Skip to main content

Posts

Showing posts from January, 2023

ஆடு அழைப்பார் இல்லை

 ஆடு அழைப்பார் இல்லை ஸ்ரீராமரிடம் தோல்வியுற்ற அரக்கர்களுடைய பாவனையில் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் பாசுரங்களைப் பாடியுள்ளார். அதில் ஒரு பாசுரம் இது... இரக்கம் இன்றி எம்கோன் செய்த தீமை* இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்* பரக்க யாம் இன்று உரைத்து என்? இராவணன் பட்டனன்;* இனி யாவர்க்கு உரைக்கோம்?** குரக்கு-நாயகர்காள்! இளங்கோவே!* கோல வல் வில் இராமபிரானே!* அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை;* நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ குரங்கு தலைவர்களே! இளையபெருமாளே அழகிய வில் ஏந்திய ராமபிரானே, இராவணன் செய்த தீமையினால் அதன் பலனை நாங்கள் இப்பிறவியிலேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். விரிவாகச் சொல்ல ஒன்றும் இல்லை. இனிமேல் 'அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை' என்கிறார்கள். இதில் ’அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை’ என்பதற்குப் பட்டர் 'அரக்கர்களில் இனி ஆடு போலக் கூப்பிட வல்லவர் யாருமில்லை’ என்று ஒரு விளக்கம் கொடுத்தார். இதற்கு ஒரு குட்டிக் கதை இருக்கிறது. ஒரு நொண்டி ஆட்டுக்கு முன் ஒரு சிங்கம் வந்து நின்றது. உள்ளே பயம் இருந்தாலும், ஓட முடியாத காரணத்தால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நான்

சுஜாதாவிற்கு கிடைத்த ’சாதித்த’ அகாடமி விருது !

சில மாதங்களுக்கு முன் ஒரு இணைய இதழ் ”எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஏன் உயரிய விருதுகள் வழங்கப்படவில்லை. அவர் சாதி ஒரு காரணமா?” என்ற கேள்விக்குப் பதில் அளிக்குமாறு என்னைக் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு அனுப்பிய பதில் கீழே... சுஜாதாவிற்கு கிடைத்த ’சாதித்த’ அகாடமி விருது ! ஒரு நடிகரிடம் உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் யார் என்ற கேள்விகளை எப்போது கேட்டாலும் அவர்களுடன் சம காலத்தில் இருக்கும் நடிகர்களைக் கூறமாட்டார்கள். எம்.ஜி.ஆர். சிவாஜி போன்றவர்களைக் குறிப்பிடுவார்கள். இது ஒரு விதமான டெம்பிளேட் பதில். இது இசையமைப்பாளர்கள், கர்நாடகப் பாடகர்கள் முதல் எழுத்தாளர்களுக்கும் இது பொருந்தும். தமிழ் எழுத்தாளர்கள் கூறும் ‘டெம்பிளெட்’ பதில் புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா, கி.ஜா, நா.பா … இதைத் தவிர இலக்கியம் படைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கும் எழுத்தாளர்கள் பக்கத்து மாநிலங்களில் உள்ள குஞ்சனையோ குட்டனையோ எக்ஸ்டராவாக குறிப்பிடுவார்கள். இன்றைய பெரும்பாலான எழுத்தார்கள் சுஜாதாவை ஞாபகமாக மறந்துவிடுவார்கள். இதில் உள்ள உளவியல் காரணங்களை யோசித்தால் அசூயை கலந்த போட்டி தான் காரணம் என்று கூறலாம். ’அசூயை’ என்றால

ஆண்டாளின் தமிழ் வார்த்தைகள்

ஆண்டாளின் தமிழ் வார்த்தைகள் சமீபத்தில் ஆண்டாள் அருளிய திருப்பாவையில் சில சொற்களை மேற்கோள் காட்டி அதற்கு உரையாசிரியர்கள் தங்கள் இஷ்டத்துக்குப் பொருள் கூறுகிறார்கள் என்று படித்தேன். அதில் சில விவாதங்களையும் பார்த்தேன். ஸ்ரீ வைஷ்ணவ உரையாசிரியர்கள் தங்கள் இஷ்டத்துக்குப் பொருள் கூறுபவர்கள் கிடையாது. எனக்குத் தெரிந்த தமிழ்ப் பேராசிரியர்களும் அப்படியே. நாதமுனி தொடக்கமாகச் செவி வழியே ஆழ்வார்களின் பாசுரங்களும், உரைகளும் வந்திருக்கிறது. ஸ்ரீராமானுஜர் காலத்தில் ஓலைப்படுத்தப்பட்டது. இன்றும் கிடைக்கிறது ஆனால் புரிந்துகொள்ளக் கஷ்டமாக இருப்பதற்கு நாம் நல்ல தமிழை விட்டு ஒடிடி தமிழுக்கு வந்துவிட்டோம். சில விளக்கங்களைக் கொடுக்கிறேன். (௧) "குத்து விளக்கு எரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்" இங்கே கோட்டுக்கால் என்றால் யானைத் தந்தம். இதில் சந்தேகம் வேண்டாம். ஓடு + வீடு = ஓட்டு வீடு அது போல் கோடு + கால் = கோட்டுக்கால். ஒரு சொல்லுக்குப் பல அர்த்தம் தமிழில் இருக்கிறது. ’காண்டக்ஸ்ட்’ வுடன் பொருத்திப் பொருள் கொள்ள வேண்டும். எப்படி என்று புரிந்துகொள்ளத் பூதத்தாழ்வாரின் இந்த பாசுரத்தைப் பாருங்கள் அரியது

கோதை கீதை - 2

கோதை கீதை - 2 திருப்பாவை - 2 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு* செய்யும் கிரிசைகள் கேளீரோ!* பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி,* நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி** மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்* செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்* ஐயமும் பிச்சையும் ஆம் தனையும் கை காட்டி* உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய் கீதையில் 4.15 ஸ்லோகம் இது ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி: குரு கர்மைவ தஸ்மாத் த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம் || கீதையின் இந்த ஸ்லோகத்தின் பொருள் : முற்காலத்தில் மோக்ஷத்தில் நாட்டம் உடையவர்களும் கர்மயோகத்தின் தத்துவம் அறிந்து கர்மம் செய்திருக்கிறார்கள். ஆகவே நீயும் முன்னோர்களால் தொன்றுதொட்டு செய்யப்பட்டு வருகின்ற கர்மங்களையே செய்வாயாக. அதாவது அர்ஜுனனிடம் கண்ணன் “நீயோ முமுக்ஷு, ஆகையால் எவ்வாறு பிற முமுக்ஷுக்கள் உலக நன்மைக்காகக் கர்மம் செய்தார்களோ அவ்வாறே நீயும் உலக நன்மைக்காகக் கர்மத்தைச் செய்வாயாக” என்று சொல்லுகிறார். (முமுக்ஷுக்கள் = மோக்ஷத்தில் நாட்டம் கொண்டவர்கள் ) வேதத்தின் நமக்கு விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை