Skip to main content

Posts

Showing posts with the label அருளிச்செயல்

வெள்ளகோவில் வரதராஜர் முன் விழுந்த தேங்காய்!

 வெள்ளகோவில் வரதராஜர் முன் விழுந்த தேங்காய்! சென்ற வருடம் ஆகஸ்ட் மாதக் கடைசியில் திரு ஆறுமுகம் என்பவர் பதம் பிரபந்தப் புத்தகம் ஒன்று வேண்டும் என்று மெசேஜ் அனுப்பியிருந்தார். விவரங்களை அனுப்பினேன். புத்தகம் ஒன்றை வாங்கிக்கொண்டு அடியேனிடம் தொலைப்பேசினார். அவர் திருப்பூரில் வெள்ளகோவில் என்ற இடத்தில் மருத்துவர்; வயது எழுபத்து ஐந்து, அவர் கூறிய விஷயத்துக்கு முன் திருக்கண்ணமங்கை ஆண்டான் குறித்து ஒரு விஷயத்தைப் பார்த்துவிடலாம். திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற ஆசாரியர், தன்னை ரக்ஷித்துக் கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் அவர் எம்பெருமானுக்குக் கைங்கர்யங்களை விடாமல் செய்து வந்தார். நம்மாழ்வார் திருவாய்மொழி ( 9.2.1 ) ”கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே” என்கிறார். ”ஒருவன் கோயிலைச் சுத்தம் செய்தால் அவனுடைய பாவங்கள் கழிந்துவிடும்” என்பது தான் அது. நம்மாழ்வார் பாவம் தொலையக் கைங்கரியம் செய் என்கிறாரே என்று நமக்குச் சந்தேகம் வரும். நம்பிள்ளை ஈடு வ்யாக்யானத்தில் இந்த பாசுரத்துக்கு திருக்கண்ணமங்கை ஆண்டான் பற்றி ஒரு சுவையான குறிப்பைத் தருகிறார். ஒரு மகிழ மரத்தடியில் காய்ந்த சருகுகளைப் ...

இராமானுசனுடையார் - ஸ்ரீ ஸ்ரீராமபாரதி ஸ்வாமிகள்

இன்று எதையோ தேடும்போது ஸ்ரீராமபாரதி ஸ்வாமி பற்றிய வீடியோ இரண்டு கிடைத்தது. ( அதை கடைசியில் கொடுத்திருக்கிறேன்).  அடியேன் அவரைப் பற்றி சில விஷயங்கள் முன்பு எழுதியிந்தேன் அதை தொகுத்து இந்த பதிவில் தந்திருக்கிறேன்.  ஸ்ரீராமபாரதியின் ’தேவகானம்’ என்னும் ஒலி நாடா தொகுப்பு என் திருதகப்பனாரின் சஷ்டியப்தபூர்த்திக்கு பரிசாகக் கிடைத்தது. அப்போது திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி அடியேனுக்கு ஒன்றும் தெரியாது. அந்த ஒலிநாடாக்களை வீட்டில் ஓட விட்ட போது ஆசாரியர்களின் தனியன்களும், ஆழ்வார் பாசுரங்களையும் முதல் முதலாக ராகத்துடன் கேட்டு அனுபவித்தேன். அது ஓர் ஆத்தும அனுபவம் விவரிக்க இயலாது. பிறகு அந்த ஒலி நாடா கொடுத்தவரை தேடி திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டென். நாதமுனிகள், ஆழ்வார்களின் பாசுரங்களை நுட்பமான தத்துவங்களை ஜனங்கள் கண்ணாரக் கண்டு தெளிவடையும் பொருட்டு பெருமாளுடைய புறப்பாடுகளில் அவைகளைப் பல விதங்களில் ஏற்பாடு செய்ய நினைத்தார். நாதமுனிகள் காலத்தின் ஏற்பாட்டின்படியே உத்ஸவங்கள் நடந்து ஸ்ரீராமானுஜர் காலத்தில் திராவிட வேதம் என்று அழைக்கப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் எல்லா திவ்ய த...

மீசை

ஓர் நவராத்திரி தினம். லேலையூர் அஹோபில மடத்தில் இருந்தேன். இரவு கிட்டதட்ட 9.45 இருக்கும். அடியேனுடைய ஆசாரியன் (46வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ) அனைவருக்கு நல்லாசி அருளி, அட்சதை, பிரசாதம் தந்துவிட்டு சயனத்துக்குச் சென்றுவிட்டார். ’மயிரே போச்சு’ என்பது சொல் கெட்ட வார்த்தையாகி அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. திருமணம் முடிந்து ஐந்தாம் வருடத்தில், மீசையில் ஒரு வெள்ளை மயிர் எட்டிப்பார்த்தது. அதை வெட்டிவிட்ட பிறகு பல எட்டிப்பார்க்க மூக்கு அடியில் கிட்டதட்ட டால்மேஷன் குட்டிகளாக இருக்க டை, டிரிம் என்று பல முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். “அத்திம்ஸ்” என்று மனைவியின் கசின்ஸ் “அத்திம்பேர்” என்று ’பேர்’ சொல்லிக் கூப்பிடும் போது மீசை மட்டும் இல்லை, காது பக்கமும் டால்மேஷன் குட்டி போட தொண்டங்கியிருந்தது என்று புரிந்துக்கொண்டேன். ”அடடா சேவிக்க முடியாமல் போய்விட்டதே… “ என்று அங்கே இருந்தவர்களிடம் கேட்டேன். “ஆசாரியன் சயனத்துக்கு ( தூங்க ) சென்றிருப்பாரே.... இருங்கள்..” என்று உள்ளே சென்றார். கொஞ்சம் நேரம் கழித்து வெளியே வந்து “சீக்கிரம் வாங்கோ.. “ என்று அழைத்துச் சென்றார...