Skip to main content

அட்டைப் படங்கள் சிறு குறிப்பு

 அட்டைப் படங்கள் சிறு குறிப்பு


இரண்டாம் பதிப்பின் அட்டைப் படங்களை குறித்து சில விஷயங்கள்.

பிரபந்தத்தை கையில் ஏந்தினால் சில நொடிகளாவது அட்டைப் படத்தை தரிசிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். அதனால் அட்டைப் படத்தின் நடுவில் இருக்கும் பெருமாள் படத்தை மட்டும் ’UV’ முறையில் அச்சடிக்கப்பட்டது.

முதல் பதிப்பில் நம்பெருமாள் மிக அழகாக காட்சி கொடுத்தார். பலர் “அட்டைப் படத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம்” என்று கூறிய போது மகிழ்ச்சியாக இருந்தது.

இரண்டாம் பதிப்பு இரண்டு புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்று முடிவு செய்த போது என்ன அட்டைப் படம் வைக்கலாம் என்று யோசித்த போது நம்பெருமாள் தாயார் படம் தேடாமலே கிடைத்தது. பாகம்-1, பாகம்-2 இரண்டும் கையில் இருந்தால் ‘சேர்த்தி சேவை!”

அநுபந்தம் அட்டைப் படம் என்ன என்று யோசிக்கும் போது மீண்டும் நம்மாழ்வார் மோட்சம் படம் கிடைத்தது. இதையும் தேடவில்லை.

மூன்று அட்டைப் படங்களும் எடுத்தவர் என் நண்பர் திரு சுதாகர் அவர்கள். அவருக்கு என் நன்றிகள்.

மூன்று புத்தகங்களுக்கும் உட்புற அட்டையில் என்ன படங்கள் வைக்கலாம் என்று யோசித்த போது

கோவிட் போது பங்குனி உத்திரம் நடைபெறவில்லை. அதனால் போன வருடம் பங்குனி உத்திரம் நடந்தவுடன் அப்படங்களை உட்புற அட்டையில் சேர்த்தேன். கூடவே கோயில், திருமலை, பெருமாள் கோயில் என்ற வரிசையில் படங்களும், நமக்கு நாலாயிரம் கிடைக்க வழி செய்த திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதனும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் சேர்த்தியில் அலங்கரிக்கிறார்கள்.


 

இரண்டாம் பகுதியில் ‘அழகுச் செல்லங்கள்’ என்ற தலைப்பில் மேல்கோட்டை செல்லப் பிள்ளை, கள்ளழகர், மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலன், வடுவூர் ஸ்ரீராமருடன் எப்போதும் போல இந்த வருட ஸ்ரீநம்பெருமாள் சேர்த்தி சேவை. எல்லோரும் அழகுச் செல்லங்கள்.


 

அநுபந்தத்தின் உட்புற அட்டையில் ஸ்ரீராமானுஜருக்கு தொடர்புடைய முக்கிய திவ்ய தேசங்களில் இருக்கும் திருமேனி அலங்கரிக்கிறது. அவைகளை தரித்தால் ஸ்ரீராமானுஜருடைய சரித்திரம் உங்கள் மனதில் வந்து போகும். இது குறித்து அநுபந்தம் கடைசியில் சில குறிப்புகளும் கொடுத்திருக்கிறேன்.


 

எல்லா புத்தகங்களின் பின் அட்டையில் ஆழ்வார்கள் கோஷ்டியும், ராமானுஜ தேசிக முனிகள் ( மூன்று ஆசாரியர்களின் படங்களும் அலங்கரிக்கிறது).

படங்களை மகிழ்ச்சியுடன் கொடுத்து உதவிய இவர்களுக்கு

D. Sudakaran(cover pic),
N.Devathirajan,
SriRangavilasam,
K Kanakaraj,
Aravind Photography,
Shidhu Vishaal

என்றும் நன்றியுடன்

- சுஜாதா தேசிகன்
31.5.2022

48 வருடங்கள் கழித்து ஸ்ரீ நம்பெருமாள் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்த நாள்

Comments

  1. i require 1 set of 3 prabhandam books. Kindly let me know the payment procedure.

    ReplyDelete

Post a Comment