Skip to main content

Posts

Showing posts with the label சிறுகதைகள்

ஸ்ரீரங்கத்து ஓவியங்கள்

ஸ்ரீரங்கத்து ஓவியங்கள் ஒரு நாள் சுஜாதா ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம் என்றார். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு பத்து பன்னிரண்டு கதைகளுக்குக் குறிப்பு வைத்திருக்கிறேன் என்றும் சொன்னார். ஒவ்வொரு வாரமும், என்னைத் தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அடுத்து எழுதப் போகிற கதையை முழுவதும் சொல்லிவிடுவார். இது எனக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. கூடவே உண்மை கதையைச் சொல்லிவிட்டு அதை எப்படி ‘கதை’யாக மாற்றப் போகிறேன் என்று விளக்குவார். மற்றவர்களுக்கு உபத்திரம் கொடுக்காமல் கதை எழுதும் பாட வகுப்பாக அமைந்தது. அடுத்த வாரம் அவர் சொன்ன கதை எப்படி எழுத்தாக வருகிறது என்று பார்க்கப் பார்க்கப் பரவசம். அனந்த விகடனில் அவர் முடித்தபின், முன்பு வந்த சாவியில் வந்த ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் + ஆனந்த விகடனில் வந்த ஸ்ரீரங்கத்துக் கதைகளும் சேர்த்து புத்தகமாகப் போடும் பேச்சு வந்தது. ”சார் நடுவில் நிறைய ’ஸ்ரீரங்கத்து கதைகள் ‘எழுதியிருக்கிறீர்கள்” என்றேன் “என்ன இருக்கப் போகிறது... நான்கு அஞ்சு கதை இருக்குமா ?” என்றார் “அதுக்கும் மேலே பத்து, பன்னிரண்டு ...” என்று சொன்னபோது ஆச்சர...

அப்பாவின் ரேடியோ விமர்சனம் .எஸ்.ராஜகுமாரன்

பெண் பெயரில் எழுதுபவர்கள் எல்லோரும், பெண் எழுத்தாளர்கள் என்றுதான் அப்போது நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். எப்போது? சுஜாதா என்ற பெயரை பத்திரிகைகளில் பார்த்த தொடக்க காலங்களில். [எழுபதுகளின் பிற்பகுதி] அதற்கு முன்னால் இதுபோல இன்னும் ஒரு காமெடியான யூகம் உண்டு. சிறு வயதில் ரேடியோ கேட்கும்போது ஜோடியாக செவிகளை வருடிய, ட்டி.எம்.எஸ்.- சுசீலாவை புருஷன் பொண்டாட்டி என்று ரொம்ப நாள் வரை கற்பனை செய்து கொண்டிருந்தேன். இதை ‘முதல் ரேடியோ பாடிய வீடு’ என்னும் எனது சிறுகதையில் [விகடனில் பிரசுரம்] பதிவு செய்திருப்பேன். அக்கதை என் அம்மாவின் வாழ்க்கைச் சுருக்கம் என்று சொல்லலாம். நான் பிறந்து வளர்ந்த அம்மாவின் வீடுதான் எங்கள் ஊருக்குள் முதல் ரேடியோ பாடிய வீடு. நான் அந்தக் கதையில், அம்மாவின் வீட்டில் விவரித்திருந்த  பழைய மர்ஃபி வால்வ் ரேடியோ பற்றிதான் அப்பாவின் ரேடியோவில் தேசிகனும் வர்ணித்திருக்கிறார். ஆனால் நான் சொல்லாத சிலதை அவர் அழகாகச் சொல்லியிருக்கிறார். அதே போல் நான் சொன்னவை சில அவர் சொன்னதில் விடுபட்டிருந்தது. இருவரின் மர்ஃபி ரேடியோ காலமும் கொஞ்சம் முன் பின் இருக்கலாம். ஆனால் இந்த இரண்டு ...

தோசை

Question: Light beam is incident on a glass surface with refractive index of 0.6 and angle of refraction of 30 degree. Find the angle of incidence ? இந்த கதையை படிக்கும் முன் சில நிபந்தனைகள். முதல் நிபந்தனை நீங்கள் பிளஸ்-2 படித்திருக்க வேண்டும். இரண்டாவது நீங்கள் ப்ளஸ்-2வில் இயற்பியல் எடுத்திருக்கவேண்டும். மேலே இருக்கும் கேள்விக்கான விடையைக் கேட்கப்போவதில்லை. அப்படியே அதற்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உங்களிடம் மடக்கைப்பட்டியல் என்ற லாகிரதமிக் (logarithm) புத்தகம் தேவைப்படும். லாகிரதமிக் புத்தகம் ஜான் நேப்பியர் என்பவர் 1614’ம் வருஷம் கண்டுபிடித்தார். ஆனால் அவருக்கு முன்பே ஜொஸ்ட் புர்கி என்பவர் அதை கண்டுபிடித்துவிட்டார் ஆனால் அதை பற்றி யாருடமும் சொல்லாததால், அவர் பெயர் பிரபலம் ஆகவில்லை. இப்படி இந்த புத்தகத்துக்கு பின் சுவாரசியமான கதை இருக்கிறது. என்னுடைய லாகிரதமிக் புத்தகம் பின்னாடியும் ஒரு கதை இருக்கு. காந்தி ஜெயந்திக்கு மறு நாள் பள்ளி முதல்வரை அப்பா சந்தித்தார். பள்ளி முதல்வரை ஏன் சந்தித்தார் என்பது இன்னொரு கதை. இரண்டையும் சொல்றேன். நான் படித்த பள்ளியில் ஒழுக்கத்துக்கும், கட்ட...

பில்லா

Be aware of God Beware of Dog சித்தார்த் ஜான்சன் வீட்டு வாசல் கேட்டில் இப்படி எழுதியிருக்கும். நாய்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. காலை தூக்கிக்கொண்டு கம்பத்தின் மீது ‘உச்சா’ போவதைப் பார்த்திருக்கிறேன்; அவ்வளவு தான். நைட் ஷோ பார்த்துவிட்டு வரும்போது பின்தொடர்ந்தால் அதைக் கண்டுகொள்ளாமல் நடப்பது போல பாவனை செய்வேன். ‘குரைக்கிற நாய் கடிக்காது’ என்பார்கள். கடிக்கும் போது நாயால் எப்படிக் குரைக்க முடியும்?  அதனால் அப்படிச் சொல்லியிருப்பார்கள். கடிக்கும் என்ற வார்த்தையை “கடி+ க்க் + உம்” என்றும் எழுதலாம். ஆங்கில இலக்கணத்தில் இதை ஸ்டிராங் வெர்ப்(Strong verb) என்கிறார்கள். தமிழில் வல்வினையாம். சொற்களுக்கு நடுவில் “க்க்” வந்து வார்த்தையை வல்வினையாக்குகிறதாம். இப்பொழுது நீங்களே ‘அக்’கென்று கடித்துப் பாருங்கள்; ‘க்க்’ சத்தம் வரும். (உடனே ‘அக் அக்’னு கடிச்சுப் பார்க்காதீங்க.) கடைசியில் ‘உம்’ விகுதியில் முடிவதால் எதிர்காலமாகிறது. ‘உம்’ விகுதி பற்றி நாய்க்குத் தெரியாத காரணத்தால் பில்லா வந்த அன்றே என்னைக் கடித்தது. வால்வினையால் வந்த வல்வினை. என்ன பில்லாவா? என்று கேட்கநினைப்பவர்கள் கொஞ்சம் பொறுமையாக...