Skip to main content

Posts

Showing posts from February, 2019

ஸ்ரீ உ.வே.சாமிநாதமுனிகள்

௧ சங்க இலக்கியம் காலம் பொ.மு. 500 முதல் பொ.யு. 200 முடிய இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். நாம் அந்த ஆராய்ச்சிக்குள் போகவேண்டாம். தமிழ் மற்றும் சங்க இலக்கியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரிந்துகொண்டால் போதுமானது. திருமங்கை ஆழ்வார் திருநெடுந்தாண்டகத்தில் “செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி” என்கிறார். செம்மை மொழியாக விளங்கும் தமிழின் ஓசையாகவும், வட மொழிச் சொற்களாகவும் எம்பெருமான் விளங்குகிறான் என்கிறார் ஆழ்வார். வட மொழியையும் தமிழையும் பல காலமாக ஒன்றாகவே சனாதன தர்மத்தில் கருதியிருக்கிறார்கள். இன்று உ.வே என்று ஸ்ரீவைஷ்ணவப் பெரியவர்கள் பெயர்களுக்கு முன் போட்டுக்கொள்வது உபய வேதங்கள் தமிழ் மற்றும் வடமொழியைக் குறிக்கும்.

தினசரி தேதி கிழிக்கும் காலண்டரால் என்ன பயன் ?

தினசரி தேதி கிழிக்கும் காலண்டரால் என்ன பயன் ? தமிழ் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் திரு உ.வே.சாமிநாதையர் பற்றி பள்ளியில் எங்கோ படித்த ஞாபகம். ஆனால் அவரைப் பற்றி விரிவாகத் தமிழ் பாட நூல்களில் எங்கும் கிடையாது. ( இப்போது இருக்கிறதா என்று தெரியாது).  சங்க நூல்களின் ஓலைச்சுவடிகளைத் தேடி தன் வாழ்கையைக் கழித்தார் என்று மட்டும் நம் எல்லோருக்கும் தெரியும். உ.வே.சா பற்றிப் பத்து வரிகள் எழுதுங்கள் என்றால் நிச்சயம் பலருக்கு அது ஒரு சவாலகவே இருக்கும். சில மாதங்கள் முன் எங்கோ ஒர் ஓலை சுவடியை அவர் தேடிய அனுபவம் பற்றி யாரோ சொல்ல, அந்தக் கட்டுரையைத் தேட ஆரம்பித்தேன். தேடும் போது உலகத் தமிழ் மாநாடு புத்தகம் ஒன்று கிடைத்தது. அதில் தமிழ்த் தலைவன், தமிழரைத் தலை நிமித்திய தலைவன் என்று வரிசையாகத் திராவிடத் தலைவர்களின் பெயர்களும் படங்களும் முகப்பில் இருந்தது ஆனால் உ.வே.சா படமோ அல்லது அவரைப் பற்றி ஸ்டாம்ப் சைசுக்கு கட்டுரையோ சாஸ்திரத்துக்குக் கூட அதில் இல்லை. காரணம் நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.  தேடுவதை தொடர்ந்த போது இணையத்தில் அவர் எழுத்துகள் பல கிடைத்தது. ஒரு விஷயம் பலரிடம் போகும் ப