Skip to main content

Posts

Showing posts from 2020

3. இராமானுசன் அடி பூமன்னவே - லோக சாரங்க முனி

3. இராமானுசன் அடி பூமன்னவே - லோக சாரங்க முனி 

நாதமுனிகளும் யாத்திரிகர்களும் பிரதட்சணமாகக் கோயில் வாசலுக்கு வந்த சமயம், பக்த சிரேஷ்டர்கள் இருவர் அங்கே இருந்தார்கள். இவர்கள் அஸ்வினி குமாரர்களோ என்று பாகவதர்கள் உற்றுப் பார்த்தபோது அவர்களின் முகஜாடையை நாதமுனிகளின் வம்சம் என்று காட்டிக்கொடுத்தது. இருவரும் வணங்கினார்கள். 
”இவர்கள் யாராக இருக்கும் ?” என்று கேட்க நினைத்து வார்த்தைகளாக வரும் முன்னர் நாதமுனிகள் “இவர்கள் இருவரும் என் மருமக்கள்  வரதாசாரியார், கிருஷ்ணமாசாரியார். எனக்குத் தெரிந்த வேதமும் இசையும் இவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன் என்றார் 
“ஆஹா! தாங்களிடம் உபதேசம் பெறுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும், இவர்கள் காளமும், வலம்புரியைப் போல முழங்குவார்கள்(1) என்பதில் எங்களுக்கு ஐயம் இல்லை!” என்றார் ஒரு பாகவதர். 
”உங்கள் வாக்கு அப்படியே பலிக்கட்டும்!” என்றார் நாதமுனிகள். 
அந்த வைணவர் எதை நினைத்துச் சொன்னாரோ நாம் அறியோம். ஆனால் இவர்களே பிற்காலத்தில் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் என்று ஆழ்வார்கள் அருளிச்செயல்களைத் தேவகானத்தில் இசைமைத்துப்  காளம், வலம்புரிகளாக முழங்கி நாதமுனிகளின் வழியில…

ஸ்ரீராமருக்கு சங்கத்தமிழ் மாலை - பாவைப்படி ஸ்ரீராமாயணம்

ராமயணம் பிரதான ஆறு காண்டங்களுடையது. அதில் ஐந்து முக்கிய சம்பவங்களைத் தொகுத்து ( 6 காண்டம் x 5 = 30 ) திருப்பாவை சொற்களைப் வைத்துப் பாவைப்படி ராமாயணம் என்று ஒன்றை எழுதினேன் (பெரியவாச்சான் என்ற மகான் பாசுரப்படி ராமாயணம் என்று அருளியிருக்கிறார் அவர் என்னை மன்னிப்பாராக ! )


பால காண்டம்
1. உத்தமன் யார் என்று நாரதரை வால்மீகி கேட்க முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று உதவ தேவாதி தேவன் சீர்மல்கும் அயோத்தியில் கதிர் மதியமாக பாரோர் புகழ அவதரித்தான். ( கதிரவன் குலத்தில் ; நிலவின் குணத்துடன் )
2. தசரதனிடம் ’யாம் வந்த காரியம் - தவத்தவரை காக்க ஆற்றப் படைத்த மகன் ராமனை கொடு என்று விஸ்வாமித்திரர் கேட்க, தசரதன் அவன் பூவைப்பூ வண்ணா என்று மறுக்க வசிஷ்டர் இளம்சிங்கம் ராமரை அனுப்புங்கள் என்று கூற, ராமனை அனுப்பிவைத்தான் தசரதன்.
3.பொற்றாமரை அடி கல்லில் பட அகலிகையின் மேல் சாபம் இழிந்தது.
4.திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் ராமன் அங்கண் இரண்டும் கொண்டு கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போன்ற சீதையை நோக்க செங்கண் சிறுச் சிறிலே ... செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலை நோக்கினாள்.
5.ஞாலத்தை எல்லாம் நடுங…

தினமும் கொஞ்சம் தேசிகன் - 7 ( ஸ்ரீராமர் ஸ்பெஷல் )

