Skip to main content

Posts

Showing posts from September, 2020

வைணவத்தில் டாக்டர் பட்டம் !

வைணவத்தில் டாக்டர் பட்டம் ! இன்று வைணவத்தை தனியாக படிக்கலாம். டாக்டர் பட்டம் வாங்கலாம். பேசலாம் எழுதலாம். சில நாள் முன் ஒருவர் என்னுடன் பேசும் போது சொன்ன வார்த்தை என்னை யோசிக்க வைத்தது.   ”பிராமணர்களை பார்த்தால் எனக்கு ஒரு விதமான பயம். ஜீயர் என் பக்கம் நடந்து சென்றால் எனக்கு உடல் நடுக்கமாக இருக்கிறது!” என்றார்.  இன்னொருவர் ‘நைச்சிய குணம்’  அதாவது நீச்சனாக இருக்கும் தன்மை வருவது தான் மிக கஷ்டம் என்றார். மாற்று கருத்து இல்லை. பணம், குலம், படிப்பு அதிகமாக இருந்தால் இந்த நீச்ச பாவம் வருவது மிக மிகக் கஷ்டம்.  பரமபத விளையாட்டில் பெரிய பாம்பி வாயில் அகப்பட்டு கீழே வருவது போல நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும்.   ஒரு பிச்சைக்காரன் வாச கதைவை தட்டுகிறான் “யாரு அது?” என்று உள்ளேயிருந்து குரல் கொடுக்கிறோம். வெளியே பிச்சைக்காரன்  ‘நான் தான்யா’ என்று பதில் கூறுகிறான். அந்த பிச்சைக்காரன் சொல்லும்’நான்’க்கும் நாம் சொல்லும் ’அடியேனுக்கும்’ வித்தியாசம் இருக்கிறது. நம்முடைய ’அடியேனில்’  ஒரு வித செயற்கை தனம் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது.  என்றாவது ஒரு நாள் நம் உள்ளம் மாறி இயற்கையாக ‘அடியேன்’ என்று சொல்லும் நா

10. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழாழ்ந்தவர்கள்

10. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழாழ்ந்தவர்கள் மதுரகவிகள் சம்மந்தத்தாலும், குருகூர் சடகோபன் விசேஷ முறையில் தோன்றிய அவதாரத்தாலும், திருவாய்மொழி முதலிய ஆழ்வார் அருளிச்செயல்களை ‘போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே’ என்ற வாக்கியத்துக்கு ஏற்றவாறு திருவாய் மூலம் ’திருவாய்மொழியாக’ பிரசாதித்து குருகூர்சடகோபன் நாதமுனிகளுக்கு ஆசாரியரானார்.  சடகோபன் நாதமுனிகளை அருள்கூர்ந்து “இப்போதே பட்டோலை கொள்வீராக!” என்று குருகூர் சடகோபன் கூற, ஏகசந்த கிரகியாக(1)  நாதமுனிகள் தன் நெஞ்சத்தையே பட்டோலையாகக் கொண்டு எழுதச் சித்தமானார்.  குருகூர் நம்பி பெரியாழ்வார் தொடங்கி ஏனைய ஆழ்வார்களின் திவ்ய சரித்திரங்களையும் அவர்கள் அருளிய பிரபந்தங்கள், அதில் பொதிந்துள்ள விசேஷ அர்த்தங்களையும் உபதேசிக்க ஆரம்பித்தார்.(2) ”எப்போதும் தன் சித்தத்தில் விஷ்ணுவை வைத்துள்ள விஷ்ணுசித்தர்,  ஆனி ஸ்வாதியில் புகழ்பெற்ற வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியோன்! சிறப்பு பொருந்திய பாண்டியராஜனுடைய நெஞ்சுதன்னில் மால் பரத்துவத்தை நன்றாகப் போதித்து, பணையமான பொற்கிழி இவர் முன்னே தாழ வளைந்து நிற்க, பாண்டியன் சந்தேகம் நீங்கப்பெற்று,  பட்ஃப்டத்து  யானைய

புத்திசாலித்தனம் ஒரு சேவையாக..

