Skip to main content

Posts

Showing posts from May, 2022

அட்டைப் படங்கள் சிறு குறிப்பு

 அட்டைப் படங்கள் சிறு குறிப்பு இரண்டாம் பதிப்பின் அட்டைப் படங்களை குறித்து சில விஷயங்கள். பிரபந்தத்தை கையில் ஏந்தினால் சில நொடிகளாவது அட்டைப் படத்தை தரிசிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். அதனால் அட்டைப் படத்தின் நடுவில் இருக்கும் பெருமாள் படத்தை மட்டும் ’UV’ முறையில் அச்சடிக்கப்பட்டது. முதல் பதிப்பில் நம்பெருமாள் மிக அழகாக காட்சி கொடுத்தார். பலர் “அட்டைப் படத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம்” என்று கூறிய போது மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டாம் பதிப்பு இரண்டு புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்று முடிவு செய்த போது என்ன அட்டைப் படம் வைக்கலாம் என்று யோசித்த போது நம்பெருமாள் தாயார் படம் தேடாமலே கிடைத்தது. பாகம்-1, பாகம்-2 இரண்டும் கையில் இருந்தால் ‘சேர்த்தி சேவை!” அநுபந்தம் அட்டைப் படம் என்ன என்று யோசிக்கும் போது மீண்டும் நம்மாழ்வார் மோட்சம் படம் கிடைத்தது. இதையும் தேடவில்லை. மூன்று அட்டைப் படங்களும் எடுத்தவர் என் நண்பர் திரு சுதாகர் அவர்கள். அவருக்கு என் நன்றிகள். மூன்று புத்தகங்களுக்கும் உட்புற அட்டையில் என்ன படங்கள் வைக்கலாம் என்று யோசித்த போது கோவிட் போது பங்குனி உத்திரம் நடைபெறவில்லை

’பயிலும் சுடர் ஒளி’ - உள்ளர்த்தம்

 ’பயிலும் சுடர் ஒளி’ - உள்ளர்த்தம் அடியார் ஒருவர் சிறிது நேரத்துக்கு முன் கூப்பிட்டார். “சாமி எனக்கு புத்தகம் இன்னும் வரவில்லை. எப்போது வரும்?” ”அடுத்த வாரம் அனுப்புவோம் அதற்கும் அடுத்த வாரம் உங்கள் கைக்கு கிடைக்கும்” என்றேன். “சரிங்க” என்று சொன்னவர் “எங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு மொத்தமாக அனுப்பிவிடுங்கள். நான் என் டூவீலரில் கொண்டு போய் கொடுக்கிறேன்” என்றார் “உங்களுக்கு கஷ்டமாக இருக்குமே?” என்றேன். அதற்கு அவர் “சாமி இதில என்ன கஷ்டம். இதனால் பல அடியார்களை தரிசிக்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைக்கும்” என்றார் நம்மாழ்வாரின் பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை,* பங்கயக் கண்ணனை* பயில இனிய* நம் பாற்கடல்-சேர்ந்த பரமனை** பயிலும் திரு உடையார்* எவரேலும், அவர் கண்டீர்* பயிலும் பிறப்பிடைதோறு* எம்மை ஆளும் பரமரே என்ற பாசுரத்தின் உள்ளர்த்தம் நமக்காகத் திருப்பாற் கடலில் துயில் கொண்டிருக்கும் எம்பிரானை வணங்கும் அடியார்கள் who ever they may be, they are my masters, through seven lives என்கிறார் நம்மாழ்வார் - சுஜாதா தேசிகன் 28.05.2022