இன்று பாரத மக்களின் நீண்ட நாள் கனவுக்கு அடிக்கல் நாட்டு விழா, நாட்டு மக்களின் விழாவாக நடந்தது. ராமருக்கு இந்த நாடே பொங்கும் பரிவுடன் பல்லாண்டு பாடியது. 
விட்டுசித்தர் பெருமாளைப் பார்த்துக் ’கண்பட்டுவிட போகிறதே’ என்று பல்லாண்டு பாடினார். அதனால் அவர் ‘பெரியாழ்வார்’ என்று போற்றப்பட்டார். நம்மாழ்வார் கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ ? என்றார். ஆண்டாள் மனதுக்கு இனியான் என்றாள். பெரியாழ்வார் மாதிரி ’பல்லாண்டு பல்லாண்டு’ என்று பாசுரத்தில் வாழ்த்தியது மாதிரி தெரியவில்லை. ராமருக்கு பாசுரத்தில் பல்லாண்டு பாடியிருக்கிறார் ஸ்ரீ வேதாந்த தேசிகன். 

ஸ்வாமி தேசிகன் ரகுவீர கத்யம் என்று பிரபலமான பெயருடைய மஹாவீர வைபவத்தை இயற்றினார். இயற்றினார் என்று சொல்லுவது மிகத் தவறு, அருளினார் என்று தான் கூற வேண்டும். ஏன் என்று கூறுகிறேன். 
திருவயிந்திரபுரத்தில் ஸ்வாமி தேசிகன் சீதா பிராட்டி, இளைய பெருமாள், திருவடியுடன் ( அனுமார் ), மிக அழகாகசேவை சாதிக்கும் ஸ்ரீராமர் திருமேனி கண்டு அதில் ஈடுபட்டு ‘என்ன அழகு என்ன அழகு’ என்று அவர் மனதில் ஆனந்தம் கொப்பளித்த எண்ணங்களுக்கு வடிகாலாக ‘மாஹாவீர வைபவத்தைப்' பல்லாண்டு …

பராசரன் என்ற இராமப்பிரியன்

பதினோராம் நூற்றாண்டு. ஸ்ரீ ராமானுஜர் தன் குருவான ஆளவந்தாரைப் பார்க்கக் காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு ஓடோடி வருகிறார். வருவதற்குள் ஆளவந்தார் பரமபதித்துவிட,  வட திரு காவிரியில் ஆளவந்தாரின் சரமதிருமேனியை கண்ணீருடன் நோக்கும்போது,  அதில் மூன்று விரல்கள் மட்டும் மடங்கியிருப்பதைக் கவனிக்கிறர். 
அவர் உள்ளத்தில் நிறைவேறாத ஆசை இருந்திருக்கிறது என்று ஒவ்வொரு ஆசையாக நிறைவேற்றுவேன் என்று பிரதிக்கினை செய்கிறார். ஆளவந்தாரின் விரல்கள் ஒவ்வொன்றாக விரிகிறது.. 

அதில் ஒரு ஆசை : “விஷ்ணுபுராணம் அருளிய பராசர மகரிஷியின் பெயரையும், மஹாபாரதத்தை அருளிய அவரது குமாரரான வேத வியாசர் பெயர்களைத் தகுதியுள்ளோருக்குச் சூட்ட வேண்டும்” என்பது. 

ஸ்ரீ ராமானுஜர் அவருடைய சிஷ்யரான கூரத்தாழ்வானுடைய புதல்வர்களுக்கு இந்தப் பெயர்களைச் சூட்டினார். ஒருவர் ஸ்ரீ பராசரபட்டர் , இன்னொருவர் ஸ்ரீவேதவியாஸ பட்டர். 

