Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரை

செயற்கை நுண்ணறிவும் புத்தக வாசிப்பும்

செயற்கை நுண்ணறிவும் புத்தக வாசிப்பும் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு வாசிப்பை அழிக்குமா? வளர்க்குமா? என்ற பட்டிமன்றத் தலைப்பு உரையாடலைப் பார்க்க நேர்ந்தது. 'வாசிப்பு’ என்ற வார்த்தையை முதலில் பார்த்துவிடலாம். வாசிப்பது, படிப்பது என்று இரண்டு வகையானது.  ரயிலில் பாக்கெட் நாவலை வாசித்தேன் என்பதற்கும் ‘பகவத்கீதையை’ படித்தேன் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒன்று casual reading இன்னொன்று serious reading. முதல் வகைப் பொழுதுபோக்கிற்காகப் படிப்பது. (இன்றைய பல தமிழ்ப் புத்தகங்கள் இந்த வகையைச் சார்ந்தது) அடுத்து ஆழ்ந்த வாசிப்பு வகையைச் சார்ந்தது. ’கம்பனும் ஆழ்வார்களும்’ (ம.பெ.சீனிவாசன்) போன்ற புத்தகங்கள் இதற்கு உதாரணம். இது போன்ற ஆ.வா புத்தகங்களைப் படிக்கும் போது, அவற்றிலிருந்து அதன் உட்பொருளை நம் அறிவாற்றல் மூலம் அறிவது மற்றுமல்லாது, அறிவைப் பெறுவதற்கான வழியும் கூட. இது மனிதனுக்கே மட்டும் உரித்தான செயல். செயற்கை நுண்ணறிவினால் இதைச் செய்ய முடியாது, அல்லது அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆழ்வார் பாடல்களுக்கு உரைகள் பல இருக்க, பலர் என்னிடம் கேட்கும் கேள்...

அயோத்தி ஸ்ரீராம் லல்லா தரிசனம் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அயோத்தி தரிசனம் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடியேனின் ஆசாரியரான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் இந்தக் குரோதி வருடத்தில் நல்லதே நடக்கும்; எல்லாவிதமான மனோரதங்கள் நிறைவேறும்… என்று அருளாசி வழங்கிய அதே வாரம் அயோத்தியா சென்று வந்தேன்.  வந்தவுடன், உற்றார் உறவினர்கள் எல்லோரும் அணிநகர் அயோத்தியில் குழந்தை ஸ்ரீராமர் சௌக்கியமா என்று கேட்கவில்லை,  ‘எப்படி சேவித்தீர்கள் ? திருப்பதி போலக் கூட்டமா ? தள்ளிவிடுகிறார்களா ?’  என்று வினவினார்கள்.  அதற்குக் காரணம் எல்லோருடைய மனோரதமும் அயோத்தி சென்று ஸ்ரீராம் லல்லாவை தரிசிக்க வேண்டும் என்பது தான். நம்  புண்ணிய பூமியான பாரதத் தேசத்தில் நம் வாழ்நாளில் அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் அவருக்கு ஒரு கோயில் என்பது 500 வருட இந்தியர்களின் மனோரதம். சென்ற சோபக்ருத் ஆண்டு தை மாதம் 8 ஆம் நாள் (ஜனவரி 22ஆம் ) அன்று ப்ராணப் பிரதிஷ்டை (ஸம்ப்ரோக்ஷணம்) இனிதே நடைபெற்றது.  ஆண்டாளின் ‘மனத்துக்கு இனியான்’ வீற்றிருக்கும் கோயில், பாரத மக்களின் மனங்களைப் பூட்டிய ’மனோ’ரதமாக  ப்ராணப் பிரதிஷ்டை அன்று காட்சி அளித்தது. அதன் பின் குழந்தை ஸ்ரீ...