ஸ்ரீ உ.வே எம்.எஸ். வேங்கடாச்சாரியார் பாராட்டுரை

 ஸ்ரீ உ.வே எம்.எஸ். வேங்கடாச்சாரி பாராட்டுரை முதல் பதிப்பு வெளி வந்த சமயம், அதன் பிரதியை ஸ்ரீமந் நாதமுனிகள் சந்நிதியில் ஆசீர்வாதம் பெற சென்றிருந்தேன். அங்கே என்ன நடந்தது என்று சுருக்கமாக சொல்லுகிறேன். அன்று காலை ஒன்பது மணிக்கு காட்டுமன்னார் கோயிலில் வீரநாராயணப் பெருமாள் முன் நின்றேன். இங்கே தான் சுமார் 1200 வருடங்கள் முன் நாதமுனிகள் நாலாயிரத்தையும் அரங்கேற்றம் செய்தார் என்ற நினைப்பே உள்ளத்தில் ஆனந்தத்தை கொடுத்தது. காட்டுமன்னார் பெருமாள் திருவடிகளில் பிரபந்தப் புத்தகத்தை வைத்து அர்ச்சகர் “இவர் காட்டும் மன்னார். நாலாயிரத்தை நாதமுனிகளுக்குக் காட்டிக்கொடுத்த மன்னார். நாதமுனிகள் தினமும் ஆராதனை செய்த பெருமாள்…” என்று கூறி மன்னார் ஆசிர்வதிக்க அர்ச்சகரிடம் “நாதமுனிகள் திருவடிகளிலும் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்றேன். “பெருமாள் திருவாராதனம், பிறகு கோஷ்டி முடிந்த பின் தான். நாழியாகும்” என்றார். அங்கே இருந்த தீர்த்தம் ஸ்தானிகர் ( ஸ்ரீநிவாசாச்சார் ஸ்வாமி ) “உங்களுக்கு பெங்களூர் செல்லுவதற்கு நேரம் ஆகிவிட்டது என்றால் நாதமுனிகளின் சந்நிதி வாசல் படியில் வைத்துச் சேவித்துவிட்டுச் செல்லுங்கள்” என்றார

ஸ்ரீ உ.வே.அரங்கராஜன் அவர்கள் அணிந்துரை

ஸ்ரீ உ.வே.அரங்கராஜன் அவர்கள் அணிந்துரை முதல் பதிப்பு பிரபந்தம் வந்த பிறகு ஒரு நாள் மதுரை பேராசிரியர் முனைவர் ஸ்ரீ உ.வே அரங்கராஜன் ஸ்வாமி என்னை தொலைப்பேசியில் அழைத்தார். “பிரபந்தம் பதிப்பாசிரியர் என்ற முறையில் நீங்கள் சிலவற்றை தெரிந்துகொள்ள வேண்டும்” என்று ஆழ்வார் பாசுரத்திலிருந்து சில வரிகளை மேற்கோள் காண்பித்து, அதற்கு விளக்கம் கொடுத்தார். 87 வயதை தாண்டியவர் என்னை கூப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. அளவு கடந்த பிரேமையும், ஆழ்வார்களின் மீதும், அவர்களின் ஈரத் தமிழின்பால் பிரேமையினால் மட்டுமே அது நடந்தது.   இன்றும் பிரபந்தத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே அவரை அழைத்துவிடுவேன். உடனே வகுப்பு ஆசிரியர் போல அழகாக சொல்லிக்கொடுப்பார்.   இரண்டாம் பதிப்பு பிரிண்டுக்கு போகும் சமயம் அவரிடம் தண்டம் சமர்ப்பித்து ”அடியேனுக்கு உங்கள் கையினால் ஓர் அணிந்துரை வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன். “பார்க்கிறேன்” என்று கூறியவர் சில நாட்களில் என்னை அழைத்து அவர் எழுதிய அணிந்துரையை எனக்கு நிறுத்தி நிதானமாக படித்து காண்பித்து அனுப்பிவைத்தார். இந்த பெரும் பெறு எனக்கு பூர்வ ஜென்ம புண்ணியம். - சுஜாதா தேசிகன் 22.05.

