Skip to main content

Posts

Showing posts from 2015

சந்திரஹாசம் - புத்தக விமர்சனம்

”சந்திரஹாசம் புத்தக வடிவில் ஒரு சினிமா!” என்று கடந்த இரண்டு மாதங்களாக ரஜினி, கமல், இளையராஜா ... என்று பல பிரபலங்கள் கையில் வைத்துக்கொண்டு விளம்பரப்படுத்தினார்கள். சினிமாகாரகள் அடாச தமிழ் படத்தையே இந்த மாதிரி படத்தை பார்த்தில்லை என்று சொல்பவர்கள்... ... ஆனால் காமிக் படிப்பவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று எல்லொரும் புகழ ... 1500 புத்தகம் வெறும் 1000 ரூபாய்க்கு ... ஒரு வித பிரஷர் - ஆடர் செய்து சில வாரங்களுக்கு முன் வந்து சேர்ந்தது.

பேக்கிங் அருமையாக. இந்த மழை வெள்ளத்திலும் ஓரம் நசுங்காமல் கற்புடன் வந்தது வியப்பை தந்தது. ஆர்வமாக பிரித்தேன். வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. சரசரவென்று பிரித்து படிக்க ஆரம்பித்தேன். முதலில் ஓவியங்கள் நன்றாக ...போக போக சுமாராக பிறகு ரொம்ப சுமாராக இருப்பதாக எனக்கு தோன்றியது.

ஒரே ஓவியம் சில இடங்களில் கட் & பேஸ்ட் எரிச்சலை தந்தது. கொடுத்த காசுக்கு தரமான ஒரு புத்தகத்தை எதிர்ப்பாப்பது தவறு இல்லையே. லாங் ஷாட் ஓவியங்கள் நிறைய. ஆனால் அது மட்டும் நிறைய இருந்தால் ஏதோ ஆல்பம் பார்க்கும் எண்ணமே வருகிறது. உற்று நோக்கினால் எல்லா ஓவியங்களிலும் ஏதோ ஒன்று ரிப்லிகேட் …

நகர்வலம்! - சிறுகதை சுஜாதா

( இந்த கதையை மீண்டும் இன்று ஒரு முறை படித்தேன் ).


அந்தப் படகு மிகப் பெரிதாக இருந்தது. எனினும், அதைக் கப்பல் என்று சொல்ல முடியவில்லை. கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த பிரயாணங்களுக்காக ஏற்பட்ட பெரிய படகு அது. அதன் மேல்தளத்தில் மிகவும் இயல்பான நிலையில் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் சூரிய வெளிச்சத்தில் படுத்துக்கொண்டும் ஒரு கனவுச் சதுரம் போலிருந்த சிறிய நீச்சல்குளத்தில்(வெந்நீர்) சோம்பேறித் தனமாக நீந்திக்கொண்டும் இருந்த சந்தோஷ மனிதர்களில் ஆத்மா நித்யாவுக்காகக் காத்திருந்தான். தன் கையில் இருந்த புத்தகத்தில் கவனம் இல்லாமல்... எதிரே நீந்திக்கொண்டு இருந்த நித்யாவின் அவ்வப்போது தெரிந்த உடல் வடிவ அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தான். படகு அத்தனை வேகத்தில் செல்வது தெரியவே இல்லை. அதன் வயிற் றில் இருந்த சிறிய அணு மின்சார நிலையத்தின் சக்தியில் அது கடல் பரப்பின்மேல் ஒரு காற்று மெத்தையில் மிதந்து சென்றது.

ஆத்மாவுக்கு அந்தப் பிரயாணம் அவன் வாழ்வின் ஆதர்சங்களில் ஒன்று... இன்னும் பதினைந்து நிமிடங்களில் படகு சென்னையை அடையப்போகிறது.

சென்னை!