புத்திசாலித்தனம் ஒரு சேவையாக.. சமீபகாலமாக நான் கதை, கட்டுரைகள் எழுதுவதற்கு மைக்ரோ சாப்ட் வேர்ட், நோட்பேட் போன்ற செயலிகளை உபயோகிப்பதில்லை.  ’கூகிள் டாக்ஸ்’ல் (Google docs) தட்டச்சு செய்கிறேன். கோப்புகளைக் கணினியில் சேமிக்காமல் ஆகாசத்தில் (cloud) எங்கோ சேமிக்கிறேன். இதை மனதில் வைத்துக்கொண்டு மேற்கொண்டு படியுங்கள்.  நான் கல்லூரியில் படித்த காலத்தில் கணினித் திரையில் ஆரஞ்சு அல்லது பச்சை கலர் எழுத்துக்கள் மட்டும் தெரியும். பேராசிரியர்கள் உபயோகிக்கும் திரை ஒரு மாதிரி திருச்சி மைகேல் ஐஸ்கிரிம் வண்ணத்தில் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். கலர் கம்யூட்டர் ஆர்.இ.சி போன்ற கல்லூரிகளில் பார்த்திருக்கிறேன்.  கல்லூரியில் செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence ) மீது ஒரு எனக்கு ஒரு மோகம் இருந்தது.  வங்கிகளில் கையெழுத்தை ஸ்கேனர் போன்ற ஒரு கருவிகொண்டு முன்பு நீங்கள் போட்ட கையெழுத்துடன் ஒப்பிட்டு அது நீங்கள் போட்டதா இல்லையா என்று சொல்லிவிடும் என்ற ஒரு கட்டுரை எழுதிக் கைத்தட்டல் வாங்கியிருக்கிறேன். இதை இன்று நினைத்தால் ‘சில்லரைத்தனமான’ விஷயமாக எனக்குப் படுகிறது.   செயற்கை அறிவு படிப்பில் ஆர்வம் ஏ

ஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் - கிண்டிலில்!

ஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் என்று 2019ல்அடியேன் எழுதிய சிறு புத்தகம் இப்போது கிண்டிலில் கிடைக்கிறது.  இந்தப் புத்தகம் என் மனதுக்கு உகந்தது. புத்தகம் வெளிவந்தபோது, அடியேனின் ஆசாரியனான ஸ்ரீ அஹோபில மடத்தின் 46ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கரின் திருக்கரங்களிலும் மேலும், ஸ்ரீமத் பரமஹம்ஸ திருப்பதி சின்ன ஜீயர், மற்றும் பெரிய ஜீயர் திருக்கரங்களிலும் தவழ்ந்ததை என் பாக்கியமாகக் கருதுகிறேன். ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்றபோது, தாயார் சன்னதியில் அர்ச்சகர் ‘நீர் தான் ஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் கட்டுரை எழுதியவரா ?’ என்று அடியேனை அந்தக் கூட்டத்திலும் அடையாளம் கண்டுகொண்டு, ‘உள்ளே வாரும்’ என்று என்னை அழைத்துத் தாயார் கையில் இருந்த தாமரைப் பூவையும், மஞ்சள் காப்பு உருண்டையும் பிரசாதமாகக் கொடுத்து. நன்றாகச் ‘சேவியும்’ சேவை செய்து வைத்தார். பிறகு நம்பெருமாள் திருவடியிலும், உறையூர் நாச்சியார் திருவடியிலும் இந்தப் புத்தகம் தவழ்ந்தது. இந்தப் புத்தகத்தைப் படித்த மதுரை பேராசிரியர் ஸ்ரீ உ.வே அரங்கராஜன் ஸ்வாமிகள், அடியேனைத் தொலைப்பேசியில் அழைத்துப் புத்தகத்தை வெகுவாகப் புகழ்ந்து, இந்தக் காலத்துக்கு இது மாதிரி தான் எழுத வே