முக்கியமான அறிவிப்பு - மோசடி வேலை

 முக்கியமான அறிவிப்பு  இன்று ஒருவர் “உங்களுக்கு பணம் அனுப்பிவிட்டேன். புத்தகம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை, போன புதன் கிழமையே அனுப்பிவிடுவீர்கள் என்று கூறினீர்களே” என்றார்.  எனக்கு சந்தேகம் வந்து அவரிடம் பேசிய போது 9789804936 மொபைல் நம்பரிலிருந்து ஒரு நபர் ( கணேஷ் வரதன் ) என்று கூறியிருக்கிறார்.  அவர் இந்த 9884214060 எண்ணுக்கு GPay அனுப்ப சொல்லியிருக்கிறார்.  பணத்தை அனுப்பிய பிறகு.   இந்த இரண்டு நம்பரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.  இது ஒரு மோசடி வேலை. தயவு செய்து Ramanuja Desika Munigal Trustக்கு மட்டும் பணம் அனுப்புங்கள். வேறு யாருக்கும் அனுப்பாதீர்கள்.  இந்த இரண்டு போன் நம்பரிலும் எந்த பதிலும் இல்லை. இந்த இரண்டு நம்பரும் facebookல் தேடிய Hema Malini என்ற நபருக்கு செல்லுகிறது.  cyber crime க்கு புகார் கொடுக்க இருக்கிறேன். முகநூலில் காவல் துறை நண்பர்கள் இருந்தால் உதவலாம்.  நன்றி - சுஜாதா தேசிகன் 22.05.2022

ஆசாரியரின் ‘அநுக்ரஹ’ ஸ்ரீமுகம்

ஆசாரியரின் ‘அநுக்ரஹ’ ஸ்ரீமுகம் ஆசாரியரின் ‘அநுக்ரஹ’ ஸ்ரீமுகம் சென்ற மாதம் அடியேனின் ஆசாரியனான ஸ்ரீ அஹோபில மடம் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர்  பெங்களூர் விஜயத்தின் போது அவரைச் சேவித்து ஆசீர்வாதம் பெற்றேன்.  கிளம்பும் முன் மீண்டும் அவரைச் சேவித்து “இன்னும் இரண்டு வாரத்தில் பிரபந்தம் புத்தகம் இரண்டாம் பதிப்பு வருகிறது.  உங்கள் ஆசிரிவாதம் வேண்டும்” என்றேன்.  “நன்றாக வரும். இது போல மேன்மேலும் செய்யுங்கள்” என்று ஆசிவர்வாதம் செய்தார். அப்போது கையில் இருந்த முதல் பதிப்பை அவரிடம் சமர்பித்தேன்.  “இந்தப் புத்தகம் நினைவு இருக்கிறது” என்று இரண்டாம் பதிப்பின் விவரங்களை கேட்டறிந்தார்.  வீட்டுக்கு திரும்ப, காரை ஸ்டார்ட் செய்யும் போது ஓர் எண்ணம் தோன்றியது.  ஆசாரியன் இருக்கும் அறைக் கதவை தட்டி உள்ளே சென்று அவரிடம் “இரண்டாம் பதிப்புக்கு ஸ்ரீமுகம் அருளவேண்டும்” என்றேன்.  “மெலிதான புன்னகையுடன். ஸ்ரீ காரியம் ஊரில் இல்லை. வந்தவுடன் ஏற்பாடு செய்கிறேன்” என்று அருளினார்.  வாகனத்துக்கு வந்த போது புத்தகம் அச்சுக்கு செல்லும் நாள் நினைவுக்கு வந்தது.   மீண்டும் கதவை தட்டிக்கொண்டு உள்ளே சென்றேன்.  “புத்தகம் ஒரு வாரத

