Skip to main content

Posts

Showing posts with the label ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்து ஓவியங்கள்

ஸ்ரீரங்கத்து ஓவியங்கள் ஒரு நாள் சுஜாதா ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம் என்றார். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு பத்து பன்னிரண்டு கதைகளுக்குக் குறிப்பு வைத்திருக்கிறேன் என்றும் சொன்னார். ஒவ்வொரு வாரமும், என்னைத் தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அடுத்து எழுதப் போகிற கதையை முழுவதும் சொல்லிவிடுவார். இது எனக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. கூடவே உண்மை கதையைச் சொல்லிவிட்டு அதை எப்படி ‘கதை’யாக மாற்றப் போகிறேன் என்று விளக்குவார். மற்றவர்களுக்கு உபத்திரம் கொடுக்காமல் கதை எழுதும் பாட வகுப்பாக அமைந்தது. அடுத்த வாரம் அவர் சொன்ன கதை எப்படி எழுத்தாக வருகிறது என்று பார்க்கப் பார்க்கப் பரவசம். அனந்த விகடனில் அவர் முடித்தபின், முன்பு வந்த சாவியில் வந்த ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் + ஆனந்த விகடனில் வந்த ஸ்ரீரங்கத்துக் கதைகளும் சேர்த்து புத்தகமாகப் போடும் பேச்சு வந்தது. ”சார் நடுவில் நிறைய ’ஸ்ரீரங்கத்து கதைகள் ‘எழுதியிருக்கிறீர்கள்” என்றேன் “என்ன இருக்கப் போகிறது... நான்கு அஞ்சு கதை இருக்குமா ?” என்றார் “அதுக்கும் மேலே பத்து, பன்னிரண்டு ...” என்று சொன்னபோது ஆச்சர...

ஊர் எனப்படுவது உறையூர் !

ஊர் எனப்படுவது உறையூர் ! கோயில் என்றால் ஸ்ரீரங்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போல ’ஊர் எனப்படுவது உறையூர்’ என்பது சொல்வழக்கு.  உறையூர்  சோழர்களின் தலைநகரமாக இருந்தது என்று படித்திருக்கிறோம். வேறு என்ன பெருமை என்று தெரியாது ஆனால் இந்த ஊருக்கு ஒரு மகிமை உண்டு. இங்கே அவதரித்தவர்கள் எல்லாம் நம்பெருமாளிடம் மோகித்துள்ளார்கள்.   இங்கே அவதரித்த நம் திருப்பாணாழ்வார் ’அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றை காணாவே' என்று அரங்கனிடம் மோகித்து அவரிடம் சென்றார்.  பிள்ளை உறங்காவில்லி தாஸர் அவர்களை உடையவர் அரங்கன் முன் நிறுத்த அதன் பிறகு நடந்த கதை உங்களுக்கு தெரியும். இவருக்கும் உறையூர் தான் பூர்வீகம்.  உறையூர் நாச்சியாரும் நம்பெருமாளிடம் மோகித்தவர் தான் (நம்பெருமாள் மோகித்தார் என்று கூறுவது தான் சரியாக இருக்கும்!) ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றால் ஆண்டாள் என்பது போல உறையூர் என்றால் அது நாச்சியார் கோயில். இந்த இரண்டு ஊரையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் இப்படி பாடுகிறார்  கோழியும் கூடலும் கோயில் கொண்ட     கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன பாழி அம் தோளும் ஓர் ...

அழகிய கோபுர சிங்கர்

அழகிய கோபுர சிங்கர் ஆவணி ஹஸ்தம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முக்கியமான நாள். இரண்டு காரணம். ஒன்று ‘ஸ்ரீ ராமானுஜ தயாபாத்திரம்’ என்ற தனியன் அவதார நாள். இன்னொன்று ஸ்ரீமத் முக்கூர் அழகிய சிங்கர் என்று அன்புடன் நாம் அழைக்கும் 44ஆம் பட்டம் அழகிய சிங்கர் ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவேதாந்ததேசிக யதீந்திரமஹாதேசிகன் திருநட்சத்திரம். இதை ஒரு பாமரனுக்குச் சொன்னால் ”யார் சாமி அவர் ?” என்பார்.  ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் கட்டிய ஜீயர் - 'கோபுர ஜீயர்’ என்றால் ’அட அவரா!” என்று உடனே எல்லோருக்கும் கோபுரத்தின் மீது விளக்காக எல்லோருக்கும் தெரிந்தவராகிவிடுவார்.  1987 ஆம் ஆண்டு 44ஆம் பட்டம் அழகியசிங்கர் ராயகோபுரத்தை பதின்மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராஜகோபுரமாகக் கட்டிமுடித்தார்.  85 வயதில் கோபுரத்தைக் கட்ட தொடங்கி, தன் 92வது வயதில் இதைக் கட்டி முடித்தார். ராஜகோபுரத்தைவிட இது எனக்குப் பெரிய ஆச்சரியத்தைத் தந்தது. இந்த அழகியசிங்கர் செய்யாறு நதிதீரத்தில் உள்ள முக்கூர் என்ற அக்ரஹாரத்தில் ஸ்ரீ.உ.வே வித்வான் ரங்காசார்யர் ஸ்வாமிக்கு 1895ல் அவதரித்தார். இதுவரையில் அஹோபில மட சரித்திரத்தில் ‘வேதாந்த தேசிகன்’ என்ற திருநாமம் கொண்...

பகல் கொள்ளை, இரவு கொள்ளை

ஆகஸ்ட் 15ம் தேதி இந்த வருடம் லாங் வீக்கெண்டாக சுதந்திரத்தை அனுபவிக்க பெங்களூருவை காலி செய்து ஸ்ரீரங்கத்துக்கு புறபட்டேன்.  என்னை போலவே பலர் காலி செய்ததால் போக்குவரத்து நெரிசலை கடந்து  கிருஷ்ணகிரியில் இருக்கும் A2Bக்கு வர நான்கு மணி நேரம் ஆனது. அங்கே பில்லுக்கு,  காபிக்கு, டாய்லட்டுக்கு என்று எங்கு பார்த்தாலும் டிராபிக் ஜாம். கிழிஞ்சுது கிஷ்ணகிரி  என்பதற்கு நேற்று தான் அர்த்தம் தெரிந்தது. நாமக்கல் தாண்டிய பிறகு முசுறிக்கு முன் காவிரி மணல் ஆறாக காட்சிகொடுத்தது. அதன்  நடுவே சாரை சாரையாக ஏதோ ஊர்ந்து சென்றுக்கொண்டு இருந்தது. இவ்வளவு பெரிய  சைஸ் எறும்பா ? என்று உற்று பார்த்த போது எல்லாம் லாரிகள் அதன் வால் எங்கே  இருக்கிறது என்று தேடிய போது கிட்டதட்ட ஒரு கிமீ தூரம் காவிரிக்கு அரணாக  மறைத்துக்கொண்டு... காவிரியை மணல் குவாரிகளாகிவிட்டார்கள். பிறகு குணசீலம்  தாண்டிய போது மீண்டும் அதே எறும்புகள்...ஒரு பெண்ணை பலர் ஒரே சமயத்தில்  கற்பழிப்பதற்கு சமமாகும் செயல் இது. பகல் கொள்ளை. ஸ்ரீரங்கம் முழுவதும் எல்லோரும் “தண்ணீர் முக்கொம...