அவன் முன்னோர்களின் ஊர்! அவன் தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத…

ரெய்னி டே’ சினாரியோ

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்சென்று சேர் திருவேங்கட மா மலைஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே( திருவாய்மொழி )
போன வாரம் அலுவலகத்துக்கு போன போது ஒருவரை ஒருவர் “உங்க ஏரியா எப்படி சார் ?” “எங்க ஏரியா பரவாயில்லை” “வீட்டை விட்டு வெளியிலேயே வர முடியல ஒரே தண்ணீ... ” ”மழையே இல்லாத மாதிரி எழுதியிருக்கீங்க ?” ”நீங்க சென்னை வந்தா மழை நின்றுவிடுகிறது” என்ற கமெண்ட் இன்று பொய்யானது. இன்று காலை 4.30மணிக்கு எழுந்து போது மழை. குடையுடன் வாக்கிங் போனேன். லேசான மழை தான். காபி ஒன்று குடித்துவிட்டு வெளியே வந்தால் ஏண்டா வெளியில் வந்தோம் என்றாகிவிட்டது. அழகிய லைலா பாடலில் ரம்பா பாவாடை மாதிரி என் சின்ன குடை பறந்து ஆட்டம் போட்டது. மழை ஒரு பொருட்டாகவே கருதாமல் சிலர் வேலை செய்துகொண்டு இருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. டிவிஎஸ் 50ல் பெரிய சூட்கேசில் நியூஸ் பேப்பர் வைத்துக்கொண்டு தான் சொட்ட சொட்ட நனைந்தாலும் பேப்பர் நனையாமல் பார்த்துக்கொள்ளும் அந்த சிறுவன். ஒரு குடையுடன் பெரிய அலுமினிய பாத்திரத்தில் பால் பாக்கெட்டை சுமந்துக்கொண்டு தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு போகிறார் ஒரு கிழவி. மழைக…

பரவச பொங்கல்

பரவச பொங்கல் அன்புள்ள சுஜாதா தேசிகன் அவர்களுக்கு, நலமா ? கல்கியில் சமீபத்தில் நீங்கள் எழுதிய கதையை படித்தேன். நன்றாக இருந்தது. உங்கள் ஃபேஸ்புக்கிலும் கமெண்ட் போட்டிருக்கிறேன். உங்களிடமிருந்து ஒர் உதவி தேவைப்படுகிறது.
’Orgasm’ என்று ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன ? ஆய்வுக்காக எனக்கு இந்த தமிழாக்கம் தேவைப்படுகிறது. ஒரு சொல்லாக இருந்தால் நன்றாக இருக்கும். . இணையத்தில் தேடினால் கெட்ட கெட்ட விஷயங்கள் தான் வருகிறது. கூகிளில் தேடிய போது பரவசநிலை, உச்சநிலை, பரவச பொங்கல் போன்ற சொல் பிரயோகங்கள் தான் வருகிறது. சிலர் கிளைமாக்ஸ் போன்ற ஆங்கில வார்த்தையையே உபயோகிக்கிறார்கள். திருப்திபடுதல் கிட்டே வருகிறது ஆனால் திருப்தியாக இல்லை. ”ஐ” படத்தில் வருவது போல ”அதுக்கும் மேலே” என்பது மாதிரியான ஒரு வார்த்தை வேண்டும். எனக்கு நீங்கள் உதவுவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. K....
k......b@gmail.com அன்புள்ள கே...
நலம்.
தேடி பார்த்தேன். கிடைக்கவில்லை.
இன்றைய என் அனுபவத்தை சொல்லுகிறேன். அதிலிருந்து அந்த வார்த்தைக்கு விடை கிடைக்கிறதா என்று பாருங்கள்.
சரியாக பதினோரு மணிக்கு அந்த இடத்துக்கு சென்றேன்.
உங்க பெயர்…

பித்துக்குளி முருகதாஸ்

இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. 1981-82 என்று நினைக்கிறேன். என் சித்தி பையனின் உபநயனத்துக்கு சென்றிருந்தேன். குமார போஜனத்துக்கு என்னை உட்கார வைத்தார்கள். என் மனம் முழுவதும் இலையில் இல்லாமல், சற்று நேரத்துக்கு முன் உபநயனத்துக்கு வந்திருந்த ஒருவர் கையடக்க டேப்ரிக்கார்டரின் மீது இருந்தது. அப்போது டேப்ரிகார்டர் புதுசாக வந்திருந்த சமயம்.
குமார போஜனம் போட்டோவிற்கு போஸ் கொடுத்த பின் ”பசி இல்லை” என்று எழுந்து அந்த டேப்ரிக்கார்டர் மாமாவை தேடி போனேன்.

“என்ன என்றார்?”

“டேப்ரிக்கார்டர்... “

“ஆமாம் டேப்ரிக்கார்டர்.. அதுக்கு என்ன?”

“இப்ப போட்டீங்களே அந்த பாட்டு யார் பாடியது?”

“எந்த பாட்டு ?” என்று தன் பையை பெருமையாக திறந்து தன் கலக்‌ஷனை காண்பித்தார் அதில் ஏகபட்ட கேஸ்சட்... இதில் எப்படி தேடுவது ?

“அலைபாயுதே கண்ணா...”

“ஓ அதுவா அது பித்துக்குளி முருகதாஸ்.. “ என்று கேஸ்சட் படத்தை காண்பித்தார்.
டேப்ரிக்கார்டரை பார்க்காமல் அந்த கேஸ்சட்டை பார்த்தால் அவருக்கு கொஞ்சம் ஏமாற்றம்... தாம்பூலப் பையை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்

”Lord Krishna - Pithukuli Murugadas"

பித்துகுளி என்ற பெயரை முதல் முறை அன்று …

ஆகவே... ஒரு கதை பிறக்கிறது!

இந்தக் கதை உங்களைக் கவருமா என்று தெரியாது. ஆனால் ஒரு உத்திரவாதம் தருகிறேன். பெயர்கள்கூட மாற்றாத, எந்தக் கலப்படமும் இல்லாத என் சொந்த அனுபவம்.
ஐ.டி கம்பெனியில் இருபது வருஷம் குப்பை கொட்டியபின் எல்லோருக்கும் வரும் அந்த அலுப்பு, எனக்கு வந்த சமயம் பிள்ளை பிடிக்கும் கும்பல் மாதிரி என்னை ஒரு கன்சல்டன்சி பிடித்து அமெரிக்க கம்பெனிக்கு வைஸ் ப்ரெசிடண்டாக செக்கின் செய்தது. அதற்கு நடத்தப்பட்ட இன்டர்வியூவில் அந்தக் கேள்வியை என்னால் மறக்க முடியாது.
“பல பெரிய டீமை உருவாக்கியுள்ளீர்கள்...மறக்க முடியாத அனுபவம்?” எனக்கு உடனே ராமகிருஷ்ணாதான் நினைவுக்கு வந்தான்.
“நெவர் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர் என்பதற்கு எடுத்துக்காட்டு ராமகிருஷ்ணா” என்று என் அனுபவத்தைச் சொல்ல ஆரம்பித்தேன்.
புதிதாக ஒரு டீமை சில வருடங்களுக்கு முன் தேர்வு செய்துகொண்டிருந்த சமயம் “ஐ வாஸ் அண்டர் லாட் ஆப் பிரஷர்”. ஒரு ‘வாக் இன் இன்டர்வியூ’க்கு வந்திருந்தான்.
தொள தொள பேன்ட், சட்டையில் ஆங்காங்கே உப்புப் பூத்திருந்தது. பழைய செருப்பு, கையில் லேடிஸ் குடை. தமிழ்நாட்டின் தலை சிறந்த பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த மாணவன். எ…

சில மதிப்புரைகள்

அப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு பற்றி முன்பு The Hindu, மற்றும் mathippurai.com’ல் வந்த மதிப்புரைகள்.
நன்றியுடன் இங்கே...


In the footsteps of Sujatha

Desikan Sujatha has played true to his name in this collection of short stories. An ardent fan of the famous writer, he became his friend and confidante in the later years. The maestro’s style has definitely had an impact on the author, whose treatment of the genre has a strong resemblance to his idol’s, the twist in the end including. Readers, accustomed to Sujatha’s bold ideas, will not be disappointed with this slim volume.

