ஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் என்று 2019ல்அடியேன் எழுதிய சிறு புத்தகம் இப்போது கிண்டிலில் கிடைக்கிறது.
இந்தப் புத்தகம் என் மனதுக்கு உகந்தது.
புத்தகம் வெளிவந்தபோது, அடியேனின் ஆசாரியனான ஸ்ரீ அஹோபில மடத்தின் 46ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கரின் திருக்கரங்களிலும் மேலும், ஸ்ரீமத் பரமஹம்ஸ திருப்பதி சின்ன ஜீயர், மற்றும் பெரிய ஜீயர் திருக்கரங்களிலும் தவழ்ந்ததை என் பாக்கியமாகக் கருதுகிறேன்.
ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்றபோது, தாயார் சன்னதியில் அர்ச்சகர் ‘நீர் தான் ஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் கட்டுரை எழுதியவரா ?’ என்று அடியேனை அந்தக் கூட்டத்திலும் அடையாளம் கண்டுகொண்டு, ‘உள்ளே வாரும்’ என்று என்னை அழைத்துத் தாயார் கையில் இருந்த தாமரைப் பூவையும், மஞ்சள் காப்பு உருண்டையும் பிரசாதமாகக் கொடுத்து. நன்றாகச் ‘சேவியும்’ சேவை செய்து வைத்தார்.
பிறகு நம்பெருமாள் திருவடியிலும், உறையூர் நாச்சியார் திருவடியிலும் இந்தப் புத்தகம் தவழ்ந்தது.
இந்தப் புத்தகத்தைப் படித்த மதுரை பேராசிரியர் ஸ்ரீ உ.வே அரங்கராஜன் ஸ்வாமிகள், அடியேனைத் தொலைப்பேசியில் அழைத்துப் புத்தகத்தை வெகுவாகப் புகழ்ந்து, இந்தக் காலத்துக்கு இது மாதிரி தான் எழுத வேண்டும் என்று பாராட்டினார்.
திருவரங்கம் ஸ்ரீஉடையவர் படம் தான் புத்தகத்தின் ஆட்டை படம். என் ஆப்த நண்பர் ஸ்ரீ எதிராஜன் எடுத்த ’அப்டான’ படம். பல வருடங்கள் முன் இந்தப் படத்தை அவர் எடுத்த போது, கவரப்பட்டு, என்றாவது ஏதாவது புத்தகம் எழுதினால் இந்தப் படம் எனக்கு வேண்டும் என்று ரிசர்வ் செய்து வைத்தேன். பல வருடங்கள் கழித்து இந்தப் புத்தகத்தின் ’கவர்’ படமாக அலங்கரித்துள்ளது. அவருக்கு என் நன்றிகள்.
இந்தப் புத்தகத்துக்குப் பின்னால் பலரின் உழைப்பு இருக்கிறது அவர்களுக்கும் என் நன்றிகள்.
- சுஜாதா தேசிகன்
25-09-2020
புத்தகம் வாங்க இங்கே : https://www.amazon.in/dp/B08F2CJD32
இந்த புத்தகம் எங்கே கிடைக்கும் ஸ்வாமி அடியேன் ஆதிநாதன் ராமானுஜ தாஸன்... 👣🙇🙏
ReplyDeletehttps://www.amazon.in/Sri-Ramanujarudan-Naal-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/dp/B084YS98H2/ref=tmm_pap_swatch_0?_encoding=UTF8&qid=&sr=
Deleteஇங்கே ஆடர் செய்துகொள்ளலாம்.