Skip to main content

Posts

Showing posts from June, 2007

ரவுண்ட் டிரிப் வித் சுஜாதா

[%image(20070621-Sujatha_Desikan.jpg|200|150|Me and Sujatha)%] ஏப்ரல் மாதம் சுஜாதாவை சந்தித்த போது "தேசிகன் ஒரு முறை ஸ்ரீரங்கம் போகணும்? என்னை அழைத்துக்கொண்டு போக முடியுமா ?" என்றார்.  இரண்டு வாரம் முன் இந்த பயணம் நிறைவேறியது. அதை பற்றி சுஜாதா ஆனந்த விகடன் கற்றதும் பெற்றதுமில் எழுதியிருக்கிறார். ( அதை எனக்கு அனுப்பிவைத்த நண்பர் ராஜேஷுக்கு நன்றி ) பிறந்த தினத்-தன்றே போக நினைத்து, டிக்கெட் கிடைக்காமல், சென்ற வாரம்தான் ஸ்ரீரங்கம் சென்றேன். லல்லு வந்ததில், ரயில் நிலை-யச் சுத்தத்தை கான்ட்ராக்ட் விட்டு எழும்பூர், திருச்சி ஜங்ஷன்கள் எல்லாம் பளபளவென்று இருக்-கின்றன. பெட்டிகளும் சுத்தமாக இருந்த ராக்ஃபோர்ட் எக்ஸ்பிர-ஸில் வந்து சேர்ந்தேன். பாயும் நீர் அரங்கத்தின் இரு நதிகளிலும் ஒரு சொட்டுத் தண்ணீர்-கூட இல்லை. வெயில் வருவதற்குள் கோயிலுக்குப் புறப்பட்டேன். கோபுரங்களை ஓவராக வெள்ளையடித்ததில் அல்பைனோ தோற்றமளிக்க, வாட்டர் ஸ்ப்ரே வைத்துக் காலலம்பிக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தேன். பூச்சாற்றி உற்சவம் முடிந்துபோன ஒரு சாதாரண வெள்ளிக்கிழமையிலேயே இத்தனை கூட்டத்தைப் பார்த்தபோது, என் இளமைக் கால ஸ்ரீ