Appavin Radio – Desikan Sujatha – Pathu Paisa Pathippagam – A-1502, Brigade Metropolis, Garudarcharpalya, Mahadevapura, White Field Main Road, Bangaluru – 560048. Phone: +91-98458 66770 . நன்றி: The Hindu 

அப்பாவின் ரேடியோ
சுஜாதாவின் சிறுகதை என்றுமே ஒரு இனிய அனுபவமோ அல்லது அதிர்ச்சியோ கொடுக்கும். சுஜாதாவின் சிறுகதைகளில் சில எனக்கு வரிக்கு வரி மனப்பாடம். அதிலும் கடைசியில் அவர் கொடுக்கும் ஷாக் அல்லது திருப்பம் அலாதியா…

ரத்த நிலா உருவான கதை

உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் ஐந்து அன்று எல்லா நாளிதழிலும் விளம்பரம், கட்டுரை வந்து அடுத்த நாள் பாக்கெட் பால் வாங்கும் போது அதைப் பற்றி முழுவதும் மறந்துவிடுகிறோம்.

ஜூன் ஐந்து முதல் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவது இல்லை என்று முடிவு செய்து, முதலில் டப்பர் வேர் டிபன் பாக்ஸை மாற்றினேன். ஜீன்ஸ் போட்ட பெண் தலையில் பூ வைத்துக்கொண்டது போல என்னை பார்த்தார்கள்.

“உங்க டயட்டைல் துவும் சேர்ந்ததா ?”  போன்ற கேள்விகளை கடந்து
தினமும் பள்ளிக்கரனை வழியாக அலுவலகம் செல்லும் போது அந்த குப்பை மேடுகளில் தான் எவ்வளவு  பிளாஸ்டிக் !

ரங்கநாதன் தெருவில் இரவு 12 மணிக்கு சென்றால் அங்கே கிடக்கும் பிளாஸ்டிக் குப்பையை பார்க்க மலைப்பாக இருக்கும். ஃபேஸ்புக்கில் வரும் செல்ஃபி படங்களை உற்றுப்பார்த்தால் எங்காவது ஒரு பிளாஸ்டிக் இருக்கிறது.

நம் தாத்தா பாட்டிகள் பலர் 80 வயசுக்கு மேல் திடமாக வாழ்ந்ததற்கு, தற்போது அதிகமாக கேன்சர் வருவதற்கும் இந்த பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பிளாஸ்டிக் இல்லாமல் வாழ முடியுமா என்று ஒரு நாள் முயன்று பார்த்தேன். கஷ்டம் தான்.

இரண்டு நிமிஷம் பட்டியலிட்டேன்.

பால் பாக்கெட்
டூத் பிரஷ்
பேஸ்ட் டிய…

கல் சொல்லும் கதை

மேலே படத்தில் இருக்கும் கல்லை பற்றி தெரிந்துக்கொள்ளும் முன் அதற்கு பின்னால் 800 வருட சரித்திரம் இருக்கிறது.

உங்களை சுமார் 800 ஆண்டுகள் பின்னோக்கி ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து செல்ல போகிறேன்.

ஸ்ரீரங்கத்தில் ராமானுஜருக்கு பிறகு எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை ஆகியோர் ஸ்ரீராமானுஜரின் நியமனப்படி கோயில் நிர்வகித்து வந்தார்கள்.
நம்பிளையின் சிஷ்யர்களில் இரு கண்களாக போற்றப்படுபவர் இருவர் - வடக்குத் திருவீதிப்பிள்ளையும், பெரியவாச்சான் பிள்ளையும்.

வடக்கு திருவீதிப்பிள்ளைக்கும் அவர் மனைவி ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் கிபி 1205ல் ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் பிள்ளை லோகாசாரியார் அவதரித்தார்.

( நம்பிள்ளைக்கு லோகாசார்யர் ( ஜகத்குரு ) என்ற பெயரை கந்தாடைத் தோழப்பர் சூட்டினார் ( இந்த வைபவத்தை பிறகு ஒரு கட்டுரையில் எழுதுகிறேன் ). தன்னுடைய பிள்ளைக்கு தன் ஆசாரியன் பெயரை சூட்ட விரும்பி ’லோகாசார்யர்பிள்ளை’ என்று பெயர் சூட்டினார். அதுவே பிள்ளை லோகாசார்யன் )

இவரும் இவர் தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகிய இருவரும் ஸ்ரீவைஷ்ணவ தொண்டிற்கு குடும்ப வாழ்கை ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக திருமணம் செ…

ரத்த நிலா

உலகெங்கும் அந்த செய்தி பல மொழிகளில் பரவியிருந்தது. மின்சாரம் இல்லாத கிராமம், பிரதமர் செல்லாத நாடு என்று எங்கும் இதே பேச்சு. நடிகைகள் அடிக்கடி குந்தலை வருடுவது போல பலர் மொபைலை வருடி அந்த செய்தியை வாட்ஸ் ஆப் போன்றவற்றில் அனுப்பினார்கள். முகநூலில் திகட்ட திகட்ட மீம்ஸ் ஜோக் போட்டு உலகத்தில் ஜீவிப்பதை இளைஞர்கள் உறுதிசெய்தார்கள். டிவியில் விவாதித்தார்கள். புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடுக்கு முன் “வதந்திகளை நம்பாதீர்கள்” திரையரங்குகளில் முந்திக்கொண்டது. எதற்காக ஃப்ரொஃபைல் படம் மாற்றுகிறோம் என்று  யோசிக்காமல் எல்லோரும் மாற்றினர். ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற புண்ணிய ஸ்தலம் அல்லாமல் அப்பக்குடத்தான், அன்பிலிலும் கூட்டம் வழிந்தது. வேளாங்கனி, நாகூர் தர்கா என்று எதையும் விட்டு வைக்கவில்லை.

யார் முதலில் இந்த செய்தியை பரப்பினார்கள் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது....

ஸ்ரீரங்கத்து ராமானுஜதாசர்கள்

இன்று மாலை(செப்-23, 2015) முனைவர் ஸ்ரீ.உ.வே இரா.அரங்கராஜன் ஸ்வாமிகளை சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் அவருடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சாஸ்தரா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ திவ்ய பிரந்தம் திருவாய்மொழி பாடத்துக்கு இவர் தான் விரிவுரையாளர். ’நம்பிள்ளை உரைத்திரன்’ ஆய்விற்காக இவருக்கு காமராசர் பல்கலைக்கழகம் (1981) முனைவர் பட்டம் வழங்கியது. ஸ்ரீவைஷ்ணவ நூல்களை முறைப்படி பெரியோர்பால் பயின்றவர். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ.உ.வே.அண்ணங்கராசார்யார் ஸ்வாமியால் ”கலை இலங்கு மொழியாளர்” என்ற பாராட்டுப்பெற்றவர். பல ஸ்ரீவைஷ்ணவ நூல்களை பதிப்பித்துள்ளார். ஸ்ரீராமானுஜர் பற்றி பல விஷயங்கள் பேசினோம். தற்போது அவர் “ஸ்ரீரங்கத்து ராமானுஜதாசர்கள் ஒரு தொகுப்பு” என்று நமக்கு அதிகம் தெரியாத ஸ்ரீராமானுஜ தாசர்கள் பலருடைய வாழ்கை வரலாற்றை எழுதியுள்ளார். அதன் கையெழுத்து பிரதியை என்னிடம் ஆசையாக காண்பித்தார். முத்து முத்தாக கை எழுத்து. அச்சு அடிக்க வேண்டாம், அப்படியே நகலெடுத்தால் போதும் என்றேன். அழகான தமிழில் கிட்டதட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தாசர்களை பற்றி ஆய்வு செய்து, எழுதியுள்ளார். புத்தகம் இன்னும் நான்கு ஐந்து மாதங்…

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையுடன் ஒரு நாள்

காலை 6 மணிக்கு கும்பகோணம் வந்த போது சீமாட்டியுடன் சிட்டி யூனியன் வங்கியும் வரவேற்றது. பித்தளை பாய்லர் குளித்துவிட்டு விபூதி பட்டை அடித்துக்கொண்டு தூங்கி வழிந்துக்கொண்டு இருந்தவர்களுக்கு டீ கொடுத்துக்கொண்டிருந்தது.
மினி பஸ்ஸில் ஏறிய போது அதில் ’சகலமும் கிருஷ்ணார்ப்பணம்’ என்று உணர்ந்தேன்; பஞ்சு மிட்டாய் பாக்கெட், கீரைக்கட்டு, முருங்கை, பூ கூடை... தலைக்கு மேல் உள்ள கைபிடியில் லுங்கி, பனியன் உலர்ந்துக்கொண்டு. இதன் மத்தியில் எனக்கு உட்கார இடமும் கிடைத்தது பெரிய பாக்கியம்.