கும்மாயம்

 கும்மாயம்   மனித மூளை விசித்திரமானது, அதற்கு விடை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றுக்கு விடை தெரியவில்லை என்றால் ஆழ்மனதில் அந்த விடைக்காகக் காத்துக்கொண்டிருக்கும். எதேர்ச்சையாக விடை கிடைக்கும்போது ஆனந்தப்பட்டு அடுத்த கேள்விக்கான விடையைத் தேடத் தொடங்கும்.    உ.வே.சா அவர்கள் மணிமேகலை என்ற நூலை ஆராய்ந்தபோது அதில் வரும் பல சொற்களுக்கு அவருக்குப் பொருள் கிடைக்கவில்லை. பல புத்தகங்களை ஆராய்ந்தும், பலரிடம் கேட்டும் தெரிந்துகொண்டார். அப்படி ஆராய்ச்சி செய்தபோது மணிமேகலையில் 27வது ‘சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை’யில்   “பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம், இயற்றி” (அடி, 175-6)   என்று ஒரு பகுதியில் ‘கும்மாயம்’ என்ற சொல்லின் பொருள் அவருக்குத் தெரியவில்லை. பலரைக் கேட்டுப்பார்த்தும் பயன் இல்லை.    காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும் என்பது போல, கோயிலும் கோயில் சார்ந்த இடம் கும்பகோணம் என்று சொல்லலாம். பல பிரசித்தி பெற்ற திருகோயில்கள் அங்கே இருக்கின்றன. உ.வே.சா கும்பகோணத்தில் இருந்த சமயம் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் சந்நிதி பட்டாசாரியர் உ.வே.ச...

ஓலைப் பத்திரக் கதைகள்

ஓலைப் பத்திரக் கதைகள் சமீபத்தில் திரு உ.வே.சாவின் கட்டுரை தொகுப்பு ஒன்றை படித்தேன். பெரும்பாலும் செவிவழிக் கட்டுரைகள், தனி மனித வாழ்வு சம்பவங்களின் தொகுப்பாக, 18-19ம் நூற்றாண்டு வாழ் தமிழ் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியை ஆவண படுத்துகிறது என்று சொல்லலாம்.   மருத பாண்டியர்கள் வீரத்துக்கு மட்டும் அல்லாமல், பக்தியும், புலவர்களையும், தம் மக்களையும் காப்பாற்றும் குணம் படைத்தவர்கள். அதில் மருத  பாண்டியரைப் பற்றிய ஒரு கர்ண பரம்பரையாக சொல்லப்பட்ட கதை ஒன்றை படித்தேன்.  முள்ளால் எழுதிய ஓலை ! மருத பாண்டியர் தம் இறுதிக் காலத்தில் தங்களைவிட வலியவரான சிலருடைய பகைமைக்கு இலக்கானார்.  பல தந்திரங்கள் செய்து பகைவர்களின் கைகளில் அகப்படமால் தப்பித்தார். ஒரு சமயம் திருக்கோட்டியூர் பெருமாள் கோயிலுக்கு எதிரிலுள்ள மண்டபமொன்றில் தங்கி இருந்தார்.  வலக்கையில் ஒரு கொப்புளம் உண்டாகி அவரை வருத்தியது. பகைவர்கள் ஊர் எல்லைக்குள் வந்துவிட்டார்கள் என்ற செய்தி ஒரு அந்தரங்க வேலையாள் வந்து சொன்ன போது வீரத்தால் அவருடைய இரத்தம் கொதித்தது. ஓர் ஆடையை உடனே கிழித்து அவர் கைக் கொப்புளத்தை இறுகக் கட்டிக்கொ...

ஓட்டையின் உள் ஓர் ஓட்டை

ஓட்டையின் உள் ஓர் ஓட்டை சமீபத்தில் ’சகுந்தலா தேவி’ என்கிற  திரைப்படத்தைப் பார்த்தபோது அதில் ஒரு காட்சியில் சகுந்தலா தேவி, 689 என்ற எண்ணைத் தலைகீழாகத் திருப்பினாலும் அதே எண்தான் வரும் என்பார். இதில் பெரிய அதிசயம் எதுவும் இல்லை. ஆனால் அவருடைய இரட்டை ஜடைப் பின்னலில் சின்ன ரிப்பன் கட்டியிருப்பார்.அந்த ரிப்பன் ஒரு சுவாரசியமான பொருள்.  ரிப்பனில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று நினைக்கலாம்.  ஒரு நீண்ட ரிப்பனை ஒரு திருகு திருகி அதன் முனையோடு இணைத்தால் அல்லது ஒட்ட வைத்தால் கணித இயலில் மிகச் சிக்கலான பொருளாகிறது.   இந்தக் கட்டுரையை மேற்கொண்டு படிப்பதற்குமுன் இந்தச்  சோதனையை நீங்கள் செய்துபார்க்கச் சிபாரிசு செய்கிறேன். கட்டுரை படித்துப் புரிந்துகொள்ள உதவும். இதற்குத் தேவையான பொருட்கள் – ரிப்பன் போன்ற ஒரு துண்டுக் காகிதம். செலோ டேப்,  ஒரு கத்தரிக்கோல். பேப்பர் துண்டை ஒரு திருகு திருகி ஒட்டவைத்து, அதன் முதுகுப் பகுதியின் குறுக்கே வெட்டிக்கொண்டே போனால் ? இரண்டு வளையம் கிடக்கும் என்று நீங்கள் நினைக்கும்போது, சட்டென்று ஒரு முழு வளையமாகிவிடும்.   இதற்கு Mö...

