Skip to main content

Posts

Showing posts from January, 2018

இரண்டு திருநட்சத்திரங்கள், இரண்டு பெண்கள் - ஓர் நெறி

இரண்டு திருநட்சத்திரங்கள், இரண்டு பெண்கள் - ஓர் நெறி டிசம்பர் 1 திருநெல்வேலியிலிருந்து சீர்காழிக்கு புறப்பட்டேன். மறுநாள் கார்த்திகையில் கார்த்திகை நாள் ! டிசம்பர் 2 அதிகாலை இரண்டரை மணிக்கு சீர்காழியில் இறங்கிய போது ஸ்டேஷனில் யாரும் இல்லை. எங்கும் பலத்த மழை. நாய் ஒன்று அதன் பக்கத்தில் போர்த்திக்கொண்டு இன்னொருவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். கொஞ்சம் நேரம் கழித்து ஒருவர் அங்கே வர அவரிடம் திருநகரிக்கு போக வேண்டும் எங்காவது ஆட்டோ இருந்தா அனுப்புங்க என்றேன். பத்து நிமிஷத்தில் முதியவர் பாதி நனைந்திருந்தர் “நீங்க தான் ஆட்டோ கேட்டதா ?” என்றார் “ஆமாம்… திருநகரிக்கு போகவேண்டும்” மழை மேலும் அடித்தது. அட்டோவை முழுவதும் மூடி இருட்டாக்கினார். உள்ளே பீடி வாசனை அடித்தது. வயல், இருட்டு, மழை ஆட்டோ வெளிச்சத்தில் என்னைப் பத்திரமாக திருநகரிக்கு அழைத்துச் சென்றார். “என் நம்பர் எழுதிக்கோங்க இரவு ஆட்டோ யாரும் வரமாட்டாங்க, என்னை கூப்பிடுங்க நானே வரேன்” என்றார். காலை 3.30 மணிக்கு அட்டோ சத்தம் கேட்டு ஸ்ரீ எம்பார் ராமானுஜம் அவர்கள் கதவை திறந்து ”வாங்கோ வாங்கோ..!” என்று அழைத்தது “வீறுடைய கார்த்

கைசிக புராணத்தின் கதை

கைசிக புராணத்தின் கதை ( படம் : திருப்பாணாழ்வார் சரித்திரம் – ஸ்ரீரங்கம் மியூரல் ஒவியம் )  திருநெல்வேலிக்கு சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருக்குறுங்குடி என்னும் ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசம். பெருமாள் அழகிய நம்பி. ஊரும் பெருமாளும் அழகு. பசுக்கள் நிறைந்த பொய்கை கரையோரத்தில்... நெடிய பனைமரங்களிலிருந்து விழும் பனம் பழங்களை பொய்கையில் இருக்கும் வாளை மீன்கள் உண்ணுவதற்குத் துள்ளிப்பாய்கின்றன என்கிறார்  திருமழிசை ஆழ்வார்   நான் போன சமயம் திருநெல்வேலில் மழை+புயல். நெற்பயிரை முழுகடித்துக்கொண்டும், வாழை மரங்கள் எங்களை சேவித்துக்கொண்டு இருக்க, வெளியே சென்று எங்காவது மாட்டிக்கொண்டால் ’கைசிக நாடகத்தை தவற விட்டிவிட்டு விஜய சொக்கநாதர் போல ஒருவருடம் எல்லாம் என்னால் காத்துக்கொண்டு இருக்க முடியாது அதனால் கோயிலிலேயே நாள் முழுவதும் காத்துக்கொண்டு இருந்தேன். விஜய சொக்கநாதர் கைசிக ஏகாதசி சேவையை தரிசிப்பதற்குத் தனது குடும்பத்துடன் திருவரங்கம் வந்தார். ஆனால் அவர் வருவதற்குள் பெருமாள் சந்தன மண்டபத்துக்குப் புறப்பட்டுவிட்டார். மனம் வருந்திய மன்னர், ஸ்ரீரங்கத்திலேயே ஒருவருடம் தங்கி

திருப்பாவை - 24 ( என்று என்று )

திருப்பாவை - 24 ( என்று என்று ) அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி! சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி! பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி! கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி! குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி! வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி! என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய். ”என்று என்று” என்ற வார்த்தையை என்ன என்று சொல்லுவது. “அன்று, சென்று, குன்று, வென்று, என்று, இன்று” என்ற எதுகைக்காக ஆண்டாள் உபயோகித்திருக்கிறாள் என்று நினைப்போம். அப்படி இல்லை. ஆண்டாள் ”தமிழை ஆண்டாள்” என்று சொல்லலாம். Word power என்பதை தமிழில் சொல்வளம் என்று கூறலாம். சொல்வளம் எதில் இருக்கிறது என்றால் நாடோடித்தனான எளிமையான பாடல்களில் அதில் வாசனை இருக்க வேண்டும். ஆண்டாள் தமிழில் வாசனை இருக்கிறது. பாடல்களில் வாசனையா ? பகுத்தறிவாக இல்லையே என்று யோசிக்கலாம். இந்த கட்டுரையில் பல வாசனைகளை அனுபவிக்க உங்களை அழைக்கிறேன். முதலில் ‘வங்கிபுரத்து நம்பி’ பற்றிச் சொல்கிறேன். ’வங்கிபுரத்து நம்பி’ என்ற ஆசாரியரைப்