Skip to main content

Posts

Showing posts from September, 2013

கதிர்மதியம் போல் முகத்தான்

And how can man die better than facing fearful odds, for the ashes of his fathers, and the temples of his Gods? - Thomas B. Macaulay மதுரை தேனி மார்க்கம் உசிலம்பட்டிக்கு முன் தெற்கே அறுபது கிமீ தூரத்தில் ஸ்ரீரங்கபுரம் இருக்கிறது. ஸ்ரீரங்கபுரம் ஊர் இல்லை, மலை அடிவாரக் கோயில். கோயிலுக்கு பின்னணியில் சூல வடிவத்தில் மலை இருப்பதால் சூலகிரி என்ற பெயரும், “கோயிலுக்கு பின்னாடி நாமம் தெரிகிறது பாருங்க!” என்ற இன்னொரு கண்டுபிடிப்புடன் ஸ்ரீரங்கபுரம் என்ற பெயர் நிலைத்துவிட்டது. மூலவர் ‘கதிர்மதியப் பெருமாள்’. “ஆண்டாள் ‘கதிர்மதியம் போல் முகத்தான்’ என்று பாடிய பெருமாள்” என்பார் அர்ச்சகர் ரங்கசாமி. கிருஷ்ணதேவராயர் ஒரு முறை இந்தக் கோயிலுக்கு வந்த போது நிறைய காணிக்கை தந்தார் என்பதால் பெருமாள் பெயருக்குக் கடைசியில் ‘ராயன்’ தொற்றிக்கொண்டு உற்சவர் ‘ஸ்ரீரங்கராயன்’ ஆகிவிட்டான். ஸ்ரீதேவி, பூதேவி என்று மலையடிவாரத்தில் பெட்ரோல் புகை வாசனை எதுவும் இல்லாமல் நிம்மதியாக இருந்த ஸ்ரீரங்கராயன் இரண்டு வருடத்துக்கு முன் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் திருடு போனார்.

டிவி இல்லாத வீடு

எ ல்லோரும் எதிர்பாத்த ஆகஸ்ட் 15 இந்த வருடமும் வந்து போனது. வெள்ளிக்கிழமை கூடுதலாக விடுமுறை எடுத்தால் 'லாங் வீக்கெண்ட்'. ஊருக்குப் போகும் உத்தேசம் இல்லை என்றாலும் சும்மா புக் செய்து வைக்கலாம் என்று பலர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தார்கள். நான் படித்த பள்ளியில் கொடி ஏற்றுவார்கள். சட்டைப் பையில் குத்திக்கொள்ள சின்னதாக கதர் துணியில் ஓரம் அடித்த கொடியும், மிட்டாயும் தருவார்கள். தற்போது பள்ளிகூடத்தில் ஒரு நாள் முன்னமே கொடி ஏற்றி, பாட்டுப் பாடி, சாக்லேட் தந்துவிடுகிறார்கள். கொடிகள் எல்லாம் பள பள பேப்பர் (அ) பிளாஸ்டிக் ஆகிவிட்டது. சீசனுக்குத் தகுந்தாற் போல டிராஃபிக் சிக்னலில் சீனா பொம்மைகள் விற்கும் ஏழைகள் அதே அழுக்குடன் இந்த பள பள கொடிகளை விற்க ஆரம்பிக்கிறார்கள். ஆகஸ்ட் பதினைந்தும் ஒரு சீசன் ஆகிவிட்டது. எங்கள் அப்பார்ட்மெண்ட் மெயிலிங் குருப்பில் இந்தச் சுதந்திர தினத்திற்கு ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலின் ஒரு பகுதி கீழே... Dress in WHITE to spread PEACE and show your independence and get a chance to win food voucher from MIDNIGHT HUNGER SOLUTIONS. Note: It’s Happening on