பராசரன் என்ற இராமப்பிரியன்

பதினோராம் நூற்றாண்டு. ஸ்ரீ ராமானுஜர் தன் குருவான ஆளவந்தாரைப் பார்க்கக் காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு ஓடோடி வருகிறார். வருவதற்குள் ஆளவந்தார் பரமபதித்துவிட,  வட திரு காவிரியில் ஆளவந்தாரின் சரமதிருமேனியை கண்ணீருடன் நோக்கும்போது,  அதில் மூன்று விரல்கள் மட்டும் மடங்கியிருப்பதைக் கவனிக்கிறர்.  அவர் உள்ளத்தில் நிறைவேறாத ஆசை இருந்திருக்கிறது என்று ஒவ்வொரு ஆசையாக நிறைவேற்றுவேன் என்று பிரதிக்கினை செய்கிறார். ஆளவந்தாரின் விரல்கள் ஒவ்வொன்றாக விரிகிறது..  அதில் ஒரு ஆசை : “விஷ்ணுபுராணம் அருளிய பராசர மகரிஷியின் பெயரையும், மஹாபாரதத்தை அருளிய அவரது குமாரரான வேத வியாசர் பெயர்களைத் தகுதியுள்ளோருக்குச் சூட்ட வேண்டும்” என்பது.  ஸ்ரீ ராமானுஜர் அவருடைய சிஷ்யரான கூரத்தாழ்வானுடைய புதல்வர்களுக்கு இந்தப் பெயர்களைச் சூட்டினார். ஒருவர் ஸ்ரீ பராசரபட்டர் , இன்னொருவர் ஸ்ரீவேதவியாஸ பட்டர்.  ஸ்ரீரங்கத்தில் பிறந்த ஸ்ரீ பராசர பட்டர் புலமை மிகுந்தவராகவும், ஸ்ரீராமர் மீது அளவு கடந்த பிரேமையும் வைத்திருந்தார். இவருடைய சிஷ்யர்கள் கண்ணனின் குணங்களைச் சொல்லி ஸ்ரீராமர் இப்படிச் செய்தாரா ? என்று ...

தினசரி தேதி கிழிக்கும் காலண்டரால் என்ன பயன் ?

தினசரி தேதி கிழிக்கும் காலண்டரால் என்ன பயன் ? தமிழ் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் திரு உ.வே.சாமிநாதையர் பற்றி பள்ளியில் எங்கோ படித்த ஞாபகம். ஆனால் அவரைப் பற்றி விரிவாகத் தமிழ் பாட நூல்களில் எங்கும் கிடையாது. ( இப்போது இருக்கிறதா என்று தெரியாது).  சங்க நூல்களின் ஓலைச்சுவடிகளைத் தேடி தன் வாழ்கையைக் கழித்தார் என்று மட்டும் நம் எல்லோருக்கும் தெரியும். உ.வே.சா பற்றிப் பத்து வரிகள் எழுதுங்கள் என்றால் நிச்சயம் பலருக்கு அது ஒரு சவாலகவே இருக்கும். சில மாதங்கள் முன் எங்கோ ஒர் ஓலை சுவடியை அவர் தேடிய அனுபவம் பற்றி யாரோ சொல்ல, அந்தக் கட்டுரையைத் தேட ஆரம்பித்தேன். தேடும் போது உலகத் தமிழ் மாநாடு புத்தகம் ஒன்று கிடைத்தது. அதில் தமிழ்த் தலைவன், தமிழரைத் தலை நிமித்திய தலைவன் என்று வரிசையாகத் திராவிடத் தலைவர்களின் பெயர்களும் படங்களும் முகப்பில் இருந்தது ஆனால் உ.வே.சா படமோ அல்லது அவரைப் பற்றி ஸ்டாம்ப் சைசுக்கு கட்டுரையோ சாஸ்திரத்துக்குக் கூட அதில் இல்லை. காரணம் நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.  தேடுவதை தொடர்ந்த போது இணையத்தில் அவர் எழுத்துகள் பல கிடைத்தது. ஒரு விஷயம் பலரிடம்...