அஹோபில மடத்தின் முதல் ஜீயர்

 அஹோபில மடத்தின் முதல் ஜீயர்                                ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்தர மஹாதேசிகன் இன்றைக்கு சுமார் 641 ஆண்டுகளுக்கு (2021ல் எழுதியது) முன், அதாவது 1379ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருநாராயணபுரத்தில் கிடாம்பி ஸ்ரீகேசவாச்சார்யாரின் புதல்வராக,  ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்துடன்  அவதரித்தார் அந்த மஹான்.  ஸ்ரீகேசவாச்சாரியார் உரிய காலத்தில் பஞ்சமஸ்காரங்களைப் பண்ணிவைத்து, வேதம், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், சாஸ்திரங்களை சொல்லிக்கொடுத்தார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதைப் போல இவருடைய ஞானத்தைக் கண்டு சந்தோஷமடைந்தார்.  அந்தக் காலத்தில் அத்திகிரி அருளாளன் நடாதூர் அம்மாளின் திருப்பேரனான கடிகாசதம் அம்மாளிடம் பாடம் படிக்க ஸ்ரீநிவாசனை அனுப்பினார். காஞ்சிக்குச் சென்ற ஸ்ரீநிவாசன் அம்மாளிடம் தம்மை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி பிராத்தித்தார். இவருடைய குணப்பூர்த்தியை கண்டு அம்மாள் இவரை தன் சிஷ்யராக ஏற்றுக்கொண்டு ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், பகவத்விஷயம், ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் முதலியவற்றை உபதேத்து தனக்கு பின் இவரே உபய வேதாந்த பிரவத்தகராக நியமித்தார்.  ஒரு நாள

உபகாரம்

 உபகாரம் தினமும் நாம் உபயோகிக்கும் வார்த்தை ‘உபகாரம்’ ; உதவி என்று சொல்லலாம், ஆங்கிலத்தில் ‘help'. நீங்கச் செய்தது பெரிய உபகாரம் என்றால் உடனே ’ஏதோ என்னாலான உபகாரம் செய்தேன் என்று அடக்கத்துடன் பதில் சொல்லுவார்கள். கோயிலுக்குச் செல்லும்போது அங்கே அர்ச்சகர் ‘உபகாரம் ஏதாவது இருக்கா ?” என்று கேட்டால் பெருமாளுக்குப் புஷ்பம், பழம் என்று ஏதாவது வாங்கி வந்திருக்கிறீர்களா என்று அர்த்தம். தளிகை என்றால் சமையல் என்பது போல இது ஸ்ரீ வைஷ்ணவ பாஷை. பெருமாளுக்கு நாம் என்ன உபகாரம் செய்ய முடியும் ? பெருமாளுக்கே உபகாரமா ? என்று எனக்குத் தோன்றும். இன்று இந்தச் சொல்லுக்கு அர்த்தம் இன்று கிடைத்தது. முன்பு ஒரு காலத்தில், சனிக்கிழமை அம்மா எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வரும்போது குழந்தைகள் வேண்டாம் என்று ஓடிக் குளிக்க அடம் பிடிக்கும். காரணம் சீயக்காய் என்றாலே பல குழந்தைகளுக்கு அலர்ஜி. அந்தக் குழந்தையே ஒரு சனிக்கிழமை சமத்தாக உட்கார்ந்துகொண்டு ‘அம்மா எண்ணெய்த் தேய்த்துவிடு’ என்று சொன்னால் உடனே அந்தத் தாய் குளிர்ந்து ‘சமத்து... என்ன உபகாரம் நீ இன்றைக்குச் செய்தாய்’ என்று சந்தோசப்படுவாள். பெருமாள் எண்ணெய்க்

தினமும் கொஞ்சம் தேசிகன் - 12

 தினமும் கொஞ்சம் தேசிகன் - 12 இந்த லாக்டவுனுக்கு முன்( அதாவது போன வருடக் கடைசியில்) ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். திருவரங்கத்தில் பழைய பரமபதம் படம் கிடைக்குமா என்று தேடினேன். கிடைக்கவில்லை.  சிறுவயதில் அப்பா எனக்கு வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் சேவித்துவிட்டு வரும் வழியில் இந்தப் படம் மற்றும் தாயக்கட்டை வாங்கித் தருவார். அப்போது எல்லாம் சிகப்பு, கருப்பு அல்லது நீல நிறத்தில் இருக்கும்.  டிவி மொபைல்  தாக்கம் அதிகம் இல்லாத அந்தக் காலத்தில் இதை விளையாட முடிந்தது. இப்போது எவ்வளவு பேருக்குப் பொறுமை இருக்கும் என்று தெரியாது. முதலில் தாயம் போட்டு ஆரம்பித்து, பிறகு ஏணிமேல் ஏறி, பாம்பின் வால் வழியாக இறங்கி ஏணியில் ஏறி, கடைசியில் தாயமாகப் போட்டுப் போட்டு சொர்க்கம் செல்ல வேண்டும். சில சமயம் விளையாட்டு முடியாமல், அடுத்த நாளுக்கும் டெஸ்ட் மேட்ச் போலத் தொடரும். ரெங்க விலாஸ் கடைகளில் கலர் பரமபதம் லேமினேட் செய்து விற்பனை செய்கிறார்கள். தற்போது வந்திருக்கும் படம் நான் சிறிய வயதில் பார்த்த படம் இல்லை. எல்லாம் மாறிவிட்டது, ஏணிகள் இடம் மாறிவிட்டது, பாம்புகள் சிரிக்கின்றன.  பரமபத விளையாட்டு எல்லோருக்கும் புரிய