கும்பகோணத்திலிருந்து சேங்கனூர் சுமார் 15 கிமி தூரத்தில் இருக்கிறது. அந்த பேருந்தில் "ஊர தெரிஞ்சுக்கிட்டேன்" பாடலை காலை 6.30 மணிக்கு எதிர்பார்க்கவில்லை. பாடல் முடிந்தவுடன் டிரைவர் ஸ்டியரிங்கை விட்டுவிட்டு ரிமோட்டை தேடி திரும்பவும் அதே "ஊர தெரிஞ்கிட்டேன்" மறு ஒலிபரப்பு செய்தார், கொஞ்சம் அதிக சத்தத்துடன். இரண்டாவது முறை பாடல் முடிந்தவுடன் சேங்கனூர் வந்துவிட்டது. இரண்டு காத தூரம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இரண்டு காது வலிக்கும் தூரம்.

மெயின் ரோடிலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது இந்த சின்ன கிராமம…

காக்கா

“ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவாரோ” - திருமங்கை ஆழ்வார்

சில மாதங்களுக்கு முன் தி.நகரிலிரிந்து தாம்பரம் சானிடோரியத்துக்கு குடிபெயர்ந்தேன்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் அதிகம் இருக்கும் இடம் அதனால் சரவணபவன் கூட கிடையாது என்பது முதல் ஆச்சரியம். பழம்பெரும் தமிழ் எழுத்தாளர்களைவிட கொசு அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் ரிஸ்க் எடுக்காமல் முதல் வேலையாக நெட்லானை வெல்கரோ கொண்டு கதவை விட்டுவிட்டு ஜன்னல் பொன்ற சின்ன ஓட்டைகளை அடைக்க ஏற்பாடு செய்தேன்.

பக்கத்துவிட்டு முருங்கை மர குப்பை உள்ளே வராமலும், நான் தாளித்தால் கடுகு கூட ஜன்னல் வழியாக வெளியே போகாதபடி மிகவும் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். மன்னிக்கவும் வாழ்ந்தேன்.

பெங்களூரில் ஒரு வாரம் வாசம் முடித்துவிட்டு செய்துவிட்டு இன்று சென்னை திரும்பினேன்.

காலை ஐந்தரைக்கு வீட்டை திறந்தால் எல்லாம் அலங்கோலமாக இருந்தது.

ஷூராக் கீழே விழுந்து, நியூஸ் பேப்பர் கலைந்து, வீடு முழுக்க ஏதோ மஞ்சள் திரவம்... கூடவே வயிற்றை குமட்டிக்கொண்டு எலி செத்த நாற்றம்.

செத்த எலி எங்கே ? எங்கிருந்து வந்திருக்கும் என்று காலை ஆறு மணிக்கு ஆராயத் துவ…

ராமானுஜலு உருவான கதை

ராமானுஜலு பற்றியும் எழுதுங்களேன்”...
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் செய்ய கூடாது - பகவத அபச்சாரம்( நாராயணனே நமக்கே பறை தருவான்!), பாகவத அபச்சாரம்.

இதில் பாகவத அபச்சாரம் செய்யவே கூடாது. அந்த அபச்சாரத்தை பெருமாள் கூட மன்னிக்க மாட்டார்.

கூரத்தாழ்வாருக்கு கண்ணிழந்த போது, உடையவர் அவரை பார்த்து
உமக்கு இந்த நிலையா ?” என்று கேட்ட போது அதற்கு கூரத்தாழ்வார் ”யாராவது ஒரு வைணவரின் நெற்றியிலுள்ள திருமண் கோணலாக உள்ளதே என்று நினைத்திருப்பேனோ என்னவோ” என்று பதில் அளித்தார். அவருக்கே இந்த நிலமை என்றால் நம் போன்றவர்களுக்கு ?

ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீசூர்ணம் கூட இட்டுக்கொண்டு வெளியே போக வெட்கப்படும் இந்த காலத்தில் நாயுடு சமுகத்தினர் நெற்றி நிறைய திருமண் தரித்துக்கொண்டு கோயிலில் “அங்கே போய் நில்லு” என்று அந்த பாகவதர்களுக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் துளிக்கூட Ego இல்லாமல் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் காண்பிக்காமல் அவர்களால் எப்படி இருக்க முடியும் என்று யோசித்ததுண்டு.