இரண்டாம் பதிப்பு - பதம் பிரித்த பிரபந்தம் அப்டேட் - 17.05.2022

பதம் பிரித்த பிரபந்தம் அப்டேட் - 17.05.2022 பணம் அனுப்பிவிட்டேன், எனக்கு எப்போது Tracking Number  வரும் ?  பத்து நிமிடம் முன் பணம் அனுப்பியவர்களுக்கு கூட Tracking Number அனுப்பிவிட்டோம்.  இனி பணம் அனுப்புகிறவர்களுக்கு டிராக்கிங் நம்பர் அன்றே அனுப்பப்படும்.  எனக்கு டிராக்கிங் நம்பர் வரவில்லையே ?  கீழே கமெண்ட் அல்லது rdmctrust@gmail.com க்கு ஒரு மெயில் அனுப்பவும்.  சரி, ஏன் இந்த தாமதம் ?  புத்தகம் அறிவிப்பு வந்தவுடன் பலர் புக் செய்ததால் எல்லாவற்றையும் வங்கி கணக்கில் சரி பார்த்து, டிராக்கிங் நம்பர் அனுப்ப தாமதம் ஆகிவிட்டது.  எவ்வளவு புத்தகங்கள் அச்சடிக்க திட்டம் ?  ஆயிரம்  புத்தகங்கள் அச்சடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அறிவித்த சில நாட்களில் பலர் புக் செய்த்தால்,  கூடுதலாக  புத்தகம் அடிக்க வேண்டும் என்று தோன்றியது.  தற்போது 1500 புத்தகங்கள் அச்சடிக்கிறோம்.  இரண்டு மாதம் கழித்து புத்தகம் கிடைக்குமா ?  புத்தகம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும். இல்லை என்றால் அடுத்த பதிப்புக்கு காத்திருக்க வேண்டும்.  சரி, பணம் அனுப்பிவிட்டேன், டிராக்கிங் நம்பர் கிடைத்துவிட்டது, புத்தகம் எப்போது கைக்கு வரும் 

’அடியேன் சாமிக்கு’ மூன்று செட் பார்சல்

 ’அடியேன் சாமிக்கு’  மூன்று செட் பார்சல் கடந்த சில மாதங்களாக பிரபந்தம் புத்தகம் குறித்துப் பல அழைப்புகள் வரும். மார்ச் முதல் வாரம் என்று நினைக்கிறேன் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. பேசியவர் ’அடியேன் சாமி’ என்று ஆரம்பித்தவுடன் அந்த அடியேனில் உண்மையான ‘அடியேன்’ ஒளிந்துகொண்டு இருந்தது. பேச்சு வட்டாரமொழியில் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமபுரத்தை நினைவுபடுத்தியது.  குரல் நாற்பது என்றது.  “சாமி பிரபந்தம் புத்தகம் எங்கே கிடைக்கும் அடியேனுக்கு ஒரு பிரதி வேண்டும்” என்று சுத்தமான தமிழில் இருந்தது.  ”புத்தகம் தயாராகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் ஆகும்” என்றேன்.  “அப்ப ஒரு மாதம் கழித்து மீண்டும் கூப்பிடட்டுமா ?” “சரி, ஏப்ரல் முதல் வாரம் கால் செய்யுங்க” சரியாக ஏப்ரல் முதல் வாரம் அவர் மீண்டும் அழைத்தார் மீண்டும் அதே “அடியேன் சாமி!” என்று ஆரம்பித்தார்.  “நீங்க ஏப்ரல் முதல் வாரம் அழைக்க சொல்லியிருந்தீங்க…மன்னிக்கனும்” என்று மீண்டும் பிரபந்தம் புத்தகத்தை பற்றிக் கேட்டார்.  ”புத்தகம் ரெடியாகிக்கொண்டு இருக்கிறது…உடையவர் திருநட்சத்திரம் 5-மே அன்று வெளியிட முடிவு செய்திருக்கி்றோம்… அப்ப கால் செய்யுங்