9. இராமானுசன் அடிப் பூமன்னவே - பன்னீராயிரம்

9. இராமானுசன் அடிப் பூமன்னவே - பன்னீராயிரம் காலைக் கதிரவன் புறப்படும் சமயத்தை  அருணோதயம் என்பார்கள்.பிறகு சூரியோதயமாகி எங்கும் வெளிச்சம் பரவுகிறது. சில சமயம் இருண்ட மேகங்கள் அந்த வெளிச்சத்தை மறைக்க. பலமான காற்று வீசத்தொடங்கியவுடன் அம்மேகங்கள் விலகிச் செல்ல மீண்டும் வெளிச்சம் நமக்குக் கிடைக்கிறது. ஆழ்வார்கள் காலத்துக்கு முன் அருணோதயமாக இருந்த இப்பூவுலகம், அவர்கள் அவதரித்தபின் சூரியோதயமாக விளங்கியது. சூரியனை மேகங்கள் மறைப்பது போல ஆழ்வார்கள் காலத்துக்கு அவர்கள் அருளிச்செயல்கள் சில காலம் மறைந்து இருந்தது.  நாதமுனிகள் ’கண்ணி நுண் சிறுத்தாம்பு’  என்ற பிரபந்தத்தை ஏகசந்தையாக(1) பன்னீராயிரம் முறை இசைத்தபோது அவை பன்னிரண்டு துவாதச நாமங்களாக உருவெடுத்து, பலமான காற்றாக  உருவெடுத்து  மறைத்த மேகங்களை விலக்கி, திருபள்ளியெழுச்சியாக ஒலித்து, ஞான சூரியனான அரங்கனை எழுப்பிப் பக்தி ஒளியை பரவச்செய்தது. இந்த ஒளி நூறு குளிக்கு நிற்குமா போலே இருந்தது(6) பெருமாளின் எண்ணற்ற திருநாமங்களை ஆயிரம் திருநாமங்களாகப் பீஷ்மர் விஷ்ணு சகஸ்ர நாமமாக ஜபித்தார். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரண்டு திருநாமங்கள்(7) முக்கியமாகக்

பாரதக் கோவில் !

 பாரதக் கோவில் ! நான் பள்ளியில் படிக்கும்போதுதான் எனக்கு அயோத்தி ஸ்ரீராமர் கோயில் அறிமுகம். என் தந்தையின் நண்பர் ஒரு பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். அவர் அச்சகத்தில் எழுத்துக்களைக் கோத்து வார்த்தையாக்குவதைப் பார்த்திருக்கிறேன். பத்திரிகையில் கிழித்த சிவகாமியின் சபதம் போன்ற கதைகளை பைண்ட் செய்து தருவார். புத்தகம் எப்படி பைண்ட் செய்ய வேண்டும் என்று எனக்குக் கற்றும் கொடுத்தார். பார்க்க மிக ஒல்லியாக ஊசிபோல இருப்பார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இருந்தார்.  அவர் என் இல்லத்துக்கு வரும்போது ‘ராம ஜன்ம பூமி’ பற்றிய பேச்சு ஆரம்பித்துவிடும். என் தந்தை அவரிடம் ‘உனக்கு வீடு மனைவி மக்கள் எல்லாம் இருக்கிறார்கள். போராட்டம் என்று நீ சென்று உனக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களின் நிலைமை என்னாவது?’ என்று அறிவுரை கூறுவார். அவர் தன் சொந்த நிலத்தை யாரோ ஆக்கிரமித்துவிட்டது போலச் சத்தமாகப் பேசுவார்.  ஒருமுறை என் இல்லத்துக்கு வந்து ‘ராமர் கோயில் கட்ட அயோத்திக்குக் கற்கள் அனுப்புகிறோம்’ என்று ரசீதுப் புத்தகத்துடன் வந்து பணம் வாங்கிக்கொண்டு சென்றார். பிறகு அவரை சிலகாலம் காணவில்லை. பிரிண்ட்டிங் பிரஸும் மூடியிருந்