதைப் பிரதிபலிக்கும் . 

நம்மாழ்வார் “முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ?” என்கிறார். (உன் முகத்தின் ஒளியானது திருமுடிச் சோதியாய் மலர்ந்ததா ?) அரங்கனிடம் எப்போதும் காணும் அந்தப் புன்முறுவலுக்குக் காரணம் ஆண்டாள் சமர்ப்பித்த மாலை தான்! 


ஆண்டாளின் அருளைப் பெற்றவர்களை எம்பெருமான் தலை மீது தூக்கி வைத்துக்கொண்டாடுவான். அது மட்டும் அல்ல “அரசர் ஆகி

கோ இள மன்னர் தாழ குடை நிழல் பொலிவர் தாமே” என்று திருமங்கை ஆழ்வார் கூறுவது போல ”பூலோகத்தில் அரசர்களாகி, சிற்றரசர்களும், இளவரசர்களும் வணங்குமாறு ஒரு குடை நிழலில் பொலிந்து விளங்குவர்” 


AI-படம்: தோட்டத்து வாவியுள் கண்ணன்


- சுஜாதா தேசிகன்
30.12.2023
உங்கள் புழக்கடை.. 


Comments