இதை வைத்துக்கொண்டு எழுதியது தான் ராமானுஜலு கதை. ஸ்ரீராமானுஜர் பாஞ்சஜன்யம் ( சங்கு ) அம்சம் …

பெருங்காயம் உருவான கதை

அப்பாவின் ரேடியோ” சிறுகதை பற்றி ஆமருவி தேவநாதன் தன் வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளார். அவருக்கு என் நன்றி.
கடைசியில் “இவற்றை எழுதக் காரணமான நிகழ்ச்சிகள் பற்றி திரு.தேசிகன் எழுதினால் இன்னமும் சுவைக்கும்.” என்று விண்ணப்பம் செய்துள்ளார்.

எழுதலாம். ஆனால் ரொம்ப போஸ்ட்மார்டம் செய்தால் சிறுகதை சுவைக்காது. சுஜாதாவுடன் பழகிய நாட்களில் அவர் எழுதும் சிறுகதைகளை பற்றி என்னிடம் விவரிப்பார். குறிப்பாக விகடனில் எழுதிய ஸ்ரீரங்கத்துக் கதைகளைப் பற்றியும் அதை ஒட்டி நடந்த உண்மையான சம்பவங்களை பற்றியும் என்னிடம் சொல்லியிருக்கிறார். யாருக்கும் கிடைக்காத ஒரு பெரிய பாக்கியமாக இதை நான் கருதுகிறேன்.

அவர் என்னிடம் அடிக்கடி சொல்லிகொடுத்த விஷயம் “details... details". அது இருந்தால் தான் ஒரு வித கதைகளுக்கு  நம்பகத்தன்மை வரும்.

முதல் விஷயமாக ”பெருங்காயம்” சிறுகதைப் பற்றி.
ஒரு முஸ்லீம் நண்பர் ஸ்ரீவைஷ்ணவர்களை காட்டிலும் பிரபந்தங்களை அழகாக ஒப்பித்தார் என்ற ஒற்றை வரியில் கதை இருப்பதாக தோன்றியது. ஆனால் முஸ்லீம், பிராமணர் பற்றி எழுதுவது கத்தியில் நடப்பது போல. எங்கள் தாத்தா கும்பகோணம் - பாபநாசம் பக்கம் மாளாபுரம் என்…

ஸ்ரீஆளவந்தார், திருமங்கை ஆழ்வாருடன் ஒரு நாள்.

31-7-15 ஸ்ரீ ஆளவந்தாருடைய திருநட்சத்திரம்.

நாலாயிர திவ்விய பிரபந்தத்தை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தொகுத்தளித்த ஸ்ரீமந் நாதமுனிகள் பிறந்த ஊர். அவரது பேரனும் ஸ்ரீ ராமானுஜரின் ஆச்சாரியரும் ஆன ஆளவந்தார் அவதரித்த ஸ்தலம் காட்டுமன்னார் கோவில். ஆளவந்தார் திருநட்சத்திரம் அன்று ஆளவந்தாருடைய அவதார ஸ்தலமான காட்டுமன்னார் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று திடீர் முடிவெடுத்தேன்.

(கடந்த வருடம் ஆளவந்தார் குறித்து எழுதிய சிறு குறிப்பு இறுதியில் இணைத்துள்ளேன்.)

ரயில், பேருந்து, ஆட்டோ என்று எல்லா இடங்களும் ”விண்டோ சீட்” கிடைத்து எங்கே திரும்பினாலும் ‘அப்துல் கலாம்’ கண்ணீர் அஞ்சலியும், வீரவணக்கம் போஸ்டர்களும் கண்ணில் பட்டது.

தனியாகச் சென்ற இந்தப் பயணம் எனக்கு பல உலக விஷங்களைக் கற்றுத்தந்தது. சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயிலுக்கு பேருந்தில் சென்ற போது என் பின்இருக்கைகளில் சிலர் வந்து ஏறிக்கொண்டார்கள். அவர்களைப் பார்த்த போது ‘உடமைகளை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று உள் மனது எச்சரித்தது. தூங்காமல் கண்விழித்து காட்டுமன்னார் கோயில் பேருந்து நிலையத்தில் இறங்கியதும் அங்கே இருந்த சிலரிடம் வழி கேட்ட…