செய்ந்நன்றி

செய்ந்நன்றி திருக்குறளில் செய்ந்நன்றியறிதல் என்று ஓர் அதிகாரமே இருக்கிறது. பொதுவாக நாம் பிறருக்குச் செய்த நன்றி தான் நினைவில் இருக்கும். ஆனால் பிறர் நமக்கு செய்த நன்றி மறந்துவிடுவோம்.  கைமாறு கருதாது செய்த ‘செய்ந்நன்றியை’ போற்ற வேண்டாம், மறக்காமல் இருக்கலாம். மறப்பதற்கு முன் அதை இங்கே எழுதிவிடுவது என்ற முடிவு. .  ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் இரண்டாம் பதிப்பிற்குப் பலர் உதவியிருக்கிறார்கள்.  புத்தகம் அச்சுக்குச் செல்லும் சமயம், அடியேனின் ஆசாரியனான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கரை சேவித்து, பிரபந்தம் இரண்டாம் பதிப்பு வருகிறது, அதற்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என்றேன். “நல்லா வரும்!” அன்று திருவாய் மலர்ந்தார். சட்டென்று அவரிடம் ”ஸ்ரீமுகம் அருள முடியுமா ?” என்று கேட்க  “ஸ்ரீகாரியம் ஊரில் இல்லை, வந்தவுடன் தருகிறேன்” என்றார்.  “புத்தகம் சில நாளில் அச்சுக்கு போகிறது… “ என்றேன்.  உடனே ஸ்ரீமுகத்துக்கு ஏற்பாடு செய்து அவர் கையால் அக்ஷதையுடன் ஆசீர்வதித்தார்.   தன் 90 வயதிலும் சிரமம் பாராமல், திரு பி.எஸ்.ஆர் என்ற ‘கடுகு’ ஆசாரியன் திருவடி அடைவதற்கு ஒரு நாள் முன் இந்த

ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் ஆசீர்வாதம்

ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் ஆசீர்வாதம் அடியேனுக்கு மிக உகந்த திவ்ய தேசம் உறையூர் கமலவல்லி நாச்சியார். சற்று முன் பிரபந்தப் புத்தகத்தை நாச்சியார் ஆசிர்வதிக்க அதை ஸ்ரீராமானுஜர் பெற்றுக்கொண்டார்.  என் ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த என் ஆப்த நண்பர் Kesavan Srinivasan அவர்களுக்கு தலையல்லால் கைமாறிலேன்  படத்தில் ஸ்ரீ உ.வே ஸ்ரீவத்ஸன் (பராசர பட்டர்) ஸ்வாமிகள்.  - சுஜாதா தேசிகன் 5.5.2022

உடையவருக்குப் பிறந்த நாள் பரிசு !

 உடையவருக்குப் பிறந்த நாள் பரிசு !  போன வருடம் ஸ்ரீ உடையவர் திருநட்சத்திரம் அன்று ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் புத்தகம் வெளியிட்டு பலர் அதைப் பெற்றுக்கொண்டு ஒரே மாதத்தில் அது தீர்ந்தது.   இந்த வருடமும் ஸ்ரீ உடையவர் திருநட்சத்திரமான இன்று இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் ஆசியுடன், ஸ்ரீராமானுஜர் சந்நிதியில் இன்று காலை என் தம்பி உடையவர் சந்நிதியில் புத்தகத்தை சமர்பிக்க, அர்ச்சகர் ”இன்று முழுக்க இந்தப் புத்தகம் உடையவரிடமே இருக்கட்டும்” என்று தானுகந்த திருமேனி அருகில் உடையவர் உகந்த பிரபந்தத்தை எழுந்தருளச் செய்துவிட்டார். ஆயிரம் ஆண்டுகளில் உடையவருக்கு பிறந்த நாள் பரிசாக பிரபந்தப் புத்தகம் கிடைப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்!  - சுஜாதா தேசிகன் 5.5.2022  படம்1 : ஸ்ரீபெரும்புதூரில் எம்பெருமானார் உகந்து அளித்த துளசி பிரசாதத்துடன் புத்தகம் படம்2: யதிராஜர் ஆசீர்வதிக்க எங்கள் அகத்தில் ஆழ்வார்கள் அருளிச் செயல்காளுடன்.   பிகு: நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியானது முதல் பலர் ஆர்வத்துடன் புத்தகத

