Skip to main content

Posts

Showing posts with the label வலைப்பதிவு

பனியன் அண்டர்வேருடன்...

 முதலில் கொஞ்சம் பழைய மேட்டர்...  1995ல் விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த மின்னஞ்சல்களை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த மின்னஞ்சல்கள் தான் அதிகம்.  பின்னர் பிளாகர் வந்த புதிதில் அதற்கு மாறினேன். வலைப்பதிவுக்கு கலர் அடிப்பது, லேயவுட்டை மாற்றுவதை கொஞ்சம் நாள் செய்துக்கொண்டு இருந்தேன். புது மனைவிக்கு அழகு பார்ப்பது அலுத்து போன பிறகு கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன். தமிழ்மணம் வந்த சமயம், அப்போது பிரபு ராமநாதன் எனக்கு அறிமுகமானார். அவர் என் பெயரில் ஒரு domain தருவதாகவும், அதில் என் வீட்டுப்பக்கத்தை கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார். அவரிடம் தொடர்ந்து கண்ணாம்மூச்சி விளையாடினாலும் என்னை அவர் விடுவதாக இல்லை. ஐந்து வருடம் என்னை துரத்தித் துரத்தி என் பேரில் domain வாங்கி தந்தார். காசியின் உதவிக்கொண்டு Blogcms நிறுவினேன். அடுத்த புது மனைவிக்கு அழகு பார்த்த பின்னர், டிவி ரிமோட...