Skip to main content

Posts

Showing posts from December, 2011

போராட்டமே வாழ்க்கை

எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் சிகப்பு நிற கிளோட்டன் செடியின் நுனிக்குருத்தை சில வாரங்களுக்கு முன் குரங்கு ஒன்று வந்து பிய்த்துப் போட்டது. இத்தனைக்கும் எங்கள் வீடு 15-ஆவது மாடியில் இருக்கிறது. செடியில் குருத்து என்பது மிக முக்கியமானது. சில செடிகளுக்கு நுனிக்குருத்து மிக முக்கியம். தேங்காய், பனை போன்றவற்றில் நுனிக்குருத்தை வெட்டிவிட்டால் செடி வளராது. முளைக்கருவிலிருந்து (embryo) புறப்படும் இந்த நுனிக்குருத்து செடிக்கு மிக இன்றியமையாதது. ஆங்லத்தில் Terminal Bud என்பார்கள். செடி எப்படி வளரவேண்டும் எங்கே இலைவிட வேண்டும் என்ற எல்லாமே அங்கேதான் இருக்கிறது. 100 வருடம் வாழ்ந்துகொண்டு இருக்கும் மரத்தையும், மண்ணிலிருந்து உலகத்தை எட்டிபார்க்கும் சின்ன செடியையும் பெரிதாக வளரவைப்பது இந்த நுனிக்குருத்துதான். செடிகளில் குறிப்பிட்ட அளவில் கணுக்களைக் காணலாம் (axil). செடிகளில் தோன்றும் கணு, செடி வளர்வதற்கு ஏற்ற சக்தியை அங்கே சேகரித்து வைக்கிறது என்று நினைக்கிறேன். வேர்களிலிருந்து வளரும் கீழ்நோக்கி நீளும் கிளைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் முளைக்கும். ஆனால் செடிகளில் மேல்வளரும் கிளைகள் இந்தக் கண

வீடு வாங்கிய கதை

கடைசிக்காலம் வரை என் அப்பா வாடகை வீட்டில் இருந்தாலோ என்னவோ எனக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை. திருமணம் ஆன பிறகு “மாப்பிள்ளை, எப்போது குழந்தை?” என்ற கேள்விக்கு விடைகிடைத்தபின்பு வீட்டுக்கு வருபவர்கள் “எப்போது சொந்த வீடு?” கேள்விக்கு மாறிவிட்டார்கள். “வேளச்சேரில என் ஃப்ரெண்டோட ஃபிளாட் ஒண்ணு ஒருக்கு, மழை வந்தால் அந்த வீட்டைச் சுத்தி மட்டும் தண்ணி வராது”

மல்லையா மருத்துவமனையின் முரண்

ஷூ ஃபிளவர் என்ற செம்பருத்தியை ஷூவில் தேய்த்தால் பளபளவென்று ஆகும் என்று சின்ன வயதில் நம்பி தேய்த்திருக்கிறேன். அதில் உள்ள ஈரத்துக்கு கொஞ்சம் நேரம் ஷூ பளபளக்கும். மாமியார் வீட்டில், முடிகொட்டாமல் இருக்க இந்தப் பூவை வெய்யிலில் காய வைத்து சீயக்காயுடன் அரைக்க உபயோகப்படுத்துவார்கள். ஒரு சமயம் இந்தப் பூவைச் சாப்பிட்டு பார்த்திருக்கிறேன்; கொழகொழவென்று இருக்கும். ஆர்கானிக் டீ செய்கிறார்கள். சாமிக்குப் போடுகிறார்கள். தலையில் மட்டும் யாரும் வைத்துக்கொள்ளுவதில்லை!. செம்பருத்தி, சிவப்பு நிறத்தில் பார்த்திருக்கிறோம், பெங்களூரில் பல வண்ணங்களில் பூக்கிறது- ஆரஞ்ச், பிங்க், வெள்ளை, மஞ்சள்... ஒரே வண்ணமாகவும், இரண்டு வண்ணமாகக் கலந்தும்கூட இருக்கும். எந்த வண்ணமாக இருந்தாலும் எண்ணி 5 இதழ்கள்தான் இருக்கும். (படத்தில் இருப்பது எங்கள் வீட்டு பால்கனி செம்பருத்தி!, பெங்களூருக்கு ஏற்றார் பொல மஞ்சள், சிகப்பு !)

பனியன் அண்டர்வேருடன்...

 முதலில் கொஞ்சம் பழைய மேட்டர்...  1995ல் விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த மின்னஞ்சல்களை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த மின்னஞ்சல்கள் தான் அதிகம்.  பின்னர் பிளாகர் வந்த புதிதில் அதற்கு மாறினேன். வலைப்பதிவுக்கு கலர் அடிப்பது, லேயவுட்டை மாற்றுவதை கொஞ்சம் நாள் செய்துக்கொண்டு இருந்தேன். புது மனைவிக்கு அழகு பார்ப்பது அலுத்து போன பிறகு கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன். தமிழ்மணம் வந்த சமயம், அப்போது பிரபு ராமநாதன் எனக்கு அறிமுகமானார். அவர் என் பெயரில் ஒரு domain தருவதாகவும், அதில் என் வீட்டுப்பக்கத்தை கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார். அவரிடம் தொடர்ந்து கண்ணாம்மூச்சி விளையாடினாலும் என்னை அவர் விடுவதாக இல்லை. ஐந்து வருடம் என்னை துரத்தித் துரத்தி என் பேரில் domain வாங்கி தந்தார். காசியின் உதவிக்கொண்டு Blogcms நிறுவினேன். அடுத்த புது மனைவிக்கு அழகு பார்த்த பின்னர், டிவி ரிமோட்டில் அடுத