பதம் பிரித்த பிரபந்தம் - இரண்டாம் பதிப்பு - அறிவிப்பு

பதம் பிரித்த பிரபந்தம் - இரண்டாம் பதிப்பு - அறிவிப்பு  ஸ்ரீ ஸ்ரீமதே ராமானுஜாய நம:  சென்ற வருடம் ‘பதம் பிரித்த பிரபந்தம்’ புத்தகம் குறித்து எழுதியதும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் உங்களுக்கு நினைவு இருக்கலாம்.  முதல் பதிப்பு சென்ற ஆண்டு 2021 ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திரம் அன்று வெளியிடப்பட்டு, ஒரே மாதத்தில் தீர்ந்து அடுத்த பதிப்பு எப்போது வரும் என்று பலர் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.  இரண்டாம் பதிப்பை உடனே கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவசரப்படாமல், முதல் பதிப்பை உபயோகித்தவர்கள் சொன்ன கருத்துக்களை நினைவில் கொண்டு, புத்தகத்தை மேலும் செம்மைப்படுத்தி இரண்டாம் பதிப்பு இந்த ஆண்டு ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திரம் அன்று (5.5.2022) வெளிவர இருக்கிறது. புத்தகம் பற்றிய விபரம் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைக் கீழே தந்துள்ளேன்.  முதல் பதிப்பிற்கும் இரண்டாம் பதிப்பிற்கும் என்ன வித்தியாசம் ?  இந்தப் பதிப்பிற்கு அடியேனின் ஆசாரியனான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் ஸ்ரீமுகம் சாதித்துள்ளார்.  மதுரைப் பேராசிரியர் ஸ்ரீ உ.வே அரங்கராஜன் அவர்கள் அணிந்துரையும், ஸ்ரீ.உ.வே வேங்கடாசாரி அவர்கள் பாராட்ட

அநுபந்தம் - அறிமுகம்

அநுபந்தம் - அறிமுகம் ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் புத்தகத்தைத் தொகுக்கும் சமயம், ஒப்புநோக்கப் பலர் பதிப்பித்த புத்தகங்களை ஆராயும் வாய்ப்புக் கிடைத்தது. பழைய பதிப்பில் மறைந்திருந்த தகவல்கள் கண்டு வியந்தேன். கணினி இல்லாத அக்காலத்தில், கணினிக்கு நிகரான அறிவைக் கொண்டு அவர்கள் தொகுத்த விஷயங்கள் பிரமிப்பூட்டியது. துரதிர்ஷ்டவசமாக  பிற்கால வெளியீடுகளில், இந்தப் பொக்கிஷங்களைத்  தொலைத்துவிட்டோம். சில உதாரணங்களைத் தருகிறேன்.  1943ஆம் ஆண்டு ’மயிலை மாதவ தாசன்’ பதிப்பித்த புத்தகத்தில் பல குறிப்புகள் இருக்கிறது. உதாரணமாக ஆழ்வார் பாசுரங்களில்  எங்கு எல்லாம் வண்டுகள், கிளி, குயில் போன்றவற்றை வழிபட்டுள்ளார்கள்; ஆழ்வார்களைக் குறித்த கல்வெட்டுக்கள் போன்றவை ஒளிந்துக்கொண்டு இருந்தன. இது போன்ற விஷயங்களை தேடி எடுத்து தந்துள்ளோம்.  1956, எஸ்.ராஜம் அவர்கள் பதிப்பித்த திவ்யப் பிரபந்தப் புத்தகத்தில் முதலாயிரம் தவிர்த்து, மற்ற ஆயிரங்களுக்கு அருஞ்சொல் அகராதி இருக்கிறது. அகராதி சொற்களை தொகுத்து,  மீண்டும் மீண்டும் வரும் வார்த்தைகளை நீக்கி, முதலாயிரத்தில் வரும் சில அருஞ்சொற்களை அத்து