Skip to main content

Posts

Showing posts from July, 2004

பூபி, பாபி

சா·ப்ட்வேர் என்ஞ்சினியருக்கு எல்லாம் தெரியும் என்ற சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. உதாரணத்துக்கு என் மகளை தூங்க வைக்க எனக்கு கதை சொல்ல தெரியவில்லை. சொன்ன கதையை திருப்பி சொன்னால் அவளுக்கு கோபம் வருகிறது. தினமும் ராத்திரி பெரும் பாடாக இருக்கிறது. சொல்லும் கதையில் சிங்கம், புலி எல்லாம் கட்டாயம் வரவேண்டும். முக்கியமாக அவள் கேட்கும் பல கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்ல வேண்டும். என் பாட்டி எனக்கு நிறைய கதை சொல்லியிருக்காள் - ராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திரா, கர்ணன், கஜேந்திர மேட்சம் போன்றவை. சொன்ன கதையை திருப்பி சொன்னால் முகம் சுளிக்காமல் கேட்பேன். என் மகள் அப்படியில்லை அவளுக்கு தினமும் ஒரு புது கதை தேவைப்படுகிறது. போன ஞாயிற்றுக்கிழமை 'லேண்ட் மார்க்' புத்தக கடைக்கு போய் 'பெட் டைம் ஸ்டோரிஸ்' புத்தகம் வாங்கினேன். முதல் கதையை படித்து என் மகளுக்கு செல்ல ஆரம்பித்தேன்... "ஒரு ஊர்ல ரெண்டு பேர் இருந்தா. ஒர்த்தர் பேர் பூபி, இன்னொருத்தர் பேர் பாபி!". அவா dwarfs ரொம்ப குள்ளமா இருப்பா..." "அப்பா, அவா எவ்வளவு குள்ளமா இருப்பா?" "ரொம்ப குள்ளமா... உன்னோடா கு

ஸ்ரீரங்கம் - 5

[%image(20050803-Melkote.jpg|600|281|Melkote)%] ஸ்ரீராமாநுசருக்கு முதலாம் குலோத்துங்க சோழனால் (கிபி 1070-1120) பல தொந்திரவுகள் நேர்ந்தன. சைவசமயத்தில் பற்று கொண்ட அரசன், ஸ்ரீராமாநுசர் மற்றும் அவரது சீடர்களான பெரியநம்பி, கூரத்தாழ்வான் ஆகியோருக்கு பல கொடுமைகளைச் செய்தான் என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீராமாநுசர் மைசூர் பக்கத்தில் உள்ள திருநாராயணபுரத்துக்கு (மேல்கோட்டை) தன் 52 சீடர்களுடன் சென்று அடைக்கலம் புகுந்தார். இந்தசமயத்தில் ஒய்சாளர்கள் சோழர் வசம் இருந்த மைசூரைக் கைப்பற்றியிருந்தார்கள். அதனால் ஸ்ரீராமாநுசர் மேல்கோட்டை சென்றதில் வியப்பில்லை.   (படத்தில் ஸ்ரீராமாநுசர் சன்னதி மேல்கோட்டை. நான் சென்ற ஆண்டு(2003) டிசம்பரில் மேல்கோட்டை சென்றபோது வரைந்த ஓவியம்).       சோழ அரசர்கள் சைவ ஆதரவாளர்கள் என்றாலும் கூட ராமாநுசருக்கு நேர்ந்த அனுபவத்தை வைத்து அவர்கள்ஸ்ரீவைஷ்ணவத்திற்கு எதிரானவர்கள் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது. ஏனென்றால் சோழக் கல்வெட்டுகள் சைவ, வைஷ்ணவ கோயில்கள் இரண்டிலும் காணப்படுகிறது அரசர்கள் சிலசமயம் தங்கள் மந்திரிமற்றும் ஆலோசகர்கள் சொல் கேட்டு வரம்பு மீறி நடந்து கொண்டார்கள

வின்னி

நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். ஸ்கூலில் எங்களுக்கு 'P.T' என்று ஒரு வகுப்பு இருக்கும். வெயிலில் நிற்க வைப்பார்கள். எதாவது எக்ஸர்சைஸ் செய்ய சொல்வார்கள். எங்களுக்கு அது அவ்வளவாக பிடிக்காது. லன்ச் பிரேக்கில் விளையாடுவது தான் பிடிக்கும். சீக்கிரம் சாப்பிட்டால் ஒரு அரை மணி நேரம் கிடைக்கும். சீசனுக்கு தகுந்தார் போல் விளையாடுவோம். டிவியில் கிரிக்கெட் காமித்தால், நாங்களும் கிரிக்கெட். புட்பால் என்றால், புட்பால். மழைக்காலம் வந்துவிட்டால் மட்டும் பம்பரம் ஆட ஆரம்பித்து விடுவோம். கூட்டம் கூட்டமாக எங்குப் பார்த்தாலும் பம்பரம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். நான் சாப்பிட்டுவிட்டு பம்பரம் விளையாட்டைப் பார்க்க போய்விடுவேன். இன்றும் எப்போதும் போல் லன்ச் முடித்துவிட்டு வின்னியின் விளையாட்டைப் பார்க்க போனேன். வட்டதிற்குள் சுரேஷின் பம்பரம் இருந்தது. வின்னி குறிபார்த்து அடிக்க தயாரானான். பம்பர ஆணிக்கு முத்தம் கொடுத்தான். அடித்தான். சுரேஷின் பம்பரம் ஒரு மெழுக்கு வாங்கி ஒரு சில் பறந்தது. வட்டத்துக்குள் இருக்கும் பம்பரத்தைச் சொல்லி வைத்து மொழுக்கு குத்துவதில் வின்னி கில்லாடி. சிலசமயம் 'மொழுக