ஸ்ரீரங்கத்தில் பிறந்த ஸ்ரீ பராசர பட்டர் புலமை மிகுந்தவராகவும், ஸ்ரீராமர் மீது அளவு கடந்த பிரேமையும் வைத்திருந்தார். இவருடைய சிஷ்யர்கள் கண்ணனின் குணங்களைச் சொல்லி ஸ்ரீராமர் இப்படிச் செய்தாரா ? என்று கேள்வி கேட்டால், அதற்குத் தகுந்த…

தினமும் கொஞ்சம் தேசிகன் - 6

நகை கடையில் தங்க, வைர நகைகள் ஜொலிப்பதை பார்த்திருப்பீர்கள். தங்கமும், ரத்தினங்களும் இயற்கையாகவே ஜொலிக்கும் தன்மை அதனுள் இருந்தாலும் விளக்கு இருந்தால் தான் மின்னுவது நம் கண்களுக்குத் தெரியும். 
ஸ்தோதிரங்களுக்குள் ரத்தினமாக ’ஸ்தோத்திர ரத்தினம்’ என்ற ஒன்றை ஆளவந்தார் அருளியுள்ளார். 
பல வண்ண ரத்தினங்கள் பதித்த மோதிரம் மாதிரி பல ஸ்லோகங்கள் இதில் இருக்கிறது. எல்லா ரத்தினங்களைக் காட்டிலும் வைரத்துக்குப் பிரகாசம் அதிகம். அப்படிப்பட்ட இரண்டு வைரங்களை ’அஞ்சலி வைபவம்’ என்ற விளக்கு போட்டுப் பிரகாசிக்கச் செய்தவர் நம் ஸ்வாமி வேதாந்த தேசிகன். 
அஞ்சலி  -  அகராதிகளைத் தேடிச் செல்லாமல் புரிந்துகொள்ளும் ஓர் எளிமையான வார்த்தை. அதைச் செய்வது மிக எளிமை
சிறுவயதில் நம் பெற்றோர்கள், கோயிலுக்குச் செல்லும்போது ‘கைகூப்பிக்கோ’ என்று சொல்லித் தந்துள்ளார்கள். இன்றும் விஸ்வரூபத் தரிசனக் கதவு திறக்கும்போது அல்லது பெருமாளை வீதியில் பார்த்தாலோ உடனே கைகளைக் கூப்புகிறோம். கைகூப்புவது சுலபம்
வயசான பிறகு கைகூப்புவது பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறோம். இதில் கொஞ்சம் உளவியல்(psychology) அடங்கியிருக்கிறது. ’இவரை எல்லாம் கைகூப்ப வேண்ட…

2. இராமானுசன் அடி பூமன்னவே - விதை நெல் !

2. இராமானுசன் அடி பூமன்னவே - விதை நெல் ! 

சில சமயம் ஒரு சாதாரண நிகழ்வு, பெரிய சம்பவங்களை விளைவிக்கிறது. நிகழும்போது அதன் விளைவுகளை நாம் அறிய முடியாது. 
’வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே’ என்பதற்கு ஏற்ப ஆழ்வார்கள் எல்லோரும் வைகுந்தத்தை அடைந்தார். அதற்குப் பின் சுமார் 3500 ஆண்டுகள் கழித்து ஒரு நிகழ்வு வீரநாராயண பெருமாள் முன் நிகழ உள்ளது, அதை நிகழ்த்துபவரும் அவரே என்று சொல்லவும் வேண்டுமோ ? 
ஆழ்வார்களின் பக்தி நெறியில் ‘தழுவ பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே’ என்று அவர்களைப் பின்பற்றிப் பக்தி நெரியில் வாழ்ந்தவர்கள் பாடி ஆடி வைகுந்தம் அடைந்தார்கள். 
கால போக்கில் ஒரு மரத்தின் கிளை ஒவ்வொன்றாகப் பட்டுவிடுவது போல ஆழ்வார் பாசுரங்கள் மறைய தொடங்கின. ஒரு காலத்தில் வேதத்தைப் பறி கொடுத்தது போல ஆழ்வார்களின் பிரபந்தங்கள் பறிபோயின. 
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம்
என்று கண்ணன் கீதையில் எப்பொழுதெல்லாம் தர்மம் தேய்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்த உலகத்து மக்களுக்காக அதை மீட்டுக்கொடுக்க அவதாரமாக வருகிறேன் என்கிறான். இந்த வாக்கியம் சத்தியம். 
அத்தகைய சத்தியத்தை